எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 ஏப்ரல், 2013

ரியாத் தமிழ்ச்சங்கம் - கல்யாண் நினைவுப் போட்டியில் மூன்றாம் பரிசுக்கு நன்றி.

கல்யாண் நினைவு கவிதைப் போட்டியினை என்னுடைய வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தேன். அதன் முடிவுகள் வெளியாகி விட்டன. அதில் தோழி கீதா முதல் பரிசும், சஹிதா இரண்டாம் பரிசும் ,  நான் மூன்றாம் பரிசும், தோழி ராமலெக்ஷ்மி ராஜன் சிறப்பு ஆறுதல் பரிசும் பெற்றிருக்கிறோம்.

நன்றி ரியாத் தமிழ்ச் சங்கத்துக்கும், நடுவர்கள் அபுல் கலாம் ஆசாத், ராஜ சுந்தர் ராஜன், மற்றும் நம் அன்பிற்குரிய நண்பர் பாரா என்ற பா ராஜாராம். :)


முக்கியமா இதை முகநூலில் பகிர்ந்திருந்த நண்பர் திரு ஷேக் முகம்மதுவுக்கும், முகநூலில் நான் இருந்த அந்த நேரம் அதில் கமெண்ட் செய்திருந்த அன்பு சகோ ஸ்டார்ஜனுக்கும் ஸ்பெஷல் நன்றிகள். :) 

ஸ்டார்ஜன் போட்ட கருத்தை ஒட்டியே இதைப் பகிர்ந்தேன். பரிசு கிடைத்த விபரம் அறிந்தபின் ஷேக் முகம்மது யார் எனத் தேடி நட்பு அழைப்புக் கொடுத்து நண்பராக்கிக் கொண்டேன்.  நடுவர் குழாமில் ஒருவர் ”இது சிறப்பான வாழ்வியல் பார்வை கொண்ட கவிதை “ என்று கூறினாராம். 

நாமும் பங்குபெறுவோம் என நினைத்துத்தான் ட்ராஃப்டில் இருந்ததை அனுப்பினேன். இன்னும் சிறப்பான கவிதையை அனுப்பி இருக்கலாமே என இப்போது நினைக்கிறேன்...   :) எனினும் நன்றி நட்புள்ளங்களுக்கு.

/////அன்புடையீர்,

ரியாத் தமிழ்ச்சங்கம் எழுத்துக்கூடம் நடாத்திய கல்யாண் நினைவு - உலகளாவிய கவிதைப்போட்டியின் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.உலகமெங்கிலிருந்தும் பலநூற்றுக்கணக்கான கவிஞர்கள் பங்கேற்றிருந்த இப்போட்டியில்
வென்றவர்கள் பட்டியல் இதோ...

முதல் பரிசு : (ரூபாய் 5000/-)
கவிதாயினி.திருமதி கீதாசங்கர் Geetha Shanker நைஜீரியா

இரண்டாம்பரிசு : (ரூபாய் 3000/-)
கவிதாயினி.திருமதி சஹிதா அக்பர் Shahidha Shahi புதுக்கோட்டை

மூன்றாம் பரிசு : (ரூபாய் 2000/-)
கவிதாயினி.திருமதி தேனம்மை லட்சுமணன், தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள் கும்பகோணம்.

*
சிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூபாய் 1000 பரிசு)

1. கவிஞர்.திரு. கணேசகுமாரன் Ganesa Kumaran, நாகை, சென்னை
2. கவிஞர்திரு. ஜவஹர்லால் ,தூத்துக்குடி
3. கவிஞர்திரு. கலாம் ஷேக் அப்துல் கதிர், துபாய்
4. கவிதாயினி.திருமதி. ராமலட்சுமி ராஜன் , பெங்களூர்
5. கவிஞர்.திரு. அ.கி.வரதராசன் சிங்கப்பூர்.

*
ரியாத் தமிழ்ச்சங்கத்தின் அன்புக் கோரிக்கையை ஏற்று பொது நடுவர்களாக பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்த மதிப்பிற்குரிய திருவாளர்கள்
1. அபுல் கலாம் ஆசாத்.
2. ராஜா சுந்தர ராஜன்
3. ப.ராஜாராம்

ஆகியோருக்கு இதயப்பூர்வமான நன்றிகள்.
*

பரிசு அனுப்பப் படும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகளையும், பங்கேற்ற அனைத்துக் கவிஞர் பெருமக்களுக்கு பாராட்டுகளையும் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.////


பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. தேர்ந்தெடுத்தமைக்கு ரியாத் தமிழ்ச்சங்கத்துக்கு நன்றிகள். 


6 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் சகோதரி...

  மற்ற அனைவரையும் குறிப்பிட்டது சிறப்பு...

  அடுத்த முறை சிறப்பானதை தேர்ந்தெடுத்து அனுப்ப வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கும், பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. ராமலக்ஷ்மி மேடம் தளத்திலேயே உங்களுக்கு மூன்றாம் பரிசு கிடைத்திருப்பதை கவனித்தேன். மனம் நிறைய மகிழ்ச்சி கொண்டேன். இங்கே என் மகிழ்வான நல்வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 4. பரிசு வென்றமைக்கு இனிய வாழ்த்துகள் தேனக்கா..

  பதிலளிநீக்கு
 5. நன்றி தனபால்

  நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி கணேஷ்

  நன்றி வெங்கட்நாகராஜ்

  நன்றி சாந்தி

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...