எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மகளிர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகளிர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 ஆகஸ்ட், 2025

புதுக்கோட்டை ஜெ ஜெ கல்லூரியில்

 புதுக்கோட்டை ஜெ ஜெ கல்லூரியில் ஒரு மகளிர் தினத்தில் உரையாற்றினேன்.

அப்போது போட்டிகள் சிலவற்றில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி உரையாற்றினேன். 

மாணவிகள் செட் செட்டாக விதம் விதமாக நடனமாடி மகிழ்வித்தார்கள். 

நன்றி தாளாளர்கள் திருமதி கவிதா சுப்ரமணியன் & திரு. சுப்ரமணியன்.


திங்கள், 30 மே, 2022

இராமசாமி தமிழ்க் கல்லூரியில் மகளிர் தின சிறப்பு விருந்தினராக.

 இராமசாமி தமிழ்க் கல்லூரியில் மகளிர் தின சிறப்பு விருந்தினராக.

காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில்  8.3.2022  அன்று நடைபெற்ற மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்.

முனைவர் திரு செ நாகநாதன் மிக அழகான வரவேற்புரை நல்கினார். முனைவர் கீதா தலைமை வகித்தார். அடுத்து நான் சிறப்புரை ஆற்றினேன். மாணவர்களுக்குப் பரிசளிக்கும் நிகழ்வில் முனைவர் பா. ஸ்ரீவித்யா பாரதி மாணவர்களை அழைக்க அவர்களுக்கு நூல் பரிசு வழங்கினேன். 

 


இவ்விழாவுக்கு என்னை அழைத்த இராமசாமித் தமிழ்க் கல்லூரியின் முனைவர் உதவிப் பேராசிரியர் திரு செ. நாகநாதன் அவர்கட்கும் மற்றுமுள்ள பேராசிரியர்கள் திரு. அன்பு மெய்யப்பன், நூலகருக்கும் நன்றிகள்.

வியாழன், 16 ஏப்ரல், 2020

பெண்கள்தினத்தில் மூன்று கருத்துக்கள்.

பேசுங்க... சகோதரிகளே பேசுங்க!!!
Raise your voice and make others to raise...!ari

#IWD2020 #EachforEqual #HappyInternationalWomensDay

It is time we encourage women to pursue their dreams, uplift their self-esteem, and celebrate all their talents. Click the below link and submit your video wishes and voice your views to celebrate women's achievement. Join together to raise awareness against bias and to take action for equality.

இது ஃபிப் 29, 2020, சனிக்கிழமை ரெக்கார்ட் செய்யப்பட்டது. இப்போது என்றால் இன்னும் சிலதைச் சொல்லி இருக்கலாம். பெண்கள் தினத்தில் பெண்கள் அனைவரையும் அரவணைக்கிறேன். உங்கள் உடல் மனப் பிரச்சனைகளைக் கடக்க மானசீகமாக உடன் நிற்கிறேன். மீண்டெழுந்து வாருங்கள். நீங்களும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி உங்கள் கருத்துக்களை வீடியோவில் தெரிவிக்கலாம்.

#இனிய_பெண்கள்_தின_நல்வாழ்த்துகள். அன்பும் அணைப்பும் கண்மணிகளே. <3 nbsp="" p="">
https://www.thereviewclip.com/review/International_Womens_Day_2020/nwx8aAPe

https://www.thereviewclip.com/profile/International_Womens_Day_2020?fbclid=IwAR0xy-wkGdd-s8zNkrcwE8vteEjYX0EP3lSrm_JhtLccUk6K6YnUeJ2nMv0


இந்தக் கருத்துக்களைக் கேட்டுட்டு உங்க பதிலையும் சொல்லுங்க மக்காஸ். 

திங்கள், 16 மார்ச், 2020

தமிழ் சினிமாவில் பெண்கள்

தமிழ் சினிமாவில் பெண்கள்.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமாயிற்று செல்லுலாயிட் பிம்பங்களின் ஆட்சி. இருபது வருடங்கள் பேசாப்படம் அதன் பின்பேசும் படமாக வந்து ஒரு நூற்றாண்டுக்குள் இந்தியர்களின் வாழ்விலும் செல்ஃபோனிலும் புகுந்து விட்டது.
சினிமாவை முதன் முதலில் உருவாக்கியது ஃப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூமியர் சகோதரர்கள் என்றபோதும் அதன் கோட்பாட்டை உருவாக்கிய பேல பெலாஸ் என்பார் ”நம்மை இனங்காணுதல் “ சினிமா என்ற கலையில்தான் நிகழ்கிறது என்கிறார். உண்மைதானே சாதாரணப் பெண்களும் சினிமா ஹீரோயின்கள் போல் உடை உடுத்துவதும் நகைகள் போடுவதும் இன்றும் உள்ளதுதானே.  
ஆதியில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்கள். மணிமேகலை, ஔவையார், காரைக்காலம்மையார் ஆகிய கதாபாத்திரங்களாக நடித்த கேபி சுந்தராம்பாள் ஆண் வேடமுமேற்று நந்தனாராகவும் நடித்திருக்கிறார். இவர் சட்ட மேலவை உறுப்பினராகி பத்மஸ்ரீ விருதும் பெற்றார். அதே போல் சேவாசதனம், பக்த மீரா, சாவித்ரியாக நடித்த எம் எஸ் சுப்புலெட்சுமி நாரதராக ஆண் வேடமேற்றும் நடித்திருக்கிறார். பாரத ரத்னாவும் ஆகியிருக்கிறார்.
ஹேமாமாலினி, வைஜெயந்திமாலா, விஜயசாந்தி ரம்யா, போன்றோர் எம்பிக்களாகவும். பலர் தேர்தல் பிரச்சாரத்தோடும் நின்று விட கொள்கை பரப்புச் செயலாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஜெயலலிதா முதல்வரானார்.

வெள்ளி, 16 மார்ச், 2018

மகளிர் தினத்தில் ஒரு சிறப்புப் பரிசு.

சென்றவாரம் மகளிர் தினத்தன்று ஒரு சிறப்புப் பரிசு கிடைத்தது எனக்கு. அதை வழங்கியவர்கள் முனைவர்  திரு வி டி மாணிக்கம் அவர்கள் குடும்பத்தார்.

திரு வெ தெ மாணிக்கம் அவர்களின் நூலான மருதத்திணையையும் ( ஆங்கிலம் ) அவரது மற்றைய படைப்புகளையும் கொண்டு சென்றவருடம் நடைபெற்ற நான்காம் உலகத்தமிழ்க் கருத்தரங்கில் திருமதி சத்யா அசோகன் தலைமையில் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் அவரது ஆக்கங்களைத் தொகுத்துப் பேசினேன்.

அது அன்றே புத்தகமாகவும் வெளிவந்தது. அதில் அவர் பற்றிய அரிய தகவல்கள் நிரம்பி இருந்தன. அவற்றைக் கொடுத்து உதவியர்கள் அவரது திருமதியார் திருமதி மீனாக்ஷி ஆச்சி அவர்கள்.

கணவரின் தமிழ்ப் பணிக்கு இதயமாக விளங்கியவர்கள். அவருடன் இருக்கும்போது தான் பெற்ற தமிழின்பத்தைச் சேமித்து அதை அமுதம் போல் தற்போது வழங்கி வருகிறார்கள்.

வெவ்வேறு ஊர்களில் நாடுகளில் இருக்கும் தங்கள் குடும்ப அங்கத்தினர்களை ஒன்று சேர்த்து ( தந்தையின் புகழையும் பெருமையையும் பற்றி எழுதிய ) என்னை கௌரவிக்க அவர்கள் இல்லத்துக்கு அழைத்திருந்தார்கள். அவர்களின் மகன்கள் மருமக்கள் முன்னிலையில் ஒரு பாராட்டுரை வாசித்துப் பட்டுப் புடவையோடு வழங்கினார்கள்.  இரண்டுமே மகாகனம் பொருந்தியவை. !

அன்று என்னை மட்டுமல்ல என் பெற்றோருக்கும் என் சின்ன மருமகளுக்கும் கூட பரிசளித்துக் கௌரவித்தார்கள்.

இவர்கள் எங்கள் அம்மா வீட்டுப் பங்காளிகள்.  எங்கள் உறவினர்கள். திரு வி டி மாணிக்கம் அவர்கள் எனக்குப் பெரியப்பா, அவர்கள் மனைவி திருமதி மீனாக்ஷி ஆச்சி பெரியம்மா ஆவார்கள்.

வெள்ளி, 10 மார்ச், 2017

சாஸ்த்ரி பவனில் மகளிர்தினக் கொண்டாட்டம்.



சாஸ்த்ரி பவனில் இந்த வருடமும் மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது செண்டரல் கவர்ன்மெண்ட் விமன் எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் அசோஷியேஷன் & சாஸ்த்ரி பவன் எஸ் சி/எஸ் டி விமன் எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் அசோஷியேஷன் சார்பில் கலந்து கொள்ளும்படி அழைப்புவிடுத்திருந்தார்கள். 

சனி, 30 மே, 2015

சின்னச் சின்ன சந்தோஷங்கள். :)

பீபிள்ஸ் டுடேயின் சப் எடிட்டர் உமாகாந்த் திருக்குமரன் தான் வாங்கிய புத்தகங்களை முகநூலில் முகப்புப் படமாகப் போட்டிருந்தார். ஆஹா அஞ்ஞாடிக்குப் பக்கத்தில் அன்ன பட்சி. என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி :)


ஃபேஸ்புக் முரசில் ஒன் லைனர்.

ஃபேஸ்புக் முரசில் ஒரு ஒன்லைனர் கேட்டு இன்பாக்ஸில் போடச் சொல்லி இருந்தார்கள். அதுதான் இது :)

செவ்வாய், 17 மார்ச், 2015

தமிழ்க்குஷியில் மகளிர் தினச்செய்தி (உரை ) ( 2015 ).



என்னுடைய பெயர் தேனம்மைலெக்ஷ்மணன். மகளிர் தினம் பற்றிய  என் கருத்தைக் கேட்ட தமிழ்க்குஷி.காமுக்கும் ஆர்ஜே திரு குமரன் அவர்களுக்கும் என் முகநூல் வலைத்தளத் தோழியர் அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள். 

வண்ணங்களால் நிறைந்தது வாழ்வு. ஆனால் இலக்கியத்திலாகட்டும் இதிகாசத்திலாகட்டும் பெண்ணைப் பணயமாக வைத்துத்தான் நடக்கிறது. நல்லவளாகவோ கெட்டவளாகவோ சித்தரிப்பதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. சீதையும் த்ரௌபதியும் இல்லாமல் ராமாயணம் மகாபாரதம் இல்லை. கணவன் சொல் கேட்டு ஐயம் தீர்க்கத் தீப்புகுந்தாள் சீதை. நெருப்பினுள்தான் நீர்க்கப்படுகிறது வாழ்வு. 

திங்கள், 15 ஏப்ரல், 2013

சூசைபுரம் செயிண்ட் ஜோசப் பள்ளியில் மகளிர் தினத்தில்

சூசைபுரத்தில் செயிண்ட்  ஜோசப் பள்ளியில்  மகளிர் தினத்தன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தது. என்னுடன் அழைக்கப்பட்டவர்கள் சாஸ்த்ரிபவனில் பெண்கள் சங்கம் மற்றும் தலித் பெண்கள் சங்கத்தின் தலைவியாக இருக்கும் மணிமேகலை அவர்கள் புதிய தலைமுறை டிவியில் ப்ரொடியூசராக இருக்கும் ஜென்னி அவர்கள் மற்றும் பெற்றோர்  சங்கத் தலைவர்  பழனி அவர்கள்.

லயன்ஸ் கிளப் மூலமாக பல்வேறு சமூகப் பணிகளை இலவசமாகச் செய்து தரும் மணிமேகலை இந்தப் பள்ளிக்கும் மாணவர்க்காக ஒரு கழிவறை கட்டித் தரும் பொறுப்பை ஏற்று அதை தான் சார்ந்துள்ள லயன்ஸ் கிளப் மூலமாக பண உதவி பெற்று வழங்கி இருக்கிறார். வாழ்க அவர் பணி.தனது பல்வேறு பணிக்கிடையிலும் அவர் அங்கு வந்து கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தன்னுடைய கருத்துக்களைக் கூறினார். எந்தச் சந்தர்ப்பத்திலும் படிப்பை விடாதீர்கள் என்பதே அன்று அவர் மாணவர்களுக்குச் சொன்னது.

வெள்ளி, 8 மார்ச், 2013

ஜெ ஜெ கல்லூரிகளில் மகளிர் தின விழா(2013) வில் சிறப்பு விருந்தினராக. .

சுமார் 1200 மாணவிகள், 300 ஆசிரியைகள் கொண்ட ஜெ ஜெ குழுமக் கல்லூரிகள் அமைப்பில் ( புதுக்கோட்டை) விமன்ஸ் எம்பவர்மெண்ட் விங் ( WOMEN EMPOWERMENT WING) கின் அழைப்பின் பேரில் 102 வது சர்வதேச மகளிர் தின உரை வழங்க அழைப்பு வந்தது. என் கருத்துக்களைப் பல்வேறு தரப்பட்ட மகளிருடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது. கற்பக விநாயகர் ட்ரஸ்டுக்கு நன்றி. 

திங்கள், 18 பிப்ரவரி, 2013

தீக்கதிரில் ..

சாஸ்த்ரி பவனில் நடைபெற்ற மகளிர் தினவிழா ( 2011) வுக்கு டாக்டர் கமலா செல்வராஜை சிறப்பு விருந்தினராகவும். என்னை சிறப்புப் பேச்சாளராகவும் அழைத்திருந்தார்கள். பெண்களுக்கான சங்கம் ஒன்றும் தலித் பெண்களுக்கான சங்கம் ஒன்றும் இணைந்து செயல்படுகிறது அங்கு. அந்த நிகழ்வில் டாக்டர் பெண்களின் கர்ப்பகால சிகிச்சைகள் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள்.

திங்கள், 21 ஜனவரி, 2013

மகளிர் தினத்தில் முத்துச்சரம் சமுதாய வானொலியில் எங்கள் கலந்துரையாடல்.

முத்துச்சரம் சமுதாய வானொலியில் சர்வதேச மகளிர் தினத்திற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குக் கொண்டு தங்களின் கருத்தினை பகிர்ந்துக் கொள்ள திரு ராமன் நாகப்பன்  ( எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் வானொலிப் பண்பலை ) அழைத்திருந்தார்.  அதற்கு நான்  முகநூலில் அழைப்பு விடுத்திருந்தேன்.

திங்கள், 15 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் விமர்சனம் திருச்சி தினமலர் பதிப்பில்..

திருச்சி தினமலர் பதிப்பில் சாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் 2012 மார்ச் 8 மகளிர் தினத்தன்று வெளியாகி உள்ளது. அதில் சுபா என்பவர் மிக அழகான விமர்சனம் அளித்துள்ளார். அதைப் படித்துத்தான் சிதம்பரம் மகளிர் கல்லூரியில் புத்தகத்தின் மாதிரிப் படிவம் கேட்டிருந்தார்கள். நான் அப்போது சென்னையில் இருந்ததால் விமர்சனம் வந்தது தெரியவில்லை.

செவ்வாய், 3 ஜூலை, 2012

எல்லாம் வெற்றியே..

ஒரு வல்லரசுக்கான எல்லா சக்திகளும் இந்தியாவிடம் பெருகி வருகிறது. இந்த சூழலில் எல்லா திசைகளிலிருந்தும் வரும் நெருக்கடிகளில் இருந்து அது தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. இறையாண்மையோடு கூடிய அரசியலைத் தக்க வைக்க அது பெரும் ப்ரயத்தனம்தான் செய்கிறது. அரசியல் தலைவர்களே தீர்வுகள் எடுக்கமுடியாமல் திணறும் போது தன் அன்றாட வாழ்க்கைக்கே போராடும் பொது ஜனம் என்ன மாறுதல்களை நிகழ்த்தி விட முடியும்..

நாம் மார்க் எடுக்கும் ப்ராடக்டுகளை உருவாக்குகிறோமே தவிர மாரல் நாலெட்ஜ் உள்ள குழந்தைகளை அல்ல. மனிதாபிமானம் மரித்து சுயநலம் ஓங்கி வருகிறது. எதிலும் நான்.. நான் .. நான் மட்டுமே. பொது நலம் என்பது பிள்ளைகளுக்கும் புகட்டப்பட வேண்டும். பள்ளிகளில் எல்லாவற்றுக்கும் பயிற்சிகள் இருப்பது போல மனவளக்கலையும் ஒரு வகுப்பாக நடத்தப்பட வேண்டும்.

ஆன்லைன் என்றொரு ராட்சசக் கரம் நம் அனைவரையும் இணைக்கிறது. தேவையற்றவற்றிலும் பிணைக்கிறது. செல்ஃபோன், ஐ பேட், லாப்டாப் என நாமும் பிள்ளைகளும் உலகம் முழுமைக்கும் ஊருடுவுகிறோம்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சாஸ்த்ரிபவனில் மகளிர் தினத்தில்.




INTERNATIONAL WOMEN’S DAY CENTENARY 1911-2011
CENTRAL GOVERNMENT WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION

Equal access to education, training and science and technology:
Pathway to decent work for women

19 th - TUESDAY APRIL 2011

CONFERENE HALL- I (A- WING) DURING : 3 TO 5.30 PM
SHASTRI BHAVAN CHENNAI

WELCOME ADDRESS : MANIMEGALAI - PRESIDENT
SECRETARY REPORT : SREE KUMARI - SECRETARY.
SPECIAL ADDRESS : JAYA SHREE - JT SECRETARY.
ANNUAL REPORT : PRABHAVATHY - ORG. SECRETARY,
CULTURAL PROGRAMME ; CHILDREN AND MEMBERS.


CHIEF GUEST : SMT. KAMALA SELVARAJ . MD.DGO. PHD.
OBSTETRICIAN AND GYNECOLOGIST
A PIONEER IN INFERTILLITY TREATMENT
GG HOSPITAL -CHENNAI

TOPIC :WOMEN GYNAC PROBLEMS

FELICITATION AND PRIZE DISTRIBUTION:
SMT. THENAMMAI
JOURNALIST . FREELANCER FOR 3 TAMIL MAGAZINES.

DR. SATHYA. CGHS . DISPENSARY
SHASRTI BHAVAN

SHRI.N.V.NAGARAJAN I.I.S.
JOINT DIRECTOR
DIRECTORATE OF FIELDPUBLICIY
SHASTRIBHAVAN

VOTE OF THANKS.:

PUSHPA DEVI- Treasurer

சாஸ்த்ரி பவனில் CGWEWA வுக்காக 19 ஏப்ரல் அன்று மகளிர் தினம் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்க அழைத்திருந்தார் யூனியன் லீடர் மணிமேகலை அவர்கள். அன்புத் தங்கை கீதாவின் மூலம் போராடி ஜெயித்த பெண்ணாக அறிமுகமான மணிமேகலை சிறந்த தோழியாகி விட்டார். டாக்டர் கமலா செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அந்த விழாவில் என் கருத்துக்களை மகளிரிடம் பகிர்ந்து கொள்ளவும் வெற்றி பெற்றவர்க்குப் பரிசுகளை வழங்கவும் அழைக்கப்பட்டிருந்தேன். அதற்கு சிறப்பு ப்ரஸ் கவரேஜாக தினமலர் நிருபரும், தீக்கதிரின் நிருபர் தங்கமும் அழைக்கப்பட்டிருந்தார்கள் .

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

துறைமுகத்தில் மகளிர் தினத்தில்..

மகளிர் தினத்தில் போர்ட் ட்ரஸ்டில் சிறப்புப் பேச்சாளராய்ப் பேச அழைத்தார் அதன் செகரட்டரி தனலெக்ஷ்மி. முதலில் தயக்கமாய் இருந்தாலும் என்னை சஜஸ்ட் செய்தவர் என் அன்பிற்கினிய தோழி விஜயலெக்ஷ்மி ஜெயவேலு என்பதால் சம்மதித்தேன். ஏஜிஸ் ஆடிட்டிங்கில் பணிபுரியும் இவர் ஃபேஸ்புக்கில் கீதாஜீவனுடனான லேடீஸ் ஸ்பெஷல்( குமரன் கல்யாண மண்டபம்) சுய உதவிக்குழுவில் பேசியது., கவிதைச் சங்கமத்தில் ( தேவநேயப்பாவாணர் அரங்கம்., ) பேசியது., கலைஞர் தொலைக்காட்சி செய்தியில் கவிதைச் சங்கமம் பற்றி கருத்துக் கூறியது., சேரன் மிஷ்கினுடன் யுத்தம் செய் கலந்துரையாடலில் பேசியது., கான குஹா ( இசைப்பள்ளி ) ஆண்டு விழாவில் பேசியது என மைக் மோகன் ரேஞ்சுக்கு மைக்குடன் இருக்கும் ஃபோட்டோக்களைப் பார்த்து நான் கட்டாயம் வரவேண்டும் என கூறினார்.