எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கவிதாயினி முபின் சாதிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதாயினி முபின் சாதிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஜனவரி, 2024

பண்பாட்டு முரண்கள் - முபீன் சாதிகா

துருக்கியசமூகம், தமிழ்ச்சமூகம் பற்றி முபீன் சாதிகா 



 

முபீன் சாதிகா. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமை. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள் என இவரின் தமிழ்ப்பணி அளப்பரியது. தொடர்ந்து செயல்பட்டு இலக்கியத்தின் பல்வேறு பரிணாமங்களையும் இளம்தலைமுறையினர் அறிந்து பயன்படும்வண்ணம் எளிமையாக்கித் தருபவர்.  

 

கோவை மாவட்டத்தில் பிறந்தவர். அம்மா இல்லத்தரசி. அப்பா மருந்தாளுநராக, தமிழக அரசில் வேலை பார்த்தவர். அண்ணன் நிஜந்தன். ஊடகவியலாளர்.

 

கோவை மாவட்டத்தில் சிறுவயதில் மருத்துவத்துறையினருக்கான குடியிருப்பில் வளர்ந்தவர். அப்போது அங்கு அடர்த்தியான மரங்களும் பூங்காக்களும் இருந்தன. அவற்றில் இருந்த செடிகளின் பெயர்களை மனப்பாடமாக அறிந்திருந்தவர். மரங்களுடன் பேசுவது மிகவும் பிடித்த பொழுது போக்காக இருந்தது. கோழிகள், பூனைகள் எல்லாவற்றுடனும் நல்ல நட்பைப் பேணி வந்தார். (இது குழந்தை மனோபாவத்துடன் இவரின் நூறு புராணங்களின் வாசல் தொகுப்பில் வெளிப்படும்.)  நான்காம் வகுப்புப் படிக்கும் போது அப்பாவின் வேலை மாற்றல் காரணமாகச் சென்னை வந்தவர்.

புதன், 8 பிப்ரவரி, 2023

பளிச் பெண்கள் – 1, நூறு புராணங்களின் வாசலைப் படைத்த முபின் சாதிகா

 

பளிச் பெண்கள் – 1


நூறு புராணங்களின் வாசலைப் படைத்த முபின் சாதிகா


சர்வதேச புத்தகத் திருவிழா ஆரம்பமாகப் போகிறது என்பதால் மிகச் சிறந்த ஒரு இலக்கிய ஆளுமையினை நம் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின் கிரிஜா மேம் பளிச் பெண்கள் தொடர் எழுதக் கூப்பிட்டதில் மகிழ்ச்சி. ஏனெனில் என் முதல் படைப்புகளும் முதல் நூலும் லேடீஸ் ஸ்பெஷலாலேயே வந்தவை. மற்றும் ஸ்பெஷல் லேடி அவார்டும், ஸ்ரீ சக்தி அவார்டும் கொடுத்து சிறப்புச் செய்தவர்கள் கிரிஜாமேம். வீட்டில் இருந்தபடியே என் எழுத்துப்பணியை ஆற்ற (செகண்ட் இன்னிங்ஸ்) மறுபடியும் ஊக்கம் கொடுத்த அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த நன்றிகள்.


செவ்வாய், 14 மே, 2019

கவிதாயினியின் பார்வையில் என் இரு கவிதைகள்.


முபின் ஸாதிகா.. இவங்க எழுதுற கவிதைகளைப் படிச்சா என் மூளை ஸ்தம்பிச்சிடும். நவீன கவிதைகளில் இவங்களை விஞ்ச ஆளே கிடையாது. இவங்க பூக்கோ, மதிப்பீடு எல்லா எழுதுறதப் படிச்சா நாம் எழுதுறதெல்லாம் கவிதையான்னு திகைப்பு வந்திடும்.
இவங்க ஒரு விமர்சனம் எழுதி அனுப்பி இருந்தாங்க. என் இரண்டு கவிதைகளைப் படிச்சிட்டு. அதையே ரெண்டு தரம் படிச்சேன்னா பார்த்துக்கோங்க. நன்றி ஸாதிகா மேம்.

ஒட்டுக் கேட்கும் யந்திரம்..

வெள்ளி, 1 ஜூன், 2018

இன்னும் இருபத்தி ஐந்து.


1.எங்கு படித்தீர்கள்? எது சொந்த ஊர்?

ப்ரிகேஜி எல்கேஜி யூகேஜி காரைக்குடியில் உள்ள அழகப்பா மாண்டிசோரியில் படித்தேன். முதலாம் இரண்டாம் வகுப்புகளை ராஜமன்னார்குடியில் உள்ள செயிண்ட் ஜோசப் கான்வெண்டில் படித்தேன். அதன் பின் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை ராஜமன்னார்குடியில் கணபதி விலாஸில் படித்தேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து ப்ளஸ்டூவரை செயிண்ட் ஜோசப் ( தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ) படித்தேன். மதுரை ஃபாத்திமா கல்லூரியில் இளங்கலை வேதியல் படித்தேன். எனது சொந்த ஊர் காரைக்குடி. 

2.இளமையில் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் இருந்ததா

இளமையில் புத்தகம் படிக்கும் பேராவலால் தூண்டப்பட்டிருந்தேன். தினமணிக்கதிரில் வெளிவந்த என் பெயர் கமலாதாஸை நான் விரும்பிப் படிக்கும்போது நான் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அதன் பின் பைண்டட் புத்தகங்களாக வாஷிங்டனில் திருமணம் ( சாவி ) இவள் அல்லவோ பெண் ( மணியன் ) ஆகியோரது கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். இந்துமதி, சிவசங்கரி, அனுராதா ரமணன், பாலகுமாரன், சுஜாதா ஆகிய வெகுஜன எழுத்தாளர்கள் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். ஜெயகாந்தனை படித்துவிட்டு இவர் ரொம்ப மண்டைக்கனம் பிடித்த ஆள் என நினைத்திருக்கிறேன்.


3.நவீன கவிதைகளை எப்போது படித்தீர்கள்

கல்லூரிப்பருவத்தில் படித்தேன். பெரும்பாலும் மு மேத்தா, வைரமுத்து, அப்துல் ரஹ்மான் ஆகியோரது கவிதைகளைப் படித்திருக்கிறேன். கலாப்ரியா, வண்ணதாசன், ந பிச்சமூர்த்தி, ஆத்மாநாம், பிரமீள், நீல பத்மனாபன், கண்ணதாசன் ஆகியோரது கவிதைகளை வாசித்திருக்கிறேன். ”தற்காலத்தில் பெண்களின் நிலைமை “ என்ற தலைப்பில் எனது தமிழ் ஆசிரியை ( அசடனையும் குற்றமும் தண்டனையையும் மொழிபெயர்த்து முப்பெரும் விருது வாங்கியவர் ) எம் ஏ சுசீலா அவர்கள் ஆராய்ச்சி செய்து வந்தார்கள். அதற்காக வாங்கிய புத்தகங்களை எங்களுக்கு வாசிக்கக் கொடுப்பார்கள். அப்படிப் படித்ததுதான் இந்த நூல்கள்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.


”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்

76.ஆண்-பெண் என்ற பிளவு உளவியல் ரீதியானதா சமூகவியல் ரீதியானதா?

உடலியல் ரீதியானதும் கூட. அது சமூக ரீதியாகப் பரிணமிக்கிறது. உள்ளத்தால் இருவருமே டாமினட் ஆகத்தான் நினைத்துக் கொள்கிறார்கள். சீரற்ற முறையில் சமூகம் ஏற்றி வைத்ததை இன்று அது நம் மீது சாற்ற நாம் அனுபவிக்கிறோம்.

77.ஆண்மைக்குரியது பெண்மைக்குரியது என்பது இயல்பானதா வலிந்து உருவாக்கப்பட்டதா?

உடலியல் கூறுகள் பொறுத்து உருவாக்கப்பட்டது. (தினம் வெளியே சென்று பேருந்தைப் பிடித்தோ, ஆட்டோவிலோ அல்லது அலைந்தோ வேலைக்குச் சென்று வருவதை என் உடல்கூறு தாங்குவதில்லை. ) அதே போல் கவிதையிலும் அப்படித்தான். முரட்டுப் பாய்ச்சலாய் எழுதும் பெண்களையும் மெல்லிய உணர்வோடு கவிதை புனையும் ஆண்களையும் தரிசிப்பதால் இது இருபாலாருக்கும் பொதுவானதுதான்.

78.இந்தப் பிளவை எப்படிப் புரிந்துகொள்ளமுடியும்?

ஆணைப் போல உடல் & மன வலிமை உள்ள பெண்கள் இருக்கிறார்கள். அதே போல் பெண்ணைப் போல மெலிந்த இதயம் படைத்த ஆண்கள் இருக்கிறார்கள். இது அவரவர் எதிர்கொள்ள வேண்டியது.

79.இதிலிருந்துதான் ஆண் மேலாதிக்கம் உருவானதா?

முன்பு இருக்கலாம். ஆண் மேலாதிக்கம் என்ற ஒன்றே இப்போது இல்லை. வீடுகளில் விட்டுக்கொடுத்து வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே. அப்படியானால் இப்போது பெண்கள் நடந்துகொள்வதும் எழுதுவதும் பெண் மேலாதிக்கம் என்று கொள்ளலாமா.

80.பெண்ணியம் ஆண்களையும் உள்ளடக்கியதுதானே?

பெண்ணியம் என்பது தனது சுதந்திரத்தையும் சுயநலத்தையும் மட்டும் பேணுவதல்ல. அதில் அடுத்த மனிதருக்கான கருணை இருந்தால் அது ஆண்களையும் உள்ளடக்கியதுதான்.

வியாழன், 19 ஏப்ரல், 2018

தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம் . 51 - 75 கேள்விகளும் பதில்களும்.


”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்

51.அத்தகைய எழுத்துத் தான் எப்போதும் வாசகர்களுக்குத் தேவையா?

ஆம். அவைதான் அவர்களுக்கு யதார்த்தத்தை உணர்த்துகின்றன. ஆனால் அவை நீதிநெறி விளக்கமாக இருக்க வேண்டாம்.

52.வாசகர்களின் தரம் உயர்ந்திருக்கிறதா?

நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் அதிகமாகப் புது வாசகர்கள் உருவாகவில்லை. ஆழ்ந்த எழுத்தை வாசிக்கும் இளையர்கள் சிலர் நம்பிக்கை தருகிறார்கள்.

53.வாசகர்களின் தரத்தை உயர்த்துவது எழுத்தாளர்களின் வேலையா?

நல்லபடைப்புகளைக் கொடுப்பது மட்டும்தான் எழுத்தாளர்களின் வேலை. அதைப் பகுத்துப் படித்துக் கொள்வது வாசகர்களின் தேவையின் பொருட்டு நடக்கிறது.

54.எழுத்தாளர்களும் வாசகர்களா?

அதிலென்ன சந்தேகம் J

55.எழுத்தாளர்களின் தரத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும்?

நிறைய வாசிப்பு, நிறைய கவனிப்பு, நிறைய அவதானிப்பு ,நிறைய நிதானிப்பு வேண்டும்.

புதன், 18 ஏப்ரல், 2018

தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம் 26 - 50 கேள்விகளும் பதில்களும்.


”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்


26.உங்கள் வாசிப்பு அனுபவம் எழுதுவதற்குத் துணைபுரிகிறதா?

நிச்சயமாக. அதிகம் வாசிக்காத பொழுதுகளில் நான் வெறும் குடுவை போல காலியாக உணர்ந்திருக்கிறேன். வாசிக்கும்போது எழுத்து என் எழுதுகோலிலிருந்து தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

27.பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வு பொதுவாகப் பெண்களிடம் அதிகரித்திருக்கிறதா?

பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வாக அது இல்லாமல் தவறான புரிதல்களாக அவை அதிகரித்திருக்கின்றன. உடை அணியும் சுதந்திரம், பாலியல் பற்றி சுதந்திரமாக எழுதுவது இவற்றை விடுங்கள். கல்வி வேலைவாய்ப்பு, கருத்து சுதந்திரம் இருந்தாலும் தனது தனிப்பட்ட சுதந்திரம் என்பதைப் பெரியவர்களையும் கணவனையும் மதிக்காமல் இருப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அன்று ஆண்  மற்றும் சமூகம் செய்ததைத் திருப்பி அவர்களுக்குச் செய்வது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக தங்கல் படத்தைச் சொல்லலாம். தன் பெண் விளையாட்டு வீராங்கனையாக அண்ணன் பையனை அமீர்கான் கோழி சமைக்கச் சொல்வது. அவர் பெண் உயர்வு என்பதால் அண்ணன் பையன் எங்கே தாழ்வாகப் போனான். அவன் எந்தப் பெண்களையும் எந்த விதத்திலும் இழிவு படுத்தாத போது அவனை ஏன் இழிவுபடுத்தவேண்டும். 

28.பெண்ணுக்குக் குடும்பம்தான் இன்னும் பாதுகாப்பான அமைப்பா?

அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட முடிவைச் சார்ந்தது. என்னைப் பொறுத்தவரை திருமணமாகிவிட்டதால் அது எனக்குப் பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது. டார்ம் மற்றும் பிஜிக்களும் கூட பாதுகாப்பான அமைப்புகள்தான். அது அவரவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் பொறுத்தது. 

29.பெண்தான் குடும்பத்தை உருவாக்குபவளாக இருக்கிறாளா?

இப்போது ஆணும் குடும்பத்தை உருவாக்குபவனாக ஆகி வருகிறான். நிறையப் பொறுப்புகளை ஆண்களும் தங்கள் தோளில் சுமக்கிறார்கள்.

திங்கள், 16 ஏப்ரல், 2018

தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 1 - 25 கேள்விகளும் பதில்களும்



”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்

1.உங்கள் இளம் வயது அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள்?

ப:- இளம்வயதில் வாழ்த்துப்பாக்கள் எழுதுவதைக் கவிதை என எண்ணி இருக்கிறேன். கல்லூரிக்கு வந்தபின் கவியரங்கங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அடுக்குமொழிக் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.

2. எப்போதும் விருப்பமாக படிக்கும் நூல்கள் எவை? என்ன காரணம்?

கவிதைகளில் ( முன்பு படித்தது ) ந. பிச்சமூர்த்தி, நீல பத்மனாபன், ஆத்மாநாம், ஆழியாள், அனார் , தாமரை, அப்துல் ரஹ்மான், வண்ணதாசன், ஈழவாணி, ரிஷான் ஷெரீஃப், நேசமித்திரன், நதனிகா ராய் கவிதைகள். ஔவை, ஆண்டாள் ஆகியோரையும் பிடிக்கும். புனைவுகளில் பஷீர், மீரான், கல்கி, ப. சிங்காரம், சுசீலா தேஷ்பாண்டே, எம் ஏ சுசீலா, திலகவதி, ஸ்டெல்லா புரூஸ் பிடிக்கும்.

3.கவிதை எழுதத் தூண்டிய அனுபவம் எது?

முதன் முதலில் கவிதை எழுதத் தூண்டியது வாசிப்பனுபவம்தான். கல்லூரிக்கு வந்தபின் கவிதை நூல்கள் வாசித்ததும் எழுதத் தோன்றியது. பதின்பருவக் கிளர்ச்சி எழுதுவதை எல்லாம் கவிதை என எண்ணத் தூண்டியது.

4. எழுதுவதில் திருப்தி இருக்கிறதா?

நிச்சயமாக. எழுத்து என்னைப் புதுப்பிக்கிறது. எழுதும் கணம் தோறும் நான் புதிதாய்ப் பிறக்கிறேன்.

5.யாருடைய எழுத்துகள் பிடிக்கும்?ஏன்?

பஷீரின் எழுத்துக்கள்தான். பரந்து விரிந்த அனுபவமும் ஹாஸ்யமும் ஒருங்கே கொண்டவை. வண்ணதாசனின் கவிதைகளும்.

6. வாழ்க்கை அனுபவம் எழுத்தை உருவாக்குகிறதா?எப்படி?

வாழ்க்கை அனுபவம்தான் அநேகமாக எழுத்தாகிறது. சில சமயம் பிறர் எதிர்கொள்ளும் அனுபவங்களும் நம்முள் புகுந்து எழுத்தாகின்றன. திருமணத்துக்கு முன் காதலைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். திருமணமான பின் பல்லாண்டுகள் கழித்து என் வாழ்வியல் அனுபவங்களைக் கவிதையாக்கினேன்.

/// ஃபீனிக்ஸ்

கூட்டுப் புழுவைப்போல் கூண்டுக்குள் இருந்தேன்,
கூட்டை உடைத்த போது தெரிந்தது நான்
வண்ணத்துப் பூச்சிதானென்று. ...!!!!

அன்னத்தைப் போல் இல்லையே என வருந்தினேன்,
என் குரல் வெளிப்பட்ட போது தெரிந்தது நான்
குயில் தானென்று.....!!!

சாம்பலாகி விட்டோமென்று நினைத்தேன்,
உயிர்த்தெழுந்த போது தெரிந்தது நான்
ஒரு பீனிக்ஸ் பறவையென்று....!!!

புலங்கள் பெயரும் பறவை என இருந்தேன்....
கண்டம் விட்டுக் கண்டம் சென்று
கணங்கள் தோறும் அனுபவங்கள் சேகரித்தேன்....!!!!

விழித்துக் கொண்ட போது தெரிந்தது,
நான் வாழ நினைத்ததை விட
அற்புதமாய் வாழ்ந்து இருக்கிறேனென்று....!!!!!///