எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வியாழன், 17 மார்ச், 2011

புகைப்பூக்கள்..

புன்னகையை மட்டும் கண்டிருக்கும் பெண்களின் இதழ்களில் புகைப் பூக்களைப் பார்த்தால் எவ்வளவு அதிர்ச்சியாயிருக்கும்..
அமிதிஸ்டில் காபி அருந்தச் சென்ற என் அன்புத் தங்கை கயல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக சிகரெட் பிடித்த இரு பெண்களைக் கண்டு என்னிடம் பகிர்ந்த வருத்தம்தான் இந்த புகைப்பூக்கள்.

மிக அழகான நேர்த்தியான பெண்கள் இருவர் வந்திருக்கிறார்கள். சுடிதார் போட்டு அழகான கூந்தலோடு .. அமிதிஸ்டில் காபி(யே விலை அதிகம்)., சிக்கன் பர்கர்., சாண்விச் என வாங்கி சாப்பிட அமர்ந்த போது இந்தப் பெண்கள் கண்ணில் பட அடுத்து இவர்கள் செய்த காரியம்தான் கயலை இவ்வளவு பேச வைத்தது..

ஹேண்ட்பாகிலிருந்து அடுத்தடுத்து சிகரெட்டும் லைட்டரும் எடுத்து ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி புகைத்திருக்கிறார்கள்.. கிட்டத்தட்ட ஆளுக்கு ஆறு ஆறு சிகரெட்டுகள்.. புகை உடலுக்கு பகை என அங்கே போர்டு இல்லை போல.. அடுத்தவர் உடல் நலத்துக்கும் தீங்கு என நினைக்காமல் வேறு ..

இங்கு நான் இந்திய கலாசாரம்., தமிழக கலாசாரம் பற்றியெல்லாம் பேசவில்லை.. உடல் ஆரோக்கியம் பற்றி பேச நினைக்கிறேன்.. அந்தப் பெண்களின் அப்பா அம்மாவின் பொறுப்பற்ற தன்மை பற்றி.. பேச நினைக்கிறேன்..

ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் பான் பராக்., சிகரெட்., ஆல்கஹால் என அடுத்து அடுத்து வேண்டாத பழக்கங்களைப் பழகிக் கொள்வது என்பது தனக்குத்தானே செய்து கொள்ளும் தீமை..

இதில் பெண்ணுரிமை., சுய உரிமை ., சம உரிமை எல்லாம் இல்லை.. தேவையில்லாத ஹெல்த் ஹசார்ட்.. கர்ப்பம் தரிக்கும் போது நிகோடின் குழந்தையை பாதிக்கும். வாய் ., தொண்டை., நுரையீரல் என தாக்கும் புற்று நோய்களுக்கு முதன்மையான காரணம் புகையிலை.. புகையிலையை எந்த வடிவத்திலும் பயன்படுத்தவே கூடாது..

முதலில் ஃபன்னுக்காக பழகுவது., தோழமைகள் மத்தியில் கெத்துக்காக தொடர்ந்து செய்வது என பழகி பின் குறிப்பிட்ட நேரம் வந்தால் காஃபி குடிப்பது போல இதுவும் பழகி விடும். காஃபின் கூட கெடுதல்தான் அதிகமானால்.. நிகோடின் ரொம்பக் கெடுதல்.

தனக்கு மட்டுமில்லாமல் சுற்றி இருப்பவருக்கும் மற்றும் தான் சுமந்து பெறப்போகும் வருங்கால சந்ததிக்கும் பெரும் கேடு செய்வதே இந்தப் பழக்கம். தனிமை., பெற்றோருடன் கோபம்., சம்பாதிக்கும் திமிர் ., கட்டுப்படுத்த ஆளில்லாத நிலை., கையில் பெரும் பணம் பாக்கெட் மணியாக புழங்குவது இதுதான் இந்த பழக்கம் வர காரணம்..

பிள்ளைகளுக்காக உழைக்கும் பெற்றோர் அவர்களுக்கு தனியறை., டி வி ., லாப்டாப்., செல்போன் ., கார்., என பலதும்கொடுத்து பாக்கெட் மணியாக நிறைய பணமும் கொடுக்கிறார்கள்.. எது கொடுத்தாலும் என்ன செய்கிறார்கள் என அவ்வப்போது கவனிக்க வேண்டும். எந்த நேரம் சென்று எந்த நேரம் வருகிறார்கள்., நண்பர்கள் யார்., வெளியே நண்பர்களுடன் சென்றால் எங்கு தங்குகிறார்கள். தொடர்பு எண் என வாங்கிக் கொள்ள வேண்டும்..

போலீஸ்காரர் உத்யோகம் பார்க்காவிட்டாலும் அவ்வப்போது பிள்ளைகளின் டெஸ்க்டாப்., செல்ஃபோன் மெசேஜ்கள் ., அன்டைமில் போனில் பேசுவது யாரோடு, ஹாலிடேக்கு யாரோடு எங்கு செல்கிறார்கள் என செக் செய்து கொள்வது அவசியம்.

தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகிவிடாமல் குழந்தைகளுக்கு நல்ல நண்பராயும்., அவர்களின் நண்பர்களுக்கும் நல்ல நண்பர்களாயும் பழகி எந்த ஒரு வித்யாசமான தொடர்பையும் கண்டறிய வேண்டும்.. உனக்காகத்தானே நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன் என ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிவிட்ட பிள்ளையிடம் சொல்வதை விட., அதன் முன்னாலேயே கவனிப்பது நல்லது. அப்படி ஆகிவிட்டாலும் தொடர்ந்து கவனம் எடுத்து குழந்தைகளோடு மனம் விட்டுப் பழகி அதை நீக்க பாடுபடவேண்டும்.

பிள்ளைகளாக பெற்றோரை பெருமையுறச் செய்யாவிட்டாலும் தலை குனிய வைக்காதீர்கள்.. கெட்ட பழக்கங்கள் ஒட்டகத்தைப் போல உள்ளே நுழைந்து உங்கள் உடம்பெனும் கூடாரத்தை காலியாக்கிவிடும். பெற்றோர்களே உங்கள் குழந்தைகளோடு கொஞ்சம் கவனம்., கொஞ்சம் அன்பு., கொஞ்சம் முக்கியத்துவம் ப்ளீஸ்.. அப்புறம்தான் நீங்கள் சேர்த்துவைக்கும் எல்லாவற்றுக்கும் அர்த்தம் உண்டு..

33 கருத்துகள்:

 1. இதுகள இப்டி வளர்த்தவர்களை உதைக்கணும்

  பதிலளிநீக்கு
 2. இதெல்லாம் அவரவர்கள், அவரவர்களாக உணர்ந்தால் தான் முடியும் மேடம்.

  பதிலளிநீக்கு
 3. அவர்களை இப்படி வளர்த்தவர்களை உதைக்கணும்

  பதிலளிநீக்கு
 4. புகை பழக்கத்தில் இருந்து சமுகம் வெளியில் வரவேண்டும்ஃஃ

  பதிலளிநீக்கு
 5. விழிப்புணர்வோடு இருக்க பெற்றவர்களுக்கு எச்சரிக்கை.

  பதிலளிநீக்கு
 6. www.classiindia.com Best Free Classifieds Websites
  Indian No 1 Free Classified website www.classiindia.com
  No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
  Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

  பதிலளிநீக்கு
 7. வருத்தமான செய்திதான் செயல்தான் அக்கா...

  இருந்தும்...நாகரீகம் என்ற போர்வைக்குள் இவர்கள் இவர்களே இழந்து....குளிர்காய்கிரார்கள்....

  பதிலளிநீக்கு
 8. //பெற்றோர்களே உங்கள் குழந்தைகளோடு கொஞ்சம் கவனம்., கொஞ்சம் அன்பு., கொஞ்சம் முக்கியத்துவம் ப்ளீஸ்.. அப்புறம்தான் நீங்கள் சேர்த்துவைக்கும் எல்லாவற்றுக்கும் அர்த்தம் உண்டு..//
  good one..

  பதிலளிநீக்கு
 9. தேனு,கவிதையில்தான் அசத்துகின்றீர்கள் என்று பார்த்தால் அனைவரும் பயனுறும் வகையில் ஒர் அற்புதமான கட்டிரை படைத்து சபாஷ் போட வைத்து விட்டீர்கள்.

  //பிள்ளைகளுக்காக உழைக்கும் பெற்றோர் அவர்களுக்கு தனியறை., டி வி ., லாப்டாப்., செல்போன் ., கார்., என பலதும்கொடுத்து பாக்கெட் மணியாக நிறைய பணமும் கொடுக்கிறார்கள்.. எது கொடுத்தாலும் என்ன செய்கிறார்கள் என அவ்வப்போது கவனிக்க வேண்டும். //கண்டைப்பாக அனைத்து பெற்றொர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள்.தொடர்ந்து இப்படி பயனுள்ள கட்டுரையை நிறைய தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. //பிள்ளைகளாக பெற்றோரை பெருமையுறச் செய்யாவிட்டாலும் தலை குனிய வைக்காதீர்கள்..//

  100 சதம் கரெக்ட் :-)

  தெரியாமல் செய்ய இவங்க கிராமம் இல்லை நல்லா படிச்ச உலகம் தெரிஞ்சவங்களே இதில் அதிகம் ..என்னத்த சொல்ல இங்கே ஓவரோ ஓவர் (துபாய் )

  பதிலளிநீக்கு
 11. இதெல்லாம் இங்க சகஜம் அக்கா...சரியாக சொல்லிருக்கீங்க,அருமையான விழிப்புணர்வு கட்டுரை!!

  பதிலளிநீக்கு
 12. இதெல்லாம் இங்க சகஜம் அக்கா...சரியாக சொல்லிருக்கீங்க,அருமையான விழிப்புணர்வு கட்டுரை!!

  பதிலளிநீக்கு
 13. நல்ல பயனுள்ள தகவலை சொல்லி இருக்கீங்க. விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு.கட்டுரைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. புகைப்பதும் சிகரெட் பிடிப்பதும் தவறில்லை என்ற எண்ணம் இதன் தீமைகளை நன்றாக அறிந்த படித்த பெண்களுக்கு ஏற்படுவது வருத்தமானது மன்னிக்க முடியாதது ...

  பதிலளிநீக்கு
 15. மிக நல்ல இடுகை.பெற்றோரை சிந்திக்க வைக்கும்.

  பதிலளிநீக்கு
 16. விழிப்புணர்வுடன் சமூகத்தின் முன்னேற்றம் வேண்டி ஒரு பதிவினைத் தந்துள்ளீர்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதனை எல்லோரும் உணர்ந்து செய்தால் இளைஞர்கள், யுவதிகள் வழி தவறிப் போக வாய்ப்பில்லைத் தானே?

  பதிலளிநீக்கு
 17. என்ன ஒரு பொறுப்பான பதிவு! புலம்பல் இல்லை...விரக்தி இல்லை..அட்வைஸ் இல்லை..அமர்க்களமான பதிவு.. நமக்கெல்லாம் ஒரு social commitment இருக்கிறது..இந்த பதிவை ஆண்டவனாய்ப் பார்த்து தான்,அவர்கள் பெற்றோர் கண்ணில் பட வைக்க வேண்டும்..அதிலும் ’கெட்ட பழக்கம் என்பது ஒட்டகம் போல், உடம்பின் உள்ளே நுழைந்து விடும்’ என்கிற சொல்லாடலைப் படித்தேன்...ரசித்தேன்..

  பதிலளிநீக்கு
 18. தொடர்ந்து ஆறு சிகரெட்டா...கொடுமை.
  அந்தப் பெண்கள் தனக்குத்தானே மட்டுமல்ல பிறக்கப்போகும் குழந்தைக்கும் கெடுதல் செய்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 19. அக்கா மகிழ்ச்சி தருகிறது உங்கள் எழுத்து, நேற்று பழகிய நண்பனுக்கு கூட இருக்கும் நட்பின் ஒவ்வொரு அசைவும் ஆனால் என் பெற்று வளர்த்த பெற்றோருக்கு தெரிய வில்லை , நம்பிக்கையின் பேரில் கூட இருக்கலாம் ஆனால் ஒரு நேரம் இல்லா விட்டாலும் ஒரு நேரம் தெரிய வராதா?

  பதிலளிநீக்கு
 20. //ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் பான் பராக்., சிகரெட்., ஆல்கஹால் என அடுத்து அடுத்து வேண்டாத பழக்கங்களைப் பழகிக் கொள்வது என்பது தனக்குத்தானே செய்து கொள்ளும் தீமை..//

  மிக சரியாக சொன்னீர்கள்....

  பதிலளிநீக்கு
 21. இங்கேயெல்லாம் சில அரபிகள் குடும்பமாய் அமர்ந்து பிராண்ட் பிராண்ட் சிகரெட்டுகளை ஆண்கள் பெண்கள் சமமாய் உக்கார்ந்து ஊதி தள்ளி கும்மி அடிக்கிறார்கள்...!!!! என்னத்தை சொல்ல...

  பதிலளிநீக்கு
 22. லீவின் போது என் தோழி [மும்பை]ஒருத்தியை ரொம்ப நாள் கழித்து பார்க்க போயிருந்தேன். ஒரு காபி ஷாப்பில் சந்தித்தேன். கெப்பச்சினோ ஆர்டர் பண்ணினாள். காப்பி வந்து ஒரு ஸிப் உறிஞ்சி விட்டு அவள் பேகில் கை விட்டு எடுத்தது மர்ல்போரோ சிகரெட்டை.......!!! ஹே கவி என்ன இது என கோபமாக ஆச்சர்யமாக கேட்டேன். அவள் சொன்னாள்...டேக் இட் ஈஸி மனோ என...தலையில் அடித்து கொண்டேன் வேற என்ன செய்ய.....

  பதிலளிநீக்கு
 23. நம்ம ஊரில் உள்ளவர்களுக்கு இது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

  இங்கெல்லாம் பெண்களுக்கென தனி மாடலில் சிகரெட்டுகள் கிடைக்கின்றன.

  ஆண் பெண் இருவருக்குமே புகை உடலுக்கு பகை.

  பதிலளிநீக்கு
 24. //ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் பான் பராக்., சிகரெட்., ஆல்கஹால் என அடுத்து அடுத்து வேண்டாத பழக்கங்களைப் பழகிக் கொள்வது என்பது தனக்குத்தானே செய்து கொள்ளும் தீமை..


  இதில் பெண்ணுரிமை., சுய உரிமை ., சம உரிமை எல்லாம் இல்லை//


  ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கடியாக உள்ளது. இந்த ஜென்மங்கள் திருந்துவார்களா? இந்த நிகழ்வுகளை இருபது ஆண்டுகளுக்கு முன் நான் சென்னையில் பணியாற்றும் பொழுது பார்த்து இருக்கிறேன். நாகரிகம் என்ற போதையில் தன் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளதாக நினைக்கும் பெற்றோர்கள், புலம்பும் காலம் வெகு தூரம் இல்லை.

  பதிலளிநீக்கு
 25. குழந்தைகளோடு கொஞ்சம் கவனம்., கொஞ்சம் அன்பு., கொஞ்சம் முக்கியத்துவம் ப்ளீஸ்.. அப்புறம்தான் நீங்கள் சேர்த்துவைக்கும் எல்லாவற்றுக்கும் அர்த்தம் உண்டு.//

  சரியாக சொன்னீர்கள் தேனம்மை.

  பதிலளிநீக்கு
 26. நன்றி கருன்

  நன்றி ராஜா

  உண்மை ரமேஷ்

  நன்றி சௌந்தர்

  நன்றி ராஜி

  நன்றி செந்தில்

  நன்றி இளங்கோ

  நன்றி ஸாதிகா

  நன்றி ஜெய்

  நன்றி மேனகா

  நன்றி ஜிஜி

  உண்மை பூங்குழலி

  நன்றி ஆசியா

  உண்மை நிரூபன்

  மிக்க நன்றி ஆர் ஆர் ஆர்..:))))

  நன்றி கலாநேசன்

  நன்றி கயல்

  நன்றி ரவி

  நன்றி மனோ (!)

  நன்றி அக்பர்

  நன்றி அஷோக்

  நன்றி இளம்தூயவன்

  நன்றி கோமதி

  பதிலளிநீக்கு
 27. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 28. Really nice to find this 'different' tamil blog with lots of exciting articles. I came here after seeing your blog in your facebook profile.

  Shocking to know the behaviour of so called modern women. Scaring to imagine future of present generation.

  A.Hari

  பதிலளிநீக்கு
 29. கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஹரி..

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...