எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 மார்ச், 2011

நம்பிக்கை நட்சத்திரம். திருஷ்காமினி.. போராடி ஜெயித்த பெண்கள் (6).M.D. திருஷ்காமினி.. இந்திய மகளிர் கிரிக்கெட்டர்., ஓபனிங்க் பாட்ஸ்உமன்., ஆல் ரவுண்டர். இளம் சாதனையாளர். 8 வயதிலேயே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தவர். கிரிக்கெட் விரும்பிகள் அனைவருக்கும் இவரை தெரிந்திருக்கும். ஆண்களுக்காக மட்டுமே சிறப்பாய் விளம்பரப்படுத்தப்படும் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஒரு பெண் நட்சத்திரத் தாரகை .. இவர்.


ஒரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருப்பார் என சொல்லப்படுவதுண்டு.. இவரின் வெற்றிக்குப் பின் இவரின் தந்தை இருக்கிறார்.. டிக்கேஷ் வா சங்கர். இவர் ஒரு ஹாக்கி ப்ளேயர்.. போர்ட் ட்ரஸ்ட்டில் சூபரிண்டெண்ட். அம்மா மணிமேகலை ஐ ஓ பி யில் க்ளார்க். ( தற்போது இல்லை.) தந்தை கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக மகளுக்கு கோச்சாக செயல்பட்டு பயிற்சி அளிக்கிறார். தன் வேலையை ராஜினாமா செய்து மகளுடைய முன்னேற்றத்துக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

தற்போது 20 வயதாகிறது திருஷ்காமினிக்கு.. இவர் பெயரில் இவரின் அனைத்து உறவினர்களும் இருக்கிறார்கள். தி - ஜாதகப் படி வைத்தது. ரு - இவரின் அப்பா வழித் தாத்தாவின் பெயர் முருகேசனிலும்., ஷ்- தந்தை திக்கேஷிலும். கா பாலன்ஸ் செய்ய.. மி - தந்தைவழிப் பாட்டியின் பெயர் மீனாட்சியிலும் னி - அம்மா மணிமேகலையின் பெயரிலும் சேர்த்து திருஷ்காமினி ஆகி இருக்கிறார். சர்ச் பார்க்கில் பள்ளிக் கல்வி., எம் ஓ பி வைஷ்ணவாவில் பி. காம் முடித்து தற்போது எம் ஏ கம்யூனிகேஷன் படிக்கிறார்.
8 வயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார். டி வி யில் பார்த்து வளர்ந்த ஆர்வத்துக்கு இவர் தந்தை தூண்டுகோலும் துணையுமாய் இருக்கிறார். வீட்டில் விளையாடிய பாட்ஸ்களின் அணிவகுப்பே இருக்கிறது. ஒவ்வொரு பாட்டும் 12, 000 விலை பெறும்.


7 வது படிக்கும் போது சப் ஜூனியர் லெவெலில் முதலில் ஜாம்ஷெட்பூரில் விளையாடி இருக்கிறார். இதுதான் முதல் போட்டி. கிரிக்கெட்டில் சின்னப் பெண்ணாக இருந்தாலும் தன் 12 ஆவது வயதில் DEBU பண்ணும் போது 26 வயது ப்ளேயர்களுடன் சரிசமமாக விளையாடி இருக்கிறார். 14 வயதில் சென்னையில் நடந்த இண்டர் ஸ்டேட் இல் ஓபனிங் பாட்ஸ்மானாக விளையாண்டிருக்கிறார். அந்த டோர்னமெண்டில்,” ப்ராமிசிங் கிரிக்கேட்டர் ஆஃப் த டோர்னமெண்ட் ” அவார்டு கிடைத்தது.

ஜூனியர் இண்டர் ஸ்டேட் டோர்னமெண்ட் திருவனந்தபுரத்தில் நடந்தபோது பொதுவாக பாட்டிங்., பௌலிங்., ஃபீல்டிங்தான் பண்ணமுடியும். விக்கெட் கீப்பிங்கும் செய்ய வேண்டி இருந்தது. அதில் பாட்டிங்கில் 284 ரன் எடுத்து பௌலிங்கில் 7 விக்கெட் எடுத்து ஃபீல்டிங்கில் 3 காட்சும் ., கீப்பிங்கில் 2 காட்சும் பிடித்து 5 விக்கெட் எடுத்தார்.

TNWCL இல் 221 ரன் எடுத்து பெஸ்ட் பாட்ஸ்உமன் அவார்டு வாங்கினது மறக்கமுடியாத அனுபவம். 38 பவுண்டரிஸ் ( 4 ) எடுத்து 4 சிக்ஸர்.. ( 6).2007 - 2008 இல் பெஸ்ட் ப்ளேயர் ஆஃப் த இயர் (ஜூனியர்) இண்டியன் லெவலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வருடம் முழுவதும் ஆவரேஜ் 165. சராசரியாக 1 மாட்சுக்கு 165 ரன்கள் , இந்த மாதிரி ரன்களை ஆண்களே அடிக்க முடியாது.

இந்தியன் கிரிக்கெட் வாரியம் பெஸ்ட் ப்ளேயர் ஆஃப் த இயர் எடுத்ததால் ஆஸ்திரேலியாவுக்கு CENTRE OF EXCELLENCE - BRISBANE . க்கு ஸ்பெஷல் ட்ரெயினிங் காம்ப்க்காக அனுப்பி வைத்தார்கள். அதில் பல நுணுக்கங்களைப் பயின்றிருக்கிறார்.. இது மட்டுமல்ல.. டி வியிலும்., மற்றும் அடிக்கடி மற்ற மாட்சுகளைப் பார்த்தும் நுணுக்கங்களை தான் கற்றதோடு மட்டுமல்ல தன் சக விளையாட்டு தோழியருக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

கிரிக்கெட் மைண்ட் ஓரியண்டட் கேம் . பிசிகலாகவும்., மெண்டலாகவும் எப்பவும் ஃபிட்டாக இருக்க வேண்டும். அறிவை உபயோகப்படுத்தியும் ஆடணும். ஆடப்போகும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு சவாலான நாளே.. நின்று ஆடவேண்டும்., ஜெயிக்க வேண்டும். இந்த மாதிரி சமயங்களில் ஆண்களே தடுமாறும் நிலை உண்டு.. ஒவ்வொரு பாலும் சவாலான பால்தான்.2007 இல் ப்ளஸ்டூ தேர்வு எழுதும்போது இந்தியா- ஆஸ்திரேலியா இங்கிலாந்து ., நியுசிலாந்து குவார்ட்ராங்குலர் சீரிஸில் விளையாடி விட்டு எக்ஸாம் எழுத சென்றார். ஒரு நாள் கூட படிக்க லீவ் இல்லை. 20 நாட்கள் விளையாட்டுக்காக ஹோட்டலில் தான் தங்க வேண்டும். படிப்பது சிரமம். ப்ராக்டீஸ் செய்ய வேண்டும். நாட்டுக்காக விளையாடுவதால் மாட்சில்தான் கான்சன்ட்ரேட் செய்யவேண்டும். சீரிஸ் முடிந்த அடுத்த நாளே பரிட்சை. அதில் 162 மார்க்கும். மொத்தத்தில் 70 பர்சண்டேஜும் வாங்கி இருக்கிறார். மிக நன்றாக படிக்கக் கூடிய பெண்ணான இவர் இன்னும் டைம் கிடைத்திருந்தால் ஸ்டேட் ராங்க் வாங்கி இருக்கக் கூடும்.

பத்துவயதில் ப்ளேக்ரவுண்டில் ப்ராக்டீஸ் செய்யும்போது ஹெல்மேட் போட்டும் பாடிலைனாக மூக்கில் பட்டு பவுன்ஸாகி ரத்தம் கொட்டத்துவங்கியது. இவரின் தந்தையும்., பௌல் செய்தவருமே பயந்துவிட்டார்கள்.. மற்றவர்களாக இருந்தால் அன்றோடு கிரிக்கெட் முடிந்திருக்கும். இவரின் மன உறுதி., விடாமுயற்சி., போராட்டம் ., உழைப்பு காரணமாக இன்று ஆல்ரவுண்டராக பரிணமிக்கிறார்.

எல்லா இடத்திலும்., ஒரு சிறப்பான இடத்தை அடைய., கிடைத்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியிருக்கும். உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் இவரின் விடாமுயற்சியும்., உழைப்பும் ., ப்ராக்டீஸும் இவரின் எல்லா தடைகளையும் மீறி ஜொலிக்க வைக்கிறது.இந்தியாவுக்காக விளையாடி

1.15 வயதில் 21 வயதுக்குட்பட்ட யங் லேடீஸ் 2005 பாகிஸ்தான் லாகூர் உமன் ஆஃப் த மேட்ச் அவார்டு.

2. 16 வயதில் ஆசிய மகளிர் கிரிக்கெட் கோப்பை ஜெய்ப்பூர் 2006 இல் அறிமுகப்போட்டியில் உமன் ஆஃப் தெ மேட்ச் ., உமன் ஆஃப் த சீரிஸ் அவார்டு.

3. குவார்ட்ராங்குலர் சீரிஸில் இந்தியா, ஆஸ்திரேலியா., இங்கிலாந்து., நியூசிலாந்து., போட்டியில் 2006 இல் சென்னையில் பங்கேற்றார்.விளையாட்டுத்துறை அமைச்சர் மொய்தீன் கானிடம் உமன் ஆஃப் தெ சீரிஸில் 2006 இல் இண்டர்நேஷனல் சீரிஸுக்காக பாராட்டு கிடைத்தது.

கலைஞர் பிறந்தநாளில் நடந்த மின்னொளி டோர்னமெண்ட்டுக்காக சிறப்பு அழைப்பாளராக சென்றிருக்கிறார். அங்கே ஸ்டாலின்., கலைஞர்., கிருஷ் ஸ்ரீகாந்த்., டி. ஆர். பாலு. துரை முருகன்., கே. என் . நேரு., ஆகிய எம் எல் ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர்களோடு இவரும் பங்கேற்றிருக்கிறார்.

ஜெய்ப்பூரில் நடந்த ஆசிய மகளிர் கிரிக்கெட் போட்டியில் “ தொடர் ஆட்ட நாயகி “ விருது திருஷ்காமினிக்கு கொடுக்கப்பட்டு., ”ஜஸ்ட் ஃபார் ஹெர் விற்பனை மையத்திலிருந்து ”ஹீரோ ஹோண்டா ப்ளெஷர்” வண்டி பரிசாக அளிக்கப்பட்டது.இந்த வெற்றி எல்லாம் சும்மா வந்ததல்ல.. உழைப்பு உழைப்பு உழைப்பு மட்டுமே..

காமன்வெல்த் பாங்க் கிரிக்கெட் சீரிசில் ஆஸ்த்ரேலியாவுக்காக விளையாடி வந்தபின்பு இண்டர்ஸ்டேட் தமிழ்நாட்டுக்காக அனந்தப்பூரில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நடுவில் ஒரு நாள் ப்ரேக் டே இருந்தது. அதன் முதல் நாள் இரவில் இவரின் தாய் மணிமேகலைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். இரவு 2 மணிக்கு அவரின் இறப்பு செய்தி கிடைத்ததும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் உதவியுடன் ஒர் டாக்சியில் 4 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மாலை 4 மணிக்கு வந்து தாயின் ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டு பின் உடனே 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாட்ச் விளையாட சென்றார்.. இந்த மாதிரி மனநிலையில் எப்படி விளையாடி இருக்க முடியும். தாயை இழந்த சோகம்., பக்கத்தில் இருக்க முடியாத பரிதவிப்பு., பயணம்., ஓய்வற்ற பயிற்சி., உறக்கமற்று மறுநாள் விளையாட வேண்டிய அவசியம்.. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அல்லவா.

ஒவ்வொரு வெற்றிக்கு முன்னும் இந்த மாதிரி பல சம்பவங்களை கடக்க வேண்டியதிருக்கிறது.
கிட்டத்தட்ட 7000 ரன்களும்., 126 விக்கெட்டுகளும் ., 20 வயதில் எடுப்பது என்பது என்னளவில் ஒரு பெரும் சாதனையே.. பல தொலைக்காட்சிகளும் பத்ரிக்கைகளும் வெளிநாட்டு பத்ரிக்கைகளும் ., என் டி டி வி யும் இவரின் சாதனைகளை பகிர்ந்துள்ளன
இவரின் சகோதரி M.D. சுகராகமினியும் ஒரு இளம் கிரிக்கெட்டர் .. இவரும் எம் ஓ பி வைஷ்ணவாவில் ஃபுட் சைன்ஸ் மேனேஜ்மெண்ட் படிக்கிறார். இவரும் ஜூனியராக கல்லூரி டீமிற்காகவும். தமிழ்நாட்டிற்காகவும் விளையாடுகிறார்.


இருவரும் எம்.டி.டி என்றும் எம்.டி.எஸ் என்றும் அழைக்கப்படுகிறார்கள் கிரிக்கெட் வட்டாரத்தில்..

தமிழ்நாடு சீனியரில் இருவரும் ஒன்றாக தாய்த்தமிழ் நாட்டுக்காக., தாய் நாட்டுக்காக ஒன்றாக விளையாட வேண்டுமென்பது தந்தையின் விருப்பம்.


இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திரங்கள் மினி சகோதரிகள் இணைந்து வெற்றி பெற வாழ்த்துவோம். !!!


டிஸ்கி:- நம்பிக்கை நட்சத்திரம் திருஷ்காமினி பற்றிய என்னுடைய இந்தக் கட்டுரை (போராடி ஜெயித்த பெண்கள் ) மார்ச் மாதம் 2011 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.

11 கருத்துகள்:

 1. சிறப்பான ஒரு பெண் நட்சத்திரத் தாரகை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. அக்கா, கலக்குறீங்க..... இந்த பதிவை வாசிப்பதே ரொம்ப சந்தோஷமாக இருக்குதுங்க...

  பதிலளிநீக்கு
 3. இதை நான் செய்தியாக அல்ல ஒரு வரலாற்றின் முகப்புரையாக பார்கிறேன்.

  சச்சினை போலவே இவருக்கும் சாதனை புத்தகங்கள் தனது பக்கங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

  இவர் எம் குல பெண் என பெருமைபடுகிறோம் போற்ற கடமை பட்டுள்ளோம்.

  பதிலளிநீக்கு
 4. சூப்பரா இருந்தது அக்கா தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 5. படிப்பவருக்கும் நம்பிக்கையூட்டுகிறது! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. பெண் சாதனையாளர்களை அறிமுகப்படுத்தி உங்கள் பதிவின் மூலம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறீர்கள்.மிக்க நன்றி.திருஷ்காமிநியைப் பற்றி விகடனில் வெளிவந்த கட்டுரை மூலம் தான் முதன்முதலில் அறிந்தேன்.

  பதிலளிநீக்கு
 7. நன்றி ராஜி.,

  நன்றி ராமலெக்ஷ்மி.,

  நன்றி சித்து

  நன்றி கமலேஷ்

  நன்றி பிரபு

  நன்றி சசி

  நன்றி மாதவி

  நன்றி ஜிஜி

  பதிலளிநீக்கு
 8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 9. vவாழ்த்துக்கள் பிளக் ஏஞ்சல் ...........!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...