எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 மே, 2015

கற்பெனப்படுவது யாதெனின்..

கற்பெனப்படுவது யாதெனின்

நைமிசாரண்யத்திலிருந்தவள்
நைருதிக்குக் கடத்தப்பட்டாள்.
நெருப்புக் குண்டம் நுழைந்து
நன்னிலை அறிவிக்கச் சொல்கிறது
ஈசான்யம்.

அல்டுமிஷ்கள் தீண்டுமுன்
கொழுந்துவிட்டெரிகிறது 
ஜௌஹார்குண்ட்.
ராஜ்புதனத்து ராணிகளை
சதி ஆலிங்கனம் செய்து.


வேலை வீடெனும் இரட்டைக்குதிரைச்சவாரியில்
ஆணாகிறார்கள் ஜான்சிராணிகள்.
வாரிசுரிமையற்றவர்களென்று 
எத்துகிறார்கள் புறமுதுகில் குத்துகிறார்கள்
ஆணெனப்படுபவர்கள்.

உராய்வுகளில் கற்பரசிகளின்
ஒழுக்கத்தை நிர்ணயிப்பவர்களின் முன்
நிணவீச்சத்தோடு குவிந்திருக்கின்றன
கிருஷ்ணாயிலில் தீக்ரீடையிட்ட
நாச்சியார்களின் அழண்டு கருகிய தோல்கள்.

கற்பெனப்படுவது யாதெனின்
தோல் உடம்பு உறுப்பில் உறைந்திருக்குமெனப்
பிதற்றும் ஆண்போகம் காமத்தின் அவரோகணம்
நிலவறைச் சட்டையுரித்து ஆரோகணிக்கும்போதே
இதயம் விடுபட்டுப் புத்துடல் முழுக்க பூட்டுகள்.

.

6 கருத்துகள்:

 1. மிகவும் கனமான வரிகள்...

  பதிலளிநீக்கு
 2. //இதயம் விடுபட்டுப் புத்துடல் முழுக்க பூட்டுகள்.//

  மிகவும் கொடுமையான விஷயங்களை தங்களுக்கே உரிய தனித்திறமையுடன் எழுதியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 3. அருமை! உடற்கற்பு, மனக்கற்பு என்று ரெண்டு இருக்குல்லே! ஆனால் ரெண்டாவது முக்கியம் இல்லைன்னு நினைக்குதே ஆண்வர்க்கம்:(

  பதிலளிநீக்கு
 4. நன்றி ஸ்ரீராம்

  நன்றி எழில்

  நன்றி கோபால் சார்

  நன்றி துளசி சரியா சொன்னீங்க

  நன்றி டிடி சகோ.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...