அள்ளித்தரும் அட்சயதிரிதியை
நன்மையையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் நாள் அட்சய திரிதியை. காசியில் அன்னபூரணி பரமேசுவரருக்கே அன்னம் பாலித்த நாள். இன்று அன்னம் போன்ற வெண்மைப் பொருட்களை வாங்குவதை விட வெண்மை நிற உணவுகளை இறைவனுக்குப் படைத்து இல்லாதோருக்கு வழங்கினால் அன்னபூரணியின் அருளும் விசுவநாதரின் அருளும் பெருகும். உப்பு, அரிசி போன்றவை செல்வச் செழிப்பின் அடையாளங்கள். அவற்றோடு இங்கே கூறப்பட்டுள்ள வெண்மை நிற உணவுகளைச் செய்து இறைவனுக்குப் படைத்துத் தானமும் செய்யலாம், நாமும் உண்டு மகிழலாம். அள்ள அள்ளக் குறையாமல் நம் அனைவரின் இல்லங்களிலும் உணவு மட்டுமல்ல, உள்ளங்களிலும் பகிர்ந்து உண்ணும் இன்பமும் மகிழ்ச்சியும் பெருகட்டும். நன்மையும் செல்வமும் என்றும் பொலியட்டும். ஆயுளும் ஆரோக்கியமும் நிலைக்கட்டும்.
