திங்கள், 15 ஏப்ரல், 2013

சூசைபுரம் செயிண்ட் ஜோசப் பள்ளியில் மகளிர் தினத்தில்

சூசைபுரத்தில் செயிண்ட்  ஜோசப் பள்ளியில்  மகளிர் தினத்தன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தது. என்னுடன் அழைக்கப்பட்டவர்கள் சாஸ்த்ரிபவனில் பெண்கள் சங்கம் மற்றும் தலித் பெண்கள் சங்கத்தின் தலைவியாக இருக்கும் மணிமேகலை அவர்கள் புதிய தலைமுறை டிவியில் ப்ரொடியூசராக இருக்கும் ஜென்னி அவர்கள் மற்றும் பெற்றோர்  சங்கத் தலைவர்  பழனி அவர்கள்.

லயன்ஸ் கிளப் மூலமாக பல்வேறு சமூகப் பணிகளை இலவசமாகச் செய்து தரும் மணிமேகலை இந்தப் பள்ளிக்கும் மாணவர்க்காக ஒரு கழிவறை கட்டித் தரும் பொறுப்பை ஏற்று அதை தான் சார்ந்துள்ள லயன்ஸ் கிளப் மூலமாக பண உதவி பெற்று வழங்கி இருக்கிறார். வாழ்க அவர் பணி.தனது பல்வேறு பணிக்கிடையிலும் அவர் அங்கு வந்து கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தன்னுடைய கருத்துக்களைக் கூறினார். எந்தச் சந்தர்ப்பத்திலும் படிப்பை விடாதீர்கள் என்பதே அன்று அவர் மாணவர்களுக்குச் சொன்னது.


நான் நம்முடைய எண்ணங்களும் குறிக்கோள்களும் நேர்மையாகவும் நியாயமாகவும் இருப்பின் அதை அடுத்தவர்க்குப் புரிய வைத்து ( அதாவது வீட்டில் இருக்கும் ஆண்மகன்களுக்குப்புரிய வைத்து ) நம்முடைய குறிக்கோளை எட்ட அவர்களது உதவியையும் கோரலாம். நிச்சயம் கிடைக்கும் என்று அந்தப் பெண்மணிகளுக்கும், குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை அளித்தேன்.

புதிய தலைமுறை நிகழ்ச்சித் தயாரிப்பளராக இருக்கும் ஜென்னி  அவர்கள் பெற்றோர் தம்மைத் தடை செய்வது பற்றியும் அதை மீறியே வெளிவரவேண்டும் என்றும் கூறினார். தடைகளை உடைத்தெறியுங்கள் என்று அவர் கூறியதைக் கேட்ட பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பழனி அப்பிடி எல்லாம் யாரும் தடை செய்யலை. இப்படி எல்லாம் குழந்தைகளுக்குக் கருத்து சொல்லாதீர்கள். என்றார்.

குழந்தைகள்  ஒரு வீட்டில் பெண்/ஆண் குழந்தைகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்., அவர்களின் சுதந்திரம், கல்வி, தடை பற்றி எல்லாம் எளிய முறையில் நடித்துக் காட்டினார்கள். நாம் பேச வந்த விஷயங்களை எல்லாம் அவர்கள் தொட்டுச் சென்று விட்டது போல இருந்தது. !

செல்ஃபோன் உபயோகிப்பது, ஆண் பெண் நட்பு, நமக்கான சுதந்திரம், கல்வி சுதந்திரம், திறமைகளை வளர்த்துக் கொள்ளல் ஆகிய விஷயங்களை நான்பகிர்ந்தேன். கட்டாயம் வேலைக்குச் சென்று தங்களின் மேல் நம்பிக்கை வைத்த தாய் தந்தையரின் கனவை நிறைவேற்றும்படியும் படிக்கும் காலத்திலேயே பருவ உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டுத் தடம் புரண்டுவிடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன்.

எனக்கான கருத்து சுதந்திரத்தில் என் கணவர் தலையிடாததாலேயே நான் அன்று அங்கு அவர்கள் முன் கருத்துக் கூற வர முடிந்தது. எனவே வீட்டில் இருக்கும் ஆணை அடக்குகிறார் என்று ( அப்பா, சகோதரன், கணவன், பிள்ளை )  வெறுக்காமல் நமக்கான சரியான சுதந்திரத்தை நாம் செயல்படுத்தும் போது அவர்கள் உணர்ந்து நம் குறிக்கோளை எட்டவும் உதவுவார்கள் என்பதே உண்மை என்ற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தி வந்தேன்.

மிக அருமையான கருத்துக்களை வளரும் பயிர்களில் மனதிலே பதிக்க முடிந்தமைக்கு நன்றி  செயிண்ட் ஜோசப் பள்ளித் தலைமை ஆசிரியை சிஸ்டர் ரெஜினாவுக்கும் தோழி மணிமேகலைக்கும்


4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நிகழ்ச்சியை பதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

வாழ்த்துக்கள்...

அமைதிச்சாரல் சொன்னது…

நாளைய தூண்களின் அஸ்திவாரத்தைப் பலப்படுத்தும்படியா உங்க உரை அமைஞ்சுருக்குது. இனிய பாராட்டுகள் தேனக்கா.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி சாந்தி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...