எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 மே, 2015

சின்னச் சின்ன சந்தோஷங்கள். :)

பீபிள்ஸ் டுடேயின் சப் எடிட்டர் உமாகாந்த் திருக்குமரன் தான் வாங்கிய புத்தகங்களை முகநூலில் முகப்புப் படமாகப் போட்டிருந்தார். ஆஹா அஞ்ஞாடிக்குப் பக்கத்தில் அன்ன பட்சி. என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி :)


ஃபேஸ்புக் முரசில் ஒன் லைனர்.

ஃபேஸ்புக் முரசில் ஒரு ஒன்லைனர் கேட்டு இன்பாக்ஸில் போடச் சொல்லி இருந்தார்கள். அதுதான் இது :)


” முள்ளும் இருக்கிறது என்று உணராமல் ரோஜா என்று கம்பீரமாக நினைத்துக் கொள்பவள் நான் “ என்று நான் என்னைப் பற்றி இப்படி எழுதி அனுப்பினேன். :)

நன்றி முரசு முழக்கம். :)

 ப்ளாக் & வொயிட்டில் அனைத்து முகநூல் நட்புகளுடனும் :)

வேர்க்கடலை வாங்கிய பொட்டலத்தில் அவள் விகடனில் வெளியான பொங்கப் பானை ஃபோட்டோ. இதை ஒரு நட்பு எடுத்து உள்டப்பியில் அனுப்பி இருந்தார். ஜனவரில வந்ததை அக்டோபர்ல பொட்டலம் கட்டிட்டாங்க. :)
குங்குமம் தோழியா தெரில.. மகளிர் தின வாழ்த்துகள் சொல்லி இருக்காங்க. :)

பன்னீர்செல்வம் சுமதி சகோவின் மகளிர்தின வாழ்த்து :)
மங்கையர் தின வாழ்த்து. :) ( யார்னு பேர் குறிச்சுக்காம விட்டுட்டேன் :(
காலகாலனின் கவிதைத் தொகுதி நெருஞ்சி ரிலீஸ் செய்தேன்  :) 2012 ஆ இருக்கலாம்.
நண்பர் செல்வகுமாரின் பிறந்தநாள் வாழ்த்தில் அம்மு போட்ட வாழ்த்து.நான் தேனம்மை லெக்ஷ்மணன். சொல்லும்போதே தெரிஞ்சிருக்குமே. கொஞ்சம் பெண்ணாதிக்கம் பிடிச்சவள்ன்னு. ஹாஹா ஆனா எங்கேயும் நிலை நாட்ட முடியல. பெரிய எழுத்தாளராகணும்னு ஏதேதோ எழுதிட்டு அதையே ரசிச்சுப் படிச்சிட்டு இருப்பேன் ஹாஹா. போதும் என் புராணம். கணவர் லெக்ஷ்மணன்@கண்ணன் வங்கிப் பணியில் கணக்காய்வாளர். எனக்கு இரண்டு பிள்ளைகள் வெங்கட், சபா, பொறியாளர்கள். உங்களை எல்லாம் சந்திக்க தினம் ஓடோடி வந்திட்டு இருக்கேன். ரெண்டு நாளா நாம தனியாளு இல்லைன்னு நெம்பத் தெம்பாத் திரியிறேன். நம்ம அன்பும் ஒற்றுமையும் என்றென்றும் இதே போல நீடிச்சிருக்க ஆசைப்படுறேன்.

2015 பெண்கள் தின மங்கை ஃபோட்டோ :)
 

2015 அன்னையர்தினத்தில் மகன் யாழகிலன் வாழ்த்துக்கூறிய ஃபோட்டோ. :)டிஸ்கி :- அதிரி புதிரி உதிரி எல்லாத்தையும் சேர்த்து ஒரு இடுகை போட்டாச்சு :)

நம்மையும் நினைவில் வைத்திருந்து அவ்வப்போது குறிப்பிடும் வலைத்தள முகநூல் நட்புகளுக்கு நன்றி நன்றி நன்றி :) !!!

5 கருத்துகள்:

 1. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவும் படமும் மிகவும் ஜோராக உள்ளன.

  //ஜனவரில வந்ததை அக்டோபர்ல பொட்டலம் கட்டிட்டாங்க. :)//

  ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! பொட்டலம் கட்டவே 10 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளார்களே :)

  பதிலளிநீக்கு
 2. இருந்தாலும் நம்முடைய படைப்பைப் பொட்டலத்தில் பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைத்ததே என்பதற்கு மகிழ்வதா சோகப்படுவதான்னு தெரியல கோபால் சார் :) பாராட்டுக்கு நன்றி கோபால் சார் :)

  நன்றி டிடி சகோ :)

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 4. அனைத்தும் ரசித்தோம். உங்கள் எழுத்துக்களை மிகவும் ரசிக்கின்றோம் சகோதரி! உங்கள் நல்ல மனம் உட்பட!

  பொட்டலத்தை இப்படி இந்தக் கோணத்தில் சிந்திக்கலாமோ என்று தோன்றுகின்றது. பரவாயில்லை புத்தகமாக, இதழாகப் பலரைச் சென்றடையாத உங்கள் கட்டுரையும், முகமும், ஒரு பொட்டலம் மூலம் ஒரு சிலருக்கு அறிமுகம் கிடைத்திருக்கலாம் இல்லையா? எங்களைப் போன்று ஒரு சிறு துண்டு பேப்பரையும் படித்தும் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு...(சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதற்கிணங்க.....ஒரு சின்ன துண்டு பொட்டலப் பேப்பரில் கூட நமக்கு எழுத கரு கிடைக்கலாமே.....உங்களை ஒரு பொட்டலம் கட்டுபவரும், அதை வாங்குபவரும் அறிந்திருப்பார்கள் என்று ...அந்தப் பேப்பர் நவராத்திரியின் போது கை மாறிக் கொண்டே இருக்கும் ரவிக்கைத் துணி போல கை மாறினால்...ஆஹா......அட "ஜே ஜே" படம்?!!!!

  வாழ்த்துகள் சகோதரி!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...