எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

புதன், 23 மார்ச், 2011

குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.. டாக்டர் வசந்தி பாபு.
ஒரு இல்லம் இனிய இல்லமா அமையுறது பெற்றோரால்தான்.. அந்த இனிய இல்லத்தை அமைக்க பெற்றோர் குழந்தைகள் உறவு இனிமையா இருக்குறது முக்கியம்.. பெற்றோர்தான் எனவும்., பிள்ளைகள் தான் எனவும் குற்றம் சாட்டிக் கொள்வோம். அந்த உறவு என்றும் நீடிச்சு இருக்க குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது பற்றி., அவங்க பிரச்சனைகளை களைவது பற்றி ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற வெப்சைட்டையும் ., ஆர் ஏ புரத்திலும்., ராயப்பேட்டையிலும் கிளினிக்கும் நடத்திவரும் டாக்டர் திருமதி வசந்திபாபுவை சந்தித்து நம் வாசகியருக்காக ஆலோசனை தந்துதவுமாறு கேட்டோம்.
இவர் மனநல ஆலோசகராகவும்., ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற கவுன்சிலிங்க் கிளினிக்கையும் நடத்தி வருகிறார்.. சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பிரச்சனைகள் ., ட்ரான்ஸ்ஜெண்டர்களின் பிரச்சனைகள்., பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி உள்ளார்.

முதலில் எல்லா வீட்டிலும் ஒரு கூட்டுக் குடும்பமா., தாத்தா பாட்டி அரவணைப்பில் குழந்தைகள் வளர்ந்தார்கள்.. இப்போ சூழ்நிலை மாறி தனிக் குடித்தனத்தில் வேலைக்குச் செல்லும் பெற்றோருடன் பிள்ளைகள் இருப்பதால்., தனி ரூம் ., ஏசி., கம்ப்யூட்டர்., டிவி., செல்ஃபோன்., கிடைப்பதோடு வேலைக்காரர்கள் அல்லது ஆயாவோடு வளர வேண்டிய கட்டாயம்.. எனவே பிள்ளைகள் மன அழுத்தத்துக்கு ஆளாகுறாங்க..

பிறக்கும் போது அனைத்துக் குழந்தைகளும் ஒண்ணுதான்.. வலிமையானவனா இருக்குறதுக்கோ., பலவீனமானவனா மாறுவதற்கோ சூழல்தான் காரணம். சரியா இருக்குறதுக்கும் ., தடம் புரள்றதுக்கும் பெற்றோர்தான் காரணம்.. அவங்க கவனிப்பு இன்மைதான் காரணம். அதை விட்டுட்டு நான் என் பிள்ளைக்கு அதை செய்தேன் இதை செய்தேன் என நிறைய வசதிகளை பட்டியல் இடுவாங்க. இதெல்லாம் விட அவங்களுக்கு தேவை அன்பு..

இதுல இருந்து விடுபடுறதுக்கு குழந்தைகளை ஒரு காரணமா காண்பிக்காம பெற்றோர்தான் மாறணும்.. குழந்தைகளுக்கு கவுன்சிலிங்க் தேவை இல்லை.. பெற்றோருக்குத்தான் தேவை..திருமணம் முடிந்ததும் கணவன் மனைவி சம்பாதிக்கிறோம் ., பிள்ளைகளைப் பெற்று விட்டோம் . அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்துவிட்டோம் .. கார்., பங்களா., ஏசி., க்ளாஸ்களில் சேர்த்து விடுவது ஆயா. ட்ரைவர் வைப்பது என இருந்து விடுகிறார்கள்..

ஆனா குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை பார்க்கணும். சாதாரணமா ஒரு குழந்தை இன்னொரு குழந்தையிடமிருந்து மாறுபடுது. அது பக்கத்துல இருந்து அதை தட்டிக் கொடுத்து சாதிக்க வைக்கணும். சாதிச்ச குழந்தைக்கு பரிசு கொடுத்து ஊக்குவிக்கணும். தவறு செய்தா தண்டிக்காம., கண்டிக்கணும். அன்போடு விசாரித்து அதை திருப்பி பண்ணாத மாதிரி ஒரு அணுகுமுறையை கொண்டு வரணும்..

முக்கியமா பெற்றோர் குழந்தைகள் முன்னாடி சண்டை போடுதல்., திட்டுதலை தவிர்க்கணும்.. அதைத்தான் குழந்தைகள் எளிதில் கத்துக்குவாங்க..

இனி எஃபெக்டிவ் பேரண்ட்ஸா இருக்க பத்துக் கட்டளைகள்..


EFFECTIVE PARENTS.. AND POITIVE PARENTS..

1. BE A ROLE MODEL..:-
முன்னுதாரணமாக இருங்கள்.. வீட்டை நாம் சுத்தமாக வைத்தால்தான் குழந்தைகள் கற்றுக் கொள்ளும்.இப்படி செய் ., அப்படி செய் என வலியுறுத்துவதைவிட நாமே முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்..

2. ALOT TIME FOR CHILDREN. :-
குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்.. எவ்வளவு வேலை இருந்தாலும்
குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கி கூட இருந்தால் வேண்டாத பிரச்சனைகளை சின்ன வயதிலேயே கண்டுபிடித்து கிள்ளி எறிய முடியும். அது பெரிதாகி குழந்தை அவமானப் படுவதை ., வேறு பிரச்சனைகள் உருவாவதைத் தடுக்கும்.

3. LOVE THEM TO TEACH THEM TO LOVE THEM ALL:-
நிறைய அன்பு செலுத்துங்கள் . அன்பாக சொல்லுங்கள். மத்தவங்ககிட்டயும்.,
வேலை செய்பவர்கள் கிட்டயும் கூட மரியாதை கொடுத்து பேச பழகச் சொல்லுங்கள் அன்பா ., மரியாதையா பழகணும்.. எல்லாரும் நமக்கு வேணும் என்பதை குழந்தைகள் உணரணும்.

4. LEAD THEM AND DONT FORCE THEM :-
நம்முடைய ஆசைகளை., எதிர்பார்ப்புக்களை ., ஏமாற்றங்களை குழந்தைகள் கிட்ட திணிக்காதீர்கள். வழி நடத்துங்கள்.. வற்புறுத்தாதீர்கள்.. கை பிடித்து
அழைத்துச் செல்லுங்கள்.. கழுத்தை பிடித்து தள்ளுவது போல் அதைச் செய்.,
இதை படி என வற்புறுத்தாதீர்கள்.. நீ டாக்டரா வரணும். , எஞ்சினியரா
அல்லது டான்சரா வரணும் என கட்டாயப் படுத்தாதீர்கள். எதில்
அவங்களுக்கு இண்டரஸ்ட் இருக்கோ அதில் ஈடுபடுத்துங்கள். உதாரணமா நீச்சல் கத்துக்க ஆசைப்பட்டா எவ்வளவு தூரம் இருந்தாலும் நேரம் ஒதுக்கி அழைத்துச் செல்லுங்கள்.

முக்கியமா இந்தக் காலத்துல பெற்றோர் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஃபோர்ஸ் செய்வதால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகுறாங்க.. திறமைகளைக் கண்டுபிடித்து ஊக்குவியுங்கள்.. கோ கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்., ஸ்போர்ட்ஸ்., ரீடிங்., ஸ்விம்மிங்., பெயிண்டிங் என அவங்க
ஹாபீஸுக்கும் முக்கியத்துவம் கொடுங்க..

DONT COMPARE CHILDREN WITH OTHERS. அது அவங்க செல்ஃப் கான்ஃபிடன்ஸை குறைத்துவிடும். இப்படி செய்யாம தட்டிக் கொடுத்து ஊக்குவியுங்க..

5. TEACH THEM COPING TECHNIQUES:-
நமது குடும்பம் இப்படி என கற்றுக் கொடுக்க வேண்டும்.. எந்த
சூழ்நிலையிலும் வாழக் கற்றுக் கொடுக்க வேண்டும். யார் வீட்டுக்கு
சென்றாலும் அவர்கள் தருவதை உண்ண., மற்றும் தங்க பழகிக் கொள்ள
வேண்டும்.கட்டிலாக இருந்தாலும் தரையாக இருந்தாலும் செல்லும் இடத்திற்கு தகுந்தது போல் பிள்ளைகள் தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இது ஸ்கூல் ., காலேஜ் ., ஹாஸ்டலிலும் இருக்க உதவும். வெறும் பந்தாவுக்காக குடும்ப நிலைமை தெரியாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டாம்..

6. LET US STAND IN THEIR SHOES:-
குழந்தைகள் ஒரு ஏஜுக்கு வந்த பின் தோழமையோட நடத்துங்க.. அவங்க இடத்துல இருந்து பாருங்க. சிந்தியுங்க.. அவங்களா மாறுங்க. அவங்க வயதுகுத் தகுந்த மாதிரி நாம மாறி அவங்க இடத்துல இருந்து நாம அனலைஸ் பண்ணா எது கரெக்ட் எது தப்புன்னுதெரியும்.

குழந்தைகள் பட்டம் மாதிரி. அவர்களை பறக்க விடணும்.. ஆனா கண்ட்ரோல் நம்ம கையில் இருக்கணும். இழுத்துப் பிடிச்சாலோ ., அதிகமா விட்டாலோ ஒண்ணு பட்டம் அறுந்துடும் அல்லது பறந்திடும்.. எனவே சுதந்திரம் கொடுப்பதிலும் ., கண்டிப்பதிலும் கூட அளவோடு இருக்கணும்.

7. TEACH THEM GOOD HABBITS.:-
நல்ல ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை கைக் கொள்ளச் செய்யுங்க.. நகம் வெட்டுதல்., உடல் பராமரிப்பு., பர்சனல் ஹைஜீன் முக்கியம். ஜங்க் ஃபுட்
வாங்கிக் கொடுக்காதீங்க., அவங்களுக்கு விருப்பமான உணவை விருப்பமான
வடிவத்தில் சுவையா செய்து கொடுங்க. அன்போடு பரிமாறுங்க.. கூடுமானவரை இரவு உணவு சேர்ந்து சாப்பிடணும். அல்லது சனி ஞாயிறு அன்றாவது ஒன்றாக அமர்ந்து சாப்பிடணும். அந்த சமயங்களில் நல்ல விஷயங்களை பேசலாம் ., தெரிந்து கொள்ளலாம்.

8. TEACH THEM TIME MANAGEMENT.:-
எந்த சமயத்தில் எந்த வேலையை செய்யணும்னு கத்துக் கொடுக்கணும்.
எக்ஸ்போஷர் அதிகமா உள்ள இடத்தில் டி வி., கம்ப்யூட்டரை வைங்க.. அதுக்கும் இந்த நேரம் வரைதான் பார்க்கணும்னு நேரம் வைங்க.. தனி பெட்ரூமில் வைக்க வேண்டாம். போன் ஹாலில் பேசும் இடத்திலேயே வைக்கலாம். செல்போனில் மெசெஜ் அனுப்புவது., பேசுவது எல்லாம் நேரம் காலம் முக்கியம் என கட்டுப்பாடு வைக்கணும்.

9. UNCONDITIONAL LOVE.:-
வரைமுறையில்லாத அன்பு கொடுக்கணும். அன்பை விட நல்ல மருந்து கிடையாது.. எந்தப் பிரச்சனயிலும் அன்பை விட நல்ல மாற்று கிடையாது. தவறை அன்பா கண்டிங்க.. ஆனா தண்டிக்காதீங்க.. கூப்பிட்டு பேசுங்க.. சொல்லிக் கொடுங்க.. நல்லது கெட்டது எல்லாம்.. ஒரு வயதுக்கு மேல நண்பனா இருங்க.. ஆலோசனை சொல்லுங்க.. ஏற்றுக் கொள்வார்கள்.

10. MAKE YOUR CHILDREN'S FRIENDS AS YOUR FRIENDS :-
உங்க குழந்தைகளோட நண்பர்களை உங்கள் நண்பர்களா ஆக்கிக் கொள்ளுங்கள். அவங்க மூலம் உங்க குழந்தையின் எல்லா மூவ்மெண்ட்ஸும் தெரிஞ்சுக்கலாம். அது ஒரு இம்பார்ட்டண்ட் சீக்ரெட். நல்ல டாக்டிக்ஸ். கூப்பிட்டு விருந்து வைத்தல்., நல்ல இடங்களுக்கு நண்பர்களோட அழைத்து போதல் இன்னும் உங்களை பிள்ளைகளுக்கு நெருக்கமா உணரவைக்கும்.
ஒரு குடும்பம் இனிய இல்லமா இருக்க அதன் சாவி நம்ம கையிலதான் இருக்கு. அந்த சாவியைக் கொண்டு நம்ம இல்லத்தை இனிய இல்லமா மாத்துவோம் !!!


17 கருத்துகள்:

 1. டும்டும்...டும்டும்...
  அருமை.
  குழந்தைகளிடம் குழந்தையாக பழகவேண்டும்

  பதிலளிநீக்கு
 2. மிகவும் அவசியமான பதிவுங்க

  அனைத்து பெற்றோரும் கவனிக்க வேண்டிய விடயங்கள் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. பயனுள்ள தகவல்கள்...ஒரு நல்ல அப்பாவாக(பெற்றோராக) இருக்க நல்ல யோசனைகள்..

  பதிலளிநீக்கு
 4. நிச்சயம் ஏற்று கொள்ள வேண்டிய கருத்துகளுடன் வந்துள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 5. எல்லோரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய பதிவு இது....

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு.
  நல்ல பத்து கட்டளைகள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. Thanks first of all for the lovely post. A good message indeed. But nowadays parents are in good rapport with child I guess. My wishes.

  பதிலளிநீக்கு
 8. அருமையான கருத்துக்கள் பொதிந்த பகிர்வுக்கு நன்றி தேனம்மை.

  பதிலளிநீக்கு
 9. குழந்தைகளுக்கு கவுன்சிலிங்க் தேவை இல்லை.. பெற்றோருக்குத்தான் தேவை
  உண்மை.

  பதிலளிநீக்கு
 10. நன்றி புளியங்குடி.

  நன்றி நையாண்டி மேளம்.

  நன்றி ஹாசிம்

  நன்றி கருன்

  நன்றி ரமேஷ்

  நன்றி குமார்

  நன்றி மனோ

  நன்றி மாதவி

  நன்றி ரத்னவேல் சார்

  நன்றி ரவிக்குமார்.

  நன்றி ஸாதிகா.

  நன்றி ராஜி..

  பதிலளிநீக்கு
 11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 12. ஒவ்வொரு பெற்றோர்களும் நினைவில் வைக்கவேண்டிய நல்ல பதிவு!

  பதிலளிநீக்கு
 13. பள்ளி திறக்கும் போது மிக நல்லது உங்கள் பத்து கட்டளைகள்.தாய்மார்கள் கவனிக்க வேண்டியது.குழந்தைகள் அவர்கள் விருப்பப் படி வளரட்டும்.வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. நன்றி கிளியனூர் இஸ்மத் சகோ

  நன்றி பழனி சார்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...