1.எங்கு படித்தீர்கள்? எது
சொந்த
ஊர்?
ப்ரிகேஜி எல்கேஜி யூகேஜி
காரைக்குடியில் உள்ள அழகப்பா மாண்டிசோரியில் படித்தேன். முதலாம் இரண்டாம்
வகுப்புகளை ராஜமன்னார்குடியில் உள்ள செயிண்ட் ஜோசப் கான்வெண்டில் படித்தேன். அதன்
பின் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை ராஜமன்னார்குடியில் கணபதி
விலாஸில் படித்தேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து ப்ளஸ்டூவரை செயிண்ட் ஜோசப் ( தூய
வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ) படித்தேன். மதுரை ஃபாத்திமா கல்லூரியில்
இளங்கலை வேதியல் படித்தேன். எனது சொந்த ஊர் காரைக்குடி.
2.இளமையில் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம்
இருந்ததா
இளமையில் புத்தகம் படிக்கும்
பேராவலால் தூண்டப்பட்டிருந்தேன். தினமணிக்கதிரில் வெளிவந்த என் பெயர் கமலாதாஸை
நான் விரும்பிப் படிக்கும்போது நான் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன்.
அதன் பின் பைண்டட் புத்தகங்களாக வாஷிங்டனில் திருமணம் ( சாவி ) இவள் அல்லவோ பெண்
( மணியன் ) ஆகியோரது கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். இந்துமதி, சிவசங்கரி,
அனுராதா ரமணன், பாலகுமாரன், சுஜாதா ஆகிய வெகுஜன எழுத்தாளர்கள் என்னைக்
கவர்ந்திருக்கிறார்கள். ஜெயகாந்தனை படித்துவிட்டு இவர் ரொம்ப மண்டைக்கனம் பிடித்த
ஆள் என நினைத்திருக்கிறேன்.
3.நவீன கவிதைகளை எப்போது படித்தீர்கள்
கல்லூரிப்பருவத்தில் படித்தேன்.
பெரும்பாலும் மு மேத்தா, வைரமுத்து, அப்துல் ரஹ்மான் ஆகியோரது கவிதைகளைப்
படித்திருக்கிறேன். கலாப்ரியா, வண்ணதாசன், ந பிச்சமூர்த்தி, ஆத்மாநாம், பிரமீள்,
நீல பத்மனாபன், கண்ணதாசன் ஆகியோரது கவிதைகளை வாசித்திருக்கிறேன். ”தற்காலத்தில்
பெண்களின் நிலைமை “ என்ற தலைப்பில் எனது தமிழ் ஆசிரியை ( அசடனையும் குற்றமும்
தண்டனையையும் மொழிபெயர்த்து முப்பெரும் விருது வாங்கியவர் ) எம் ஏ சுசீலா அவர்கள்
ஆராய்ச்சி செய்து வந்தார்கள். அதற்காக வாங்கிய புத்தகங்களை எங்களுக்கு வாசிக்கக்
கொடுப்பார்கள். அப்படிப் படித்ததுதான் இந்த நூல்கள்.