வியாழன், 14 மே, 2015

மயிலிறகு


பூங்காவின் சாயம் திப்பிய கிருஷ்ணன்
நெற்றியில் கட்டிய ஒற்றை மயிலிறகு
ஒரு மாறுவேடப்போட்டியில்
சிலையாக நிற்கவைத்தது குழந்தையை.
அசைந்து ஓடிக்கொண்டிருக்கும் அவனை
ஐந்து நிமிடங்கள் அசைவற்ற சிலையாக்கிய
பெருமைக்குள்ளானதாக அது
ஊர் ஊராக புத்தகங்கள் மத்தியில்
பயணப்பட்டுக்கொண்டிருந்தது.

அவனுக்குக் குழந்தைகள் வந்தும்
அது முதுமையடையவில்லை.
ஆட்டமும் பாட்டும் மறந்து
அசைவற்ற குழந்தைகள்
தொலைக்காட்சி முன்னிருக்க
கோடைச் சந்தையில்
புழுக்கத்தோடு விசிறியபடி
கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள்
மயிலிறகு விசிறியை.

டிஸ்கி :- இந்தக் கவிதை ஜூன் 1  2014 திண்ணையில் வெளிவந்தது.

.

6 கருத்துகள் :

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

மயிலிறகு விசிறியாக...
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மயிலிறகால் வருடிவிட்டதுபோன்ற மிகவும் அருமையான அழகான இதமான ஆக்கம். பாராட்டுகள்.

//டிஸ்கி :- இந்தக் கவிதை ஜூன் 1 2014 திண்ணையில் வெளிவந்தது. //

திண்ணையில் ஏறி அமர்ந்துகொண்ட மயிலிறகு விசிறிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

arumai

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி யாழ்பாவண்ணன் சகோ

நன்றி கோபால் சார். :) உங்கள் கடைசி கமெண்டைப் படித்து ரசித்தேன். :)

நன்றி

நன்றி டிடி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...