எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

தூது :-

தூது :-

{1984 இல் தலைவி இப்படித்தான் தூது விட்டிருப்பாளோ? மன்னிக்கவும். கற்பனைதான். )


நீலப்பறவையே,
என் தலைவனை
நீ
எங்காகிலும் கண்டால்
உன் தலைவி
மசாலா பாலும்
மட்டன் பிரியாணியும்
உண்ணக் கிடைக்காததால்
கைவளை நழுவ
கால்தண்டை அடகில் போக,
மெலிந்துவிட்டாள்.
உடுக்க பனாரசும்,
படுக்க டன்லப்பும்
ஏ.சி. யும் இல்லாமல்
மெலிந்துவிட்டாள்
என்று கூறு.
எனக்கு விரைவில்
எம்.ஓ.வில் ரூ. 10,000
அனுப்பி வைக்கச் சொல்.

-- தேனம்மை,
பாத்திமா கல்லூரி, மதுரை.

டிஸ்கி:- இந்தக் கவிதை ஏப்ரல் 1984, புதிய பார்வையில் வெளிவந்தது. 






4 கருத்துகள்:

  1. ஹா... ஹா... சரியாகத் தான் தலைவி சொல்லி உள்ளார்கள்... என்ன இன்று தொகை அதிகமாகலாம்...!

    பதிலளிநீக்கு
  2. அப்பவே பத்தாயிரம் தேவைப் பட்டிருக்கு தலைவிக்கு! :)

    தனபாலன் சொன்னது போல இப்போது அதிகம் தேவைப்படும்.....

    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபால்.. :) :) :)

    நன்றி வெங்கட்.. ஹிஹிஹி.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...