எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 மே, 2015

செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

இன்றுபோல் என்றுமே இல்லங்கள் செழித்திட
இன்னருள் புரிந்திடுவாய்.
கன்று போல் எங்களைக் காக்கின்ற தெய்வமே
அக்கினி ஆத்தாஉமையே !.
 

— இது என் அம்மாவின் கவிதை அக்கினி ஆத்தா பற்றி..:).

68. சாமி வீடு.  படைப்பு வீடு.

70. சாமி வீடு ,படைப்பு வீடு :-

செட்டிநாட்டுப் பகுதியில் படைப்புக்கென்று தனி வீடுகள் உண்டு. அக்கினியாத்தா, மெய்யாத்தா, அடைக்கம்மை ஆத்தாள், அழகன் செட்டி,சிவகாமி ஆயா, காளி ஆயா ( இரணிக்காளி )  , பாப்பாத்தி என்று ஏகப்பட்ட படைப்புகள் நடைபெறும். 

படைப்பு அன்று காலை குழந்தைகள் அல்லது பெண்கள் சாமி வீட்டைக் கூட்டி மெழுகி சுத்தம் செய்து கோலமிட்டு வைப்பார்கள். அந்த வருடம் சீட்டு விழுந்தவர்கள் குடும்பத்தினரோடு மற்றவர்களும் கைகோர்த்து செயல்படுவது அழகு. உள்ளூரிலேயே இருப்பவர்கள்தான் இதன் பெரும்பலம். :)முதல் நாள் இரவு படைப்பு. அநேகமாக கத்திரிக்காய் வாழைக்காய் கூட்டி அவித்துக் குழம்பு வைத்து பருப்பு மசித்து கூட்டு பொரியல் பாற்சோறு வடை அப்பளம் என்று சாமிக்கு எதிரிலேயே கோட்டை அடுப்பில் பித்தளை அண்டாக்களில் & தவலைகளில் தயாரித்து 71. பள்ளயம் போட்டு நகைகள் புதுத்துணிமணிகளால் ( மதியமே போழை - பேழையில் உள்ள துணிகளையும் புதுத்துணிகளையும் கோயில் குளத்துக்குச் சென்று துவைத்துக் காயவைத்து எடுத்து வந்து அலங்கரிப்பார்கள். ) 


தீப தூப சாம்பிராணி வாசனையோடு இரவு சாப்பிட எப்படியும் பத்து மணியாகிவிடும். ! ஆனால் வருடம் ஒரு முறை இந்தப் படைப்புக்கு சென்றால் அதுவே வருடம் முழுமைக்குமான ரீசார்ஜ். சொந்த பந்தம் அனைவரையும் பார்க்கலாம்.

மறுநாள்  72. நீர்ச்சோற்றுப் படைப்பு & ஏலம். முதல் நாள் சோற்றில் சின்ன வெங்காயம் & தயிர் விட்டுப் பிசைந்து ( காலையில் பலகாரம் இருக்கும். இது மதியம்  ) அத்துடன் மரக்கறிக்காய் தோசை, வள்ளிக்கிழங்குப் பொரியல், மண்டி கூட்டு, பச்சடி எனப் பலவகைகள் படைத்துப் பரிமாறப்படும்.


 சில படைப்புகள் 73. கோழிப்படைப்புகளாக இருக்கும் அப்படி என்றால் மறு நாள் உப்புக்கண்டம் பொரிப்பார்கள். முட்டையும் அவித்து வைப்பார்கள். பருப்புத் துவையலும் அரைப்பார்கள்.

படைப்பில் வைக்கப்பட்ட புதுத்துணிகள் 74. ஏலம் விடப்படும். அத்துடன் மிச்சமாகும் பொருட்களையும் ஏலம் விட்டு சாமி வீட்டுப் பணத்தோடு சேர்த்து விடுவார்கள். இந்தப் பணம் சாமி வீட்டைப் பராமரிக்கவும் அடுத்த வருட படைப்பு, 75. பொங்கல், 76. பூசை போன்றவற்றுக்கும் எடுத்துக்கொள்ளப்படும். சிலர் ஏதேனும் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுக்கொண்டு ( திருமணம், பிள்ளைப்பேறு, வீடு கட்டுதல், வியாபாரம் ) தனது படைப்பாகவும் படைப்பதுண்டு,.

அனைவரும் 77. கூடி ஆக்கி உண்ணும் இப்படைப்பு அநேகமாக மாசி மாதத்தில்தான் வரும். பிள்ளைகளுக்கு விடுமுறை ஆரம்பிக்கும் தினமாக இருந்தால் ஏகக் கொண்டாட்டம்தான். இப்போது எல்லாம் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று விட்டு விட்டு வந்துவிடுகிறார்கள். பெரும்பாலும் பெரியவர்கள்தான். 
மரக்கறிக்காய் தோசை.

மிச்சமாகும் 78. பாற்சோறை துண்டுகளாக்கி தனித்தனியாக புது பேசின்களில் போட்டு புள்ளிப் படி பிரித்துக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். ( பெண்பிள்ளைகள் படைப்பில் கலந்துகொண்டால் அவர்களுக்கும் உண்டு ). கருப்பட்டியும் வெல்லமும் பச்சரிசியும் தேங்காயும்  போட்ட இந்தப் பாற்சோற்றின் ருசி எந்த ஊர்ப் பொங்கலிலும் கிடைக்காது.

அதே போல் இன்னொரு ஐட்டம் 79 . படைப்புப் பணியாரம். அதன் ருசி சொல்லில் அடங்காது. அரிசியை இடித்து வெல்லம் காய்ச்சி ஊற்றி மாவு கரைத்து நெய்யில் பொரித்துச் செய்வார்கள்.  ஒரு வாரத்துக்குக் கூட இது கெடாது.
பாற்சோறு.

என் அம்மாவின் அக்கினியாத்தாள் பாட்டு

அக்கினி ஆத்தாள் பாட்டு

காக்கும் கரமுடைய கற்பகமே கவின்தமிழே
கேட்கும் வரமளிக்கும் கேண்மையளே கிளரொளியே
பூக்கும் மலர்தேடிப் பூம்பாதம் சேர்க்கின்றோம்
ஆக்கும் அருட்கருணை தா!

அன்னையே அமுதமே ஆனந்தவெள்ளமே
              அருட்சோதி வடிவாகினாய்!
தன்னையே மறந்துநான் தமிழ்பாடி வந்திட
             தமிழுக்கு எழில் கூட்டுவாய்!
நன்மையும் தீமையும் நாளுமுள்ள வாழ்க்கையில்
             நான் உழன்று அழுந்தாமலே
உன்னையே தினம்தினம் உள்ளத்தில் துதிக்கிறேன்
              ஒய்யாரக் காட்சி தருவாய்!
மண்ணிலே துன்பங்கள் மலைபோல வந்தாலும்
              மாதரசி உனை வேண்டினால்
கண்ணிலே காணாமல் கடுகியே மறைந்திட
              கைதூக்கி வரமருளுவாய்!
சின்னஉரு சிரித்தமுகம் சீர்புகழில் பழுத்தமுகம்
             சிங்காரப் பூந்தோட்டமே
அன்னமென நடைபயின்று அருள்பொழிய வருவாயே
             அக்கினி ஆத்தா உமையே!

உயிருக்கு உயிராக உயிருக்குள் உயிராக
              உருவாகி வந்தவள் நீ!
கருவுக்கு கருவாகி கருவுக்குள் கருவாகக்
             காக்கின்ற கருணை நீயே!
புல்லர்க்குப் புல்லராய்ப் புன்மைசெய் தாரையும்
            புறந்தந்து திருந்தவைப்பாய்
நல்லார்க்கும் நல்லராய் நன்மைகள் செய்தவரை
            நானிலம் போற்றவைப்பாய்!
வெல்லத் தமிழினில் விரிவாக உன்புகழை
           விழைந்துநான் பாடுகின்றேன்!
சொல்லத் தெரியவில்லை சொற்பதங் கடந்துநீ
            துரியநிலை காட்டுகின்றாய்!
நாளும்உன் புகழ்பாடி நல்லறம் செய்துமே
            நம்குலம் தழைக்கவேண்டும்
ஆளும்அருள் வேண்டினோம் ஆசிதர வேண்டும்நீ
            அக்கினி ஆத்தா உமையே!

மணமாலை கேட்டவர்க்கு மணவாழ்வு அமைந்திட
            மாலை எடுத்துத் தந்தாய்!
மழலை வரம் கேட்டவர்க்கு மங்காத புகழ்தரும்
             மழலையும் தான் கொடுத்தாய்!
வேலையென்றும் வீடென்றும் வேண்டிவரம் கேட்டவர்க்கு
             விரைவிலே தான் தருகுவாய்!
விலையொன்றும் கேட்காமல் மலைபோன்ற நன்மைதரும்
             விந்தையை என்ன சொல்வேன்!
மாசியில் படைப்புவரும் மறுபடியும் நல்லபல
              மாற்றங்கள் வந்துசேரும்!
பேசிமகிழ் பேரன்கள் பேத்தியுடன் பெண்மக்கள்
              பிரியமுடன் நாடிவருவார்!
நேசிக்கும் உன்படைப்பில் நெருங்கிவரும் உறவுகள்
              நெஞ்சுருக நினைத்திருக்கும்!-உன்
ஆசியில் புள்ளிகள் ஆனந்தம் பெருகட்டும்
               அக்கினி ஆத்தா உமையே!

தேர்போல குடும்பங்கள் சேர்த்துமே வைத்துநீ
              செகம்போற்ற வாழவைப்பாய்!
ஊர்போற்றி மெச்சவே ஒற்றுமை ஆக்கிநீ
             உள்ளங்கள் நெகிழவைப்பாய்!
மனதிலே நினைப்பவர் மாபெரும் சக்திபெற
            மாயங்கள் செய்திடுவாய்!
தனதென நினையாமல் தருகின்ற நல்லவரை 
          தழைத்தோங்கச் செய்திடுவாய்!
உன்னரும் கருணையால் உள்ளம் நனைந்துமே
           உருகியே நிற்கிறோமே
என்னரும் தாயேநீ எழிற்கோலம் காட்டியே
        எங்களை ஆட்கொள்ளுவாய்!
இன்றுபோல் என்றுமே இல்லங்கள் செழித்திட
           இன்னருள் புரிந்திடுவாய்!
கன்றுபோல் எங்களைக் காக்கின்ற தெய்வமே
            அக்கினி ஆத்தாஉமையே!

     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
இந்த இணைப்பிலும் பார்க்கலாம்  

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்15 கருத்துகள்:

 1. தங்கள் அம்மாவின் அக்கினியாத்தாள் பாட்டு (அக்கினி ஆத்தாள் பாட்டு) அருமையான ஆக்கம்.

  ‘தேனு’க்கே அம்மா என்றால் ’சும்மா’வா?

  பதிலளிநீக்கு
 2. கடைசியாகக் காட்டப்பட்டுள்ள படத்தில் வலதுபக்க தூணுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் ஒருவரை எனக்கு, ’எங்கேயோ .... பார்த்த ஞாபகம்!’ :)

  பதிலளிநீக்கு
 3. //கருப்பட்டியும் வெல்லமும் பச்சரிசியும் தேங்காயும் போட்ட இந்தப் பாற்சோற்றின் ருசி எந்த ஊர்ப் பொங்கலிலும் கிடைக்காது.//

  கரெக்டூஊஊ. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா போல பார்க்கவே இனிப்பாத்தான் இருக்குது.

  பதிலளிநீக்கு
 4. //மிச்சமாகும் பாற்சோறை துண்டுகளாக்கி தனித்தனியாக புது பேசின்களில் போட்டு புள்ளிப் படி பிரித்துக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். //

  பார்க்க தட்டை [எள்ளடை] போல இருக்குது. :)

  பதிலளிநீக்கு
 5. //பள்ளயம் போட்டு நகைகள் புதுத்துணிமணிகளால் ( மதியமே போழை - பேழையில் உள்ள துணிகளையும் புதுத்துணிகளையும் கோயில் குளத்துக்குச் சென்று துவைத்துக் காயவைத்து எடுத்து வந்து அலங்கரிப்பார்கள். ) //

  இதன் கீழே இரண்டாவதாகக் காட்டியுள்ள ஓலைக்கூடை [துவைத்த வஸ்திரங்களை பூஜைக்கு ... மடியாக .... சுத்தமாக .... எடுத்து வர உபயோகப்படுபவை] பார்க்கவே ஜோராக புனிதமாகக் காட்சியளிக்கிறது. செட்டிநாட்டார் பழக்க வழக்கங்களிலும் அவர்கள் பயன்படுத்தும் இதுபோன்ற சிறப்பான சில பொருட்களிலும் எனக்கு எப்போதுமே ஓர் ஆர்வமும் ஈடுபாடும் உண்டு.

  அதே போல அந்த மேற்படி வரிகளுக்கு மேலே காட்டியுள்ளதோர் காட்சி:

  ஆறு பெண்மணிகளாகச் சேர்ந்து அடுப்பினில் இருந்து தூக்க முயற்சிக்கும், மிகச்சூடான, கூடுதல் எடையுள்ள, உள்ளே ஈயம் பூசப்பட்ட, மிகவும் பிரும்மாண்டமான கெட்டியான பித்தனை அடுக்கு. :)

  அதன் மேல் படத்தில் ..... ஆஹா, எனக்கு நாக்கில் நீரை ஊறவைக்கும் அச்சு வெல்லங்கள் நிறைந்ததோர் மிகப்பெரிய பை. சூப்பர் ! :)

  பதிலளிநீக்கு
 6. மிக்க நன்றி சார் சும்மாவின் அம்மாவின் பாட்டு அருமை என்று சொல்லியதற்கு :)

  தங்களுக்கு அபார ஞாபக சக்தி உண்டென்று எனக்குத் தெரியும் :)

  ஆமா ஆனால் பல்லுப் பல்லா போட்ட தேங்காய் நிரடும்போது முந்திரிப்பருப்பு போல மிகுந்த சுவையுடன் இருக்கும். :)

  சார் நீங்க சொல்லி இருக்கது மரக்கறிக்காய் தோசை. அதன் கீழே சில்வர் பௌலில் இருப்பதுதான் பாற்சோறு.

  அஹா வெல்லம் என்றால் நானும் சாப்பிடுவேனாக்கும் :) ஆம் அந்த பித்தளைச் சட்டிகள் மிகக் கனமானதாகத்தான் இருக்கும். துடுப்பு என்றொரு மரக்கரண்டி கொண்டு பொங்கலைக் கிண்டுவார்கள்.

  பதிலளிநீக்கு
 7. மாலை நான்கு மணிவரை நன்றாகத்தூங்கி விட்டேன். எழுந்ததும் இந்தப்பதிவினைப் பார்த்தேன், படித்தேன், பின்னூட்டமிட ஆரம்பித்தேன்.

  பின்னூட்டமிடும் போது, நடுவில் எனக்குப் பசி வந்ததாலும், ’சாப்பிட வாங்கோ’ என என் மேலிடத்திடமிருந்து அவசர அழைப்பு வந்து விட்டதாலும், நான் சற்றே இடைவேளை கொடுத்துவிட்டு சாப்பிடப்போய் விட்டேன். :)

  அனைத்தும் அருமையோ அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள ஹனி மேடம்,

  தங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:

  நான் ‘உணவே வா ... உயிரே போ’ என ஓர் பதிவு முன்பு வெளியிட்டிருந்தேன். http://gopu1949.blogspot.com/2011/03/blog-post_26.html

  அதில், எவர்சில்வர் பாத்திரங்கள் நம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே [சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு] என் தாயார் உபயோகித்துவந்த பல பாத்திரங்களின் பெயர்களை மட்டும், [படம் ஏதும் இல்லாமல்] எனக்குத்தெரிந்தவரை எழுதியிருந்தேன்.

  உதாரணமாக:

  தம்பாளம், சிப்பல், வெங்கல ஆப்பை, வெங்கலக்கரண்டி, ஜோடுதலை, அருக்கஞ்சட்டி, கோதாரிக்குண்டு, வெங்கலப்பானை, மாம்பழச்சொம்பு, நெய்க்கரண்டி-நெய் முட்டை, ரஸம் வைக்கப்பயன்படும் ஈயச்சொம்பு, பருப்புக்குண்டு, பருப்பு உருளி, பாயஸ உருளி, வெங்கல உருளி, ஈயம் பூசிய பித்தளைப்பாத்திரங்கள், குளிக்க வெந்நீர் போடும் அண்டா, குண்டான், பித்தளையில் தயாரித்த காஃபி ஃபில்டர்கள், மர உலக்கை, இரும்புக் கடப்பாரை, தேங்காய் உரிக்கப்பயன்படும் உரிகோல், காய்கறிகள் வெட்டும் இரும்பு அருவாமணை, தேங்காய் துருவப்பயன்படும் இரும்பு துருவளகா, குடிக்கும் வெந்நீர் சுடவைக்கும் கெட்டில், அம்மி - குழவி, ஆட்டுக்கல் - குழவி, வீட்டிலேயே ஈர அரிசியை உப்புமாவுக்கு ரவையாக அரைக்கும் / பொடிக்கும் கல் எந்திரம் [நடுவில் அரிசியை கொஞ்சம் கொஞ்சமாகப் போட ஓர் சிறிய குழியும், மேலே நாம் கைபிடித்துச் சுற்ற ஓர் மர அச்சும் அதில் இருக்கும்] etc., etc.,

  அதற்கு பின்னூட்டமிட்டுள்ள, [இன்று சுமார் 50-55 வயதாக இருக்கும்] பல பெண்மணிகளுக்கே அந்தப் பாத்திரங்கள் பற்றியெல்லாம் அதிகம் தெரியாமல்தான் உள்ளது.

  இந்த என் பதிவினில், நான் சொல்லியுள்ள அனைத்துப் பாத்திரங்களும், இன்று செட்டி நாட்டின் சில வீடுகளின் பரணைகளிலேயோ அல்லது தனியான ஒரு அறையிலேயோதான், நம் புராதனச்சின்னங்கள் போல பொக்கிஷமாகக் காணக்கிடைக்கும். முடங்கிக்கிடக்கும்.

  தாங்கள் தயவுசெய்து அந்த பிரும்மாண்டமான பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக புகைப்படம் எடுத்து, அவற்றின் பெயருடன் ஓர் தனிப்பதிவாக வெளியிட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

  தலைமுறை இடைவெளியால் இன்று 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், இனி பிறக்கப்போகும் புதிய தலைமுறைகளுக்கும், தாங்கள் வெளியிடப்போகும் பதிவு வரலாற்றுப் பொக்கிஷமாக ஓர் ஆவணமாக பயன்படக்கூடும்.

  அந்த என் அனுபவ நகைச்சுவைப் பதிவினை முழுமையாகப்படித்துவிட்டு, குறிப்பாக அதற்கு நம் சித்ரா, இளமதி, பட்டு, பூந்தளிர், திருமதி. மனோ சாமிநாதன் மேடம் ஆகியோர் எழுதியுள்ள பின்னூட்டங்களையும் படித்துப்பாருங்கோ.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 9. முதல் படம் வெகு அழகாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. :)

  //செட்டிநாட்டுப் பகுதியில் படைப்புக்கென்று தனி வீடுகள் உண்டு. //

  கொடுத்து வைத்த புண்யவான்கள் + புண்ணியவதிகள். :)

  இப்போ இங்கெல்லாம் வாழவோ, நிம்மதியாகப்படுத்துத் தூங்கவோகூட தனி வீடுகள் இல்லாமல், அடுக்குமாடித் தொகுப்பு வீடுகள் மட்டுமே. அதிலும் பலர் சொந்தமாக இல்லாமல் வாடகைக்குத்தான் குடியிருக்க வேண்டியுள்ளது.

  அருமையான பதிவுக்கும் பகிர்வுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 10. பலவற்றை இன்று தான் அறிந்து கொண்டேன்...

  ஐயாவின் கருத்துரைகள் அனைத்தும் அருமை...

  பதிலளிநீக்கு
 11. படைப்பிற்கான காரணம், பிரார்த்தனை, நேர்த்திக்கடன் ஆகியவற்றையும் பதிவு செய்தால் முழுமையடையும் மருமகளே. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. நன்றி கோபால் சார். நிச்சயம் எழுதுகிறேன். ஆனால் இன்று எல்லாம் பழசாகி பாலீஷ் போய் இருக்கும். :) ஊருக்கு ஊர், ஏன் வீட்டுக்கு வீடு கூட பாத்திரப் பெயர்களும் கூட வேறுபடலாம். :)

  கோபால் சார் படைப்பு வீடுகள் பொது. முன்னோர்கள் உருவாக்கியது. அது பொதுச்சொத்துப் போல. அதைப் பங்கிட முடியாது.

  கருத்துக்கு நன்றி டிடி சகோ

  கருத்துக்கு நன்றி மாமா. நீங்கள் அனுப்பிய பத்ரிக்கையில் இருந்த தீர்த்தம் எடுத்தல் , படைப்புப் பணியாரம் போன்ற விபரங்களை என் இடுகையில் எழுத விட்டுவிட்டேன். படைப்பு பற்றி விட்டுப் போன பக்கத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 13. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 14. படைப்பு அருமை தேனக்கா. சொந்த பந்தங்கள் சேர்ந்தால் மகிழ்ச்சி தானே..இதெல்லாம் விட்டுப்போகாமல் இருக்க வேண்டும்.
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...