எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 19 மே, 2015

கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

221. பெரியவர்களுடன் பேசும்போது சில சமயம் குழந்தைகளுடன் பேசுவது போல் இருக்கிறது.

222. ஒரு காலத்தில் வசிஷ்டர். இப்போது துர்வாசர்..

#ஹ்ம்ம்_காலம்.

223. ரெண்டுபேர் சண்டை போடுற இடத்தை எட்டிப்பார்க்கவே பயமா இருக்கு. ( நடுநிலைய சாக்கு சொல்லி நம்மளையும் ரெண்டு போடுவாங்களேன்னுதான் ) . தெரியாம எந்த லைக் பட்டன்லயாவது கை பட்ருமோன்னு பயந்து படிக்கவேண்டியதா இருக்கு. :)

224. காஃபி விடவே முடியாமல் எவ்வளவு இனிமைக் கசப்பு.

 ஃப்ரெஷ் டிக்காக்‌ஷன் எடுத்து ஃப்ரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணி வச்சிட்டு அப்போ அப்போ புதுசா பால் காய்ச்சி ரெண்டு ஸ்பூன் ஜீனி போட்டு நுரை வர ஆத்தி குடிச்சிட்டு முடிக்கும்போது காஃபியைக் கைவிட்டுறனும்னு நினைக்கிறது என்ன மாதிரியான ஹெல்த் கான்ஷியஸ்.. :)225. என் அன்பு கண்ணம்மா, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லம். வாழ்க வளமுடன் நலமுடன். தங்கையாய் தோழியாய் குழந்தையாய் இருக்கும் நீ சில சமயம் தாயுமானவள். ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல என் வாழ்வில் நுழைந்து வண்ணம் இறைத்துச் சென்றவளே. இறைவனிடம் உனக்காக என்ன கேட்கப் போகிறேன். என்றும் என்னுடன் நீ இருக்கும் வரம் தவிர. HAPPY BIRTHDAY KAYAL KANNAMMA. VAAZGHA VALAMUDAN , NALAMUDAN PALLAANDU

226. அன்பெனும் கயிற்றில் எங்களைப் பிணைத்திருக்கும் எங்கள் செல்ல ராஜிக்கா, உங்களுக்கு நாங்க என்ன செய்தோம் என்று தெரியல. ஆனால் எங்கள் தினங்களை நீங்கள் புதுப்பிக்கிறீர்கள் உங்கள் தன்னம்பிக்கையாலும் விட்டுக் கொடுத்தலாலும் அளவற்ற அன்பாலும், இடைவிடாத பாசம் செலுத்துதலாலும், முகநூல் வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக உங்களைக் கண்ட நாள் முதல் கற்றுக்கொண்டே இருக்கிறோம், ப்ரதிபலன் காணாது அன்பு செலுத்துவது எப்படி என்று.. இணையற்ற எங்கள் அக்கா, என்றும் வாழ்க வளமுடன் நலமுடன். அன்பு முத்தங்கள்  :)

227. பையன் :- நமக்கு வாய்த்த அடிமைகள் திறமையானவர்கள்.

என்னதான்  அப்பாவோட சண்டை போட்டாலும் பொரியல் கூட்டு குழம்புன்னு சமையல்ல அசத்திடுறாங்களே. கோபத்தைக் கொழம்புல காமிக்காம.

அப்பா :- டேய் ..!

அம்மா :- “ஙே ! “  
 


228.போன வருஷம் வந்த கவிதைத் தொகுதிக்கு விருது கிடைச்சிருக்கு.
.

.ஒரு சிறுகதைத் தொகுப்பு ரெடி. ஆனாலும் இந்த வருஷம் புத்தகம் கொண்டுவர என்னவோ யோசனை. நிறைய பழைய கசப்பு மனதின் அடியில் தங்கி இருக்கு, தெனாலிராமன் பூனை மாதிரி.
சமையல் குறிப்புகள் கூட ரெடிதான். புக்கா ஏன் கொண்டு வரணும். ப்லாகிலேயே போட்டுட்டுப் போயிடலாம்னு தோணுது.
‪#‎புத்தக_வெளியீடு_அரசியல்‬.

229. சாமி சாதி என்று தேடித் தேடி வேப்பிலை அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
‪#‎முகநூல்_பொழுதுபோக்கு‬.

230 .  எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்தலும் சரியான வார்த்தைப் ப்ரயோகமும் மேன்மையின் அங்கம்.

231. வாங்கிக்கொள்பவரே இல்லையெனும்போது கொடுத்துச் சிவந்தவர்கள் என் செய்வார்கள்.

232. எல்லா அன்பையும் பெண் பாசமாகக் கருதுகிறாள். ஆண் காதலாகக் கருதுகிறான்.

233.  பதறவைக்கிறது பெஷாவரில் குழந்தைகளின் மரணங்கள். :( :( :(

234. ஆதிக்கசாதிகள் பாவம் என  ஒரு கருத்து.
ஆதிக்க இடைநிலைச்சாதியும் காரணம் என ஒரு கருத்து.
இந்த அரசியலைப் புரிந்துகொள்ளாமல் கீழேயே இருக்கிறாயே என ஒரு கருத்து.

-- எல்லாரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்வது எப்படி என்று எழுத்தாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

235. விசுவசி" என்று பைபிளில் சொல்வது போலவும் "இறையச்சம் வேண்டும்" என குரானில் சொல்வது போலவும் "ஓம் தத் சத்"," அஹம் ப்ரஃமாஸ்மி"." தத்துவமஸி "என்பதும் "கடவுளை நம்பினோர் கைவிடப் படார்" என்பதும் என் நம்பிக்கைகளில் ஒன்று

236. பெண் முகத்தைப் பிடிக்கும் சிலருக்கு பன்முகத்தைப் பிடிப்பதில்லை.

237. மனதின் ப்ரதிகளாய் வாழத் துவங்கும்போது ஒளிர்கிறோம் சிலசமயம் ஒளிகிறோம்.


238. கலியாண கட்டா என்றால் முடி இறக்கும் இடம். கல்யாண உத்ஸவம் என்றால் திருக்கல்யாணம். ஒரே வார்த்தையை வைத்து  மொட்டைத்தலைக்கும் மேரேஜுக்கும் முடிச்சுப் போடுறாங்க ஆந்திராவில் . :)
 
239. புத்தகங்களுக்குள் கூடுபாய்வது புதுப்பிக்கிறது தினம்.  :) #ப்ரொஃபைல்_வேதாளம் :)

240. முகப்புத்தகத்துள்ளுறை மாந்தர்களே.. உங்கள் புத்தாண்டு ரெஸல்யூஷன் என்ன?

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.


5 கருத்துகள்:

 1. //புக்கா ஏன் கொண்டு வரணும். ப்லாகிலேயே போட்டுட்டுப் போயிடலாம்னு தோணுது.//

  அதுதான் நல்லது. எழுத்தாளருக்கும் வாசகருக்கும் நஷ்டமோ கஷ்டமோ ஏதும் இல்லாமல், படைப்புகள் உலகில் உள்ள பலரையும் சுலபமாகச் சென்றடையும். உடனுக்குடன் FEEDBACK க்கும் கிடைத்து எழுத்தாளருக்கு ஒருவித மனமகிழ்ச்சியைத்தரும்.

  பதிலளிநீக்கு
 2. இதையும் ஒரு பதிவாக்கி விட்டீர்களே..!

  பதிலளிநீக்கு
 3. பொரிவது அவரோடு முடிந்து போனால் சரி தான்... ஹா... ஹ...

  பதிலளிநீக்கு
 4. சரியா சொன்னீங்க கோபால் சார்

  அஹா ஸ்ரீராம். நாமெல்லாம் ப்லாகர்ஸ் இல்லையா.. அதான். :)

  டிடி சகோ :)

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...