எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

செவ்வாய், 15 மார்ச், 2011

நா கொடுக்கு..


கொட்டிவிட்டு மட்டுமல்ல
விதைத்துவிட்டும் செல்கிறது
அடுத்த கோபத்தை..

கசாப்புக் கடைக் கத்தியாயும்.,
ரத்தம் ருசிக்கும் அடித்தண்டாயும்..
இரும்பு கலந்து..

வால் முறுக்கி.,
விரட்டும் மாடாய்..
வெருட்டும் அரவாய்..

புன்னகைக் கைப்பிடி..
பொருத்திய வளைவாள்
உதடெனும் நாதாங்கிக்குள்..

எச்சமிட்டு எச்சமிட்டு
எச்சில் அமுதம்
பல்லி எச்சமாய்..

அன்பு புனைந்ததான
உயிர்மெய்கள் உண்டு
எச்சில் தழும்பு..

தேவதைப் பலியும்
நரம்பறுக்கும் எருதும்
காமாக்கியா தெப்பமாய்...

வெட்டி விழுந்தாலும்
திரும்ப வளரும்
பல்லிவாலும் கருவைமுட்களும்..

31 கருத்துகள்:

 1. அம்மா... படம் பயமுறுத்துகிறது....

  பதிலளிநீக்கு
 2. இது பின்நவீனத்துவ கவிதையா?
  எனக்கு புரியலையே?

  பதிலளிநீக்கு
 3. வித்தியாசமான சிந்தனை... வித்தியாசமான கவிதை...

  பதிலளிநீக்கு
 4. ///சமுத்ரா கூறியது...

  புரியலை :)////

  மன்னிக்கவும்... எனக்கும் புரியல...


  எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

  பதிலளிநீக்கு
 5. வித்தியாசமான கவிதை..
  ஆனால் எல்லோருக்கும் புரியும் படி எளிமையான வார்த்தையில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்...

  பதிலளிநீக்கு
 6. தொப்பி தொப்பி-யின் அதிரவைக்கும் உண்மைகள்..

  தெரிந்துக் கொள்ள கவிதை வீதி வாங்க..

  பதிலளிநீக்கு
 7. யோசிச்சு மறுபடி படிச்சு பார்க்கிறேன்...

  பதிலளிநீக்கு
 8. வித்தியாசமான சிந்தனை... வித்தியாசமான கவிதை..//
  ஆஹா இவருக்கு புரிஞ்சிடுச்சு போல

  பதிலளிநீக்கு
 9. நாவினிலிருந்து வெளிவரும் கடுஞ்சொற்கள், நாவிறால் ஏற்படும் ரணங்களை குறிப்பதாக கருதுகிறேன்.. சிறப்பான கருத்து.. அதேசமயம் ஏதுவான குறியீடுகள் இட்டால் அது கருத்துகளை நன்கு வெளிகொண்டுவரும் அல்லவா.??? நிறுத்தற்குறியீடு தவிர்த்து வேறு காணமுடியவில்லை..

  பதிலளிநீக்கு
 10. //
  வெட்டி விழுந்தாலும்
  திரும்ப வளரும்
  பல்லிவாலும் கருவைமுட்களும்..
  //ஆஹாஹாஹா..

  பதிலளிநீக்கு
 11. கடுஞ்சொற்கள் கக்கும் விஷத்தை மற்றும் அதனால் ஏற்படும் வலியை கவிதையாக்கி இருக்கிறிர்கள். நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 12. பத்தாங்கிளாஸ் பாடத்தை ரெண்டாம் கிளாஸ் பையன் படிச்ச ஃபீலிங் எனக்கு :)

  பதிலளிநீக்கு
 13. //"கொட்டிவிட்டு மட்டுமல்ல
  விதைத்துவிட்டும் செல்கிறது
  அடுத்த கோபத்தை..
  "//

  அருமை...

  பதிலளிநீக்கு
 14. தயவுசெய்து கவிதைகள் என்று சொல்லி இது மாதிரி ஏதாவது எழுதாமலிருந்தால் தமிழுக்கும் வாசகர்களுக்கும் நல்லது...

  சேர்த்துப் படித்தால் வாசகம் அல்லது பத்தியாக இருக்கிறது,அதுவும் பொருளற்ற பத்தியாக..

  மண்டை காய்கிறது.

  கோமணகிருஷ்ணன்

  பதிலளிநீக்கு
 15. Indian No 1 Free Classified website www.classiindia.com
  No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

  Start to post Here ------ > www.classiindia.com

  பதிலளிநீக்கு
 16. உங்க பேரே இதுதானா கிருஷ்ணன்..

  ஏதோ ஒரு பெயரில் நான் என் இடுகையை வெளியிடலை..

  நீங்க ஏன் ஏதோ ஒரு பெயரில் (!) உங்க பின்னூட்டத்தை போட்டு இருக்கீங்க.. யார் நீங்க உங்க உண்மையான பேரு என்ன..

  ஏன் பெயரில்லா பேரில வந்து இருக்கீங்க..

  பதிலளிநீக்கு
 17. நன்றி அம்மா.
  உங்களது கவிதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனால் இந்தக் கவிதை கோபத்தில் எழுதியது போல் இருக்கிறது. நல்ல எளிமையான அருமையான கவிதைகளாக எழுதுங்களேன்.

  பதிலளிநீக்கு
 18. தேனக்கா...இதுவும் மனிதனின் அடுத்த பரிணாமம் சூப்பர் :-))

  பதிலளிநீக்கு
 19. இனிய சொற்களை பேசத் தூண்டுகிறது தங்களது
  கவிதை. வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 20. நச்சு வார்த்தைகளால் அவதிப்படும் சமயங்களை நாசூக்காகச் சொன்னமாதிரி இருக்கு !

  பதிலளிநீக்கு
 21. தேவதைப் பலியும்
  நரம்பறுக்கும் எருதும்
  காமாக்கியா தெப்பமாய்...//
  காமாக்கியா
  சக்திபீடத்தில் பலி??

  பதிலளிநீக்கு
 22. இராஜேஸ்வரி உங்க கணிப்பு நூத்துக்கு நூறு சரி..

  இப்போது எருது பலி போல முன்பி காமாக்கியாவில் தேவதைப் பலி என குழந்தைகளையும் பலியிட்டுக் கொண்டிருந்தார்கள்..

  நம் நாவும் அது போல எல்லாவற்றையும் வெட்டிக் கொட்டிக் கொண்டிருக்கிறது என்பதன் குறீயீடுதான் இக்கவிதை..

  நன்றி இராஜேஸ்வரி புரிதலுக்கு..

  பதிலளிநீக்கு
 23. சிந்திக்ககூடிய விதத்தில் கவிதை
  வித்தியாச சிந்தனை.

  பதிலளிநீக்கு
 24. நாக்கின் கூர்மை கொலை செய்யும் வாளைவிடக் கொடுமை.
  வெகு அருமை தேன்.

  பதிலளிநீக்கு
 25. எளிய உண்மை ஏன் புரியலை சமுத்ரா..

  சொற்கள் படுத்தும் பாடு பாரதி..

  நன்றி கருன்

  பாரதிக்கு சொன்னதுதான் ப்ரகாஷ்

  நன்றி சௌந்தர்

  ஏன் சதீஷ் இப்பிடி..:))

  நன்றி கூர்மதியன்

  நன்றி ஸாதிகா

  நன்றி ரமேஷ்

  ரொம்ப சிம்பிள் அக்பர்

  நன்றி ராம்

  ஏன் வேலு..

  இனிமேல் எளிமையாக எழுதுறே ரத்னவேல் சார்..

  நன்றி ஜெய்

  நன்றி புவனா

  நன்றி ஹேமா

  நன்றி சசி

  நன்றி யுவா

  நன்றி ராஜி

  நன்றி குமார்

  நன்றி மலீகா

  நன்றி வல்லி

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...