எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ப்ரதிலிபியின் கொண்டாடப்படாத காதல்கள் போட்டி.

ப்ரதிலிபியின் கொண்டாடப்படாத காதல்கள் என்ற போட்டிக்குக் கவிதை/ கதை/கட்டுரை அனுப்பி பரிசை வெல்லுங்க . வாழ்த்துகள் மக்காஸ். 
///////காதல் என்ற மாத்திரத்தில் சிந்தனைக்கு வரும் எதையும் (கதை, கவிதை, கட்டுரை என) எழுதலாம். முக்கியமாக அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத காதல்கள் குறித்து ஆரோக்கியமான பார்வைகள் வரவேற்கப்படுகின்றன. சாதி மதங்களை கடந்த, எல்லைகளை கடந்த, நிற வேற்றுமைகளை கடந்த காதல்கள், தன்பால் காதல்கள், பெற்றோர், நண்பர்கள், விலங்குகளின் மீதான காதல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். காதலின் மீது புதிய கோணங்களை புகுத்தும் எழுத்துக்களை வரவேற்கிறோம்.







  • போட்டி தொடர்பான எல்லா தகவல்களும் இந்த சுட்டியில் இடம்பெறும் – www.pratilipi.com/event/kk
  • அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி - tamil@pratilipi.com. மின்னஞ்சலின் தலைப்பு - "கொண்டாடப்படாத காதல்கள்" என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்கு பொருத்தமான ஒரு அட்டைப் படமும் அனுப்பிவைத்தால் நலம்.
  • ஒருவர் அதிகபட்சமாக இரண்டு விதமான வடிவங்களில் படைப்புகளை அனுப்பலாம். (எ.கா. கதை & கவிதை அல்லது கவிதை & கட்டுரை etc.)
  • படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்து தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.
  • படைப்புகளை MS WORD இல் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode font) மட்டுமே அனுப்பவும். தமிழில் தட்டச்சு செய்ய http://www.google.co.in/ inputtools/windows/ எனும் லிங்கில் சென்று google transliteration-ஐ உங்களது கணினியில் தரவிறக்கம் செய்து தமிழை ஆங்கிலத்தில் டைப் செய்தாலே தமிழில் காண்பிக்கும் (எ.கா ‘kavithai’ என டைப் செய்தால் கவிதை என கீழே காண்பிக்கும்). அல்லது லதா போன்ற எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பலாம்.
  • படைப்பு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள், எங்களுக்கு கிடைத்ததை உறுதிப்படுத்த உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்புவோம்.
  • பரிசுத்தொகை – முதல் பரிசு – 1,500 ரூ ; இரண்டாம் பரிசு – 1000 ரூ ; மூன்றாம் பரிசு – 500 ரூ.
  • வாசகர்கள் மட்டுமே வெற்றி பெரும் படைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள் (அதிக வாசகர்களால் படிக்கப்பட்டு, அதிக மதிப்பீடுகள் (Rating) பெரும் படைப்புகள்)
  • படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 14, 2016.
  • பிப்ரவரி 18 துவங்கி மார்ச் 18 வரை வாசகர்கள் படித்து, மதிப்பீடு வழங்க முடியும்.
  • வெற்றியாளர்கள் மார்ச் 21 அன்று அறிவிக்கப்படுவார்கள்.
*முடிவுகள் மற்றும் தேர்ந்தெடுக்கும் முறைகள் குறித்து ப்ரதிலிபியின் முடிவே இறுதியானது./////

4 கருத்துகள்:

  1. //ப்ரதிலிபியின் கொண்டாடப்படாத காதல்கள் போட்டி.//

    ஆஹா! காதலைப்போன்றே இனிய தகவல். :)

    கொண்டாடி மகிழ்வோம்.

    போட்டியில் பங்குகொள்ளப்போகும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி விஜிகே சார்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...