எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கொண்டாடப்படாத காதல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொண்டாடப்படாத காதல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 நவம்பர், 2016

ஸ்ட்ரோக் :-

ஸ்ட்ரோக் :-

ஸ்க்ரீன் சேவரில் வைத்திருந்த அஞ்சனாவின் கண்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஜோ. பேசும் கருவிழிகள். பேச்சற்று நிறுத்தும் விழிகள். எத்தனை மொழிகள் இருந்தென்ன மொழியற்று அமரவைக்கும் இவள் பார்வை ஒன்றே போதாதா. எதற்காக மொழிகளுக்கு ஏங்குகிறோம், அது தரும் போதைக்கும் என  நினைத்தபடி மனமில்லாமல் ஸ்க்ரீனை மேலே தள்ளியபோது மெசெஜ் ஒன்று வந்திருந்தது அவளிடமிருந்துதான்

.
மூன்று குழந்தைப் புகைப்படங்கள். அன்று க்ரீமி இன்னில் எடுத்தது. குழந்தைப் பொண்ணு. இல்லை பயபுள்ள. பதினைந்து வயதில்தான் பெரியவளானாளாம். பத்துவயது வரை ஆண் என்றே எண்ணிக் கொண்டாளாம். சிரிப்பு வந்தது அவருக்கு. அழகான தோள்பட்டைகள். அதில் நிம்மதியாகச் சாய்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தது. எப்போது என்றுதான் தெரியவில்லை.


செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ப்ரதிலிபியின் கொண்டாடப்படாத காதல்கள் போட்டி.

ப்ரதிலிபியின் கொண்டாடப்படாத காதல்கள் என்ற போட்டிக்குக் கவிதை/ கதை/கட்டுரை அனுப்பி பரிசை வெல்லுங்க . வாழ்த்துகள் மக்காஸ். 
///////காதல் என்ற மாத்திரத்தில் சிந்தனைக்கு வரும் எதையும் (கதை, கவிதை, கட்டுரை என) எழுதலாம். முக்கியமாக அதிகம் பேசப்படாத, கவனிக்கப்படாத காதல்கள் குறித்து ஆரோக்கியமான பார்வைகள் வரவேற்கப்படுகின்றன. சாதி மதங்களை கடந்த, எல்லைகளை கடந்த, நிற வேற்றுமைகளை கடந்த காதல்கள், தன்பால் காதல்கள், பெற்றோர், நண்பர்கள், விலங்குகளின் மீதான காதல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். காதலின் மீது புதிய கோணங்களை புகுத்தும் எழுத்துக்களை வரவேற்கிறோம்.







Related Posts Plugin for WordPress, Blogger...