எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 27 ஏப்ரல், 2013

சேட்டை.

வீட்டில் வேலைக்குச் செல்லும் சகோதரர்களும், கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளும் இருந்தால் சேட்டையை நிச்சயம் ரசிக்கலாம். குப்பை மேடு போல படுக்கை, கரப்பான் ஊறும் சாப்பிட்டுக் காய்ந்த தட்டு,  காலியான தண்ணீர் பக்கெட்டுக்கள் என பாச்சிலர்ஸ் ரூமின் அட்டகாசங்களோடு ஆர்யா, சந்தானம், ப்ரேம்ஜி இவர்களும், ஹன்சிகா என்று மெழுகுச் சிலையும், அஞ்சலி என்ற ரப்பர் பெண்ணும் நடிச்சிருக்காங்க.


ஒரு துக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது  நீயா நானாவும், சொல்வதெல்லாம் உண்மையும் இன்னும் அழுகடிக்க ரங்கமணி என் மூடை சேஞ்ச் பண்ண இந்தப் படத்துக்கு அழைத்துச் சென்றார். எந்த துக்கம் நிகழ்ந்தாலும் உண்ணாமல் உறங்காமல் இருக்கிறோமா.. அது பாட்டுக்கு அது நடந்து கொண்டிருப்பது போல இதையும் போய்ப் பார்த்தேன்.


( ப்லாகில் தினம் ஒரு போஸ்ட் வருகிறதே என அனைவரும் யோசிக்கலாம். சோக மனநிலையில் கட்டாயம் எழுதவே முடியாது. இந்த போஸ்ட் எல்லாம் முன்பே திட்டமிடப்பட்டு எழுதி இரண்டு மாதத்துக்கு முன்பே  ப்ரீபோஸ்ட் செய்து வைத்திருக்கிறேன். நான் இல்லாவிட்டால் கூட இன்னும் ஆறு மாதத்துக்கு வாரம் ஐந்து நாட்கள் தினம் காலை 10 மணிக்கு போஸ்ட் பப்ளிஷ் ஆகும். )

அஞ்சலி அப்போது மீடியாவில் விழுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார். எந்த சானலைத் திருப்பினாலும் அஞ்சலி. இன்னும் ப்ரமாதமாக வந்திருக்க வேண்டிய பெண். எங்கே போனாரோ தெரியவில்லை. மாவடுவைக் கடித்தது போல வெடுக்கெனப் பேச்சும், சுட்டித்தனமான நடிப்புமாக அங்காடி தெருவிலும், எங்கேயும் எப்போதிலும் கவர்ந்தவர்.  இதில் பத்ரிக்கையாளராக. பொதுவாக பெண்கள் மட்டும் ஏன் திடீரென்று குண்டாகி விடுகிறார்கள். ஹீரோக்கள் அப்படியே இருப்பது போலிருக்கிறது.

அறிந்தும் அறியாமலும் கவர்ந்த ஆர்யா, நான் கடவுளில் திகைக்க வைத்த ஆர்யா இதில் வெறும் ரொமான்ஸ் ஆர்யா. எந்தப் பத்ரிக்கையாளனுக்கு இப்படி கோடிக்கணக்கில் சொத்து உள்ள அழகான பெண்ணைக் கட்டுகிறேன் என்கிறார்கள். கிடைச்ச ஹன்சிகாவை விட்டுவிட்டு தனக்கேற்ற அஞ்சலியோடு முடிவில் சேர்கிறார் ஆர்யா. அதே போல அஞ்சலியையும் பின்னால் துரத்தியபடி “ ஹாய் செல்லம் “ பாணியில் அவரை மணமுடிக்க விரும்பிய வில்லன் அங்கங்கே தலை நீட்டுகிறார்.

ப்ரேம்ஜி ஏதோ இன்னும் குழந்தைத்தனமாகவே தோற்றமளிக்கிறார். டாட்டுவோடு படுத்துக் கிடக்கும் ப்ரேம்ஜியைச் சுற்றிக் காமெடி  ட்ராக் ஆரஞ்ச் ஜூசாக ஓடுகிறது. ஒரு பெண்ணைக் காதலித்து“ அவ என்ன ரேப் பண்ணிட்டா” என்று கத்துவது மட்டும் என்னதான் காமெடியாக இருந்தாலும். கொஞ்சம் அசந்தர்ப்பம். நாந்தான் டஸ்ட் பின்னா, நீதான் ஒஸ்திப் பொண்ணா எனக் கத்திப் பாடும் பாட்டு கொஞ்சம் ஓவர் என்றாலும் பரவாயில்லை ரகம். மற்ற பாட்டுக்கள் என்ன என்று கூட ஞாபகமில்லை.

லாஜிக் , ம்யூசிக் எதுவும் பார்க்காமல் படத்தைப் பார்க்கலாம். வெள்ளைக்காரர் ஒருவரைப் பிடித்து மொட்டை அடித்து எங்கே வைரம் என்று அடித்து அடித்துக் கதற வைக்கிறார்கள். அவமானப் படுத்தவென்றே ஒரு ஆளை வைத்திருப்பது போல இருக்கிறது. நாசர் ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை.

சந்தானத்தைக் காமெடியனாக ரசிக்க முடிகிறது. ஆனால் எல்லாப் படங்களிலும் ஏ ஜோக் சொல்லும் காமெடியனாகவே வந்து விடுகிறார் அல்லது இதில் போல மூக்கைப் பிடிக்கவைக்கும் மோஷன் ஜோக்ஸ்.. ஹ்ம்ம்  இதை எல்லாம் சந்தானம் தவிர்ப்பது நல்லது. “ நீ விலகிக்க நான் காதலிக்கிறேன் “ என்று வேறு சொல்கிறார்..

ஹிந்தி ரீமேக் என்றாலும் டெல்லி பெல்லியின் அளவு சுவாரசியமில்லை என்று என் பையன் சொன்னான். நாங்கள் அதைப் பார்க்கவில்லை என்பதால் இதைப் பிடித்திருந்தது. ஒரு சில சீன்களில் ஆர்யாவும், ஹன்சிகாவும் புது வீட்டில் தங்குவதைப் பார்த்தால் லிவிங் டுகெதர் கலாசாத்தைச் சொல்கிறார்களோ எனத் தோன்றியது.

 கடத்தல் வைரம் என்று தெரியாமல் ஒரு பாக்கெட்டை யாரிடமோ சேர்ப்பிக்கச் சொல்லி ஏர்ஹோஸ்டஸ் ஹன்சிகா ஆர்யாவிடம் கொடுக்க அதை அவர் சந்தானத்திடம் கொடுக்க அவர் இலியானா சிக்கனைத் தின்று சீர்கெட்ட வயிற்றோடு அவதிப்பட்டு அந்த பார்சலையும், மோஷன் டெஸ்டுக்கான சாம்பிளையும் ப்ரேம்ஜியிடம்கொடுக்க  பார்சல் மாறி ஏற்படுத்தும் குளறுபடிதான் படம்.

ஹன்சிகாவைக் கடத்தி வைரத்தைத் தருமாறு வில்லன்கள் மிரட்ட, ஆர்யா அஞ்சலியின் உதவியை நாடுகிறார்.  கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்துப் பெண் தருகிறேன் என்று சொல்கிறார்கள் ஹன்சிகா வீட்டில். ஆனால் இங்கே வைர வியாபாரியிடம் சில லட்சங்களைப் பார்த்து வாய் பிளந்து இன்னொரு பத்ரிக்கை ஆரம்பிக்கலாம் என்று இவர்கள் விவாதிப்பது.. காமெடி..

 நடுவிலும் கடைசியிலும் அஞ்சலியின் உதட்டில் முத்தமிடுகிறார் ஆர்யா. பட் ஹன்சிகாவோடு முழுக்க முழுக்க சுத்திட்டு அஞ்சலி பக்கம் ட்ராக் மாறுவது ஒட்டவேயில்லை.

ரொம்ப ரசித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். நெல்லை சந்திப்பில்  டாக்டராக நல்ல நறுக் கதாபாத்திரம். இதில் ஹன்சிகாவின் அம்மாவாக. டைனிங்க்டேபிளில்  கத்தியால் வெட்டி ஃபோர்க்கால் பிரித்து ஸ்பூனால் வாழைப்பழத்தைச் சாப்பிடுகிறார். சிரித்துப் புரையேறிவிட்டது.

காசி தியேட்டர் ஃபுல் ஏசி. டிக்கெட் 120 ரூபாய், ஆனால் ஃபுல் தியேட்டரையும் ஓபன் பண்ணி கத்திரி வெய்யிலில் 21 நாள்  காயப்போடணும். எந்த சோபாவிலும் உட்காரப் பிடிக்கவேயில்லை. ஏதோ  மூச்சுவிட முடியாத ஒரு வாடையோடு அடைத்து வைத்த மாதிரி இருந்தது. கரப்பான் இருக்குமோ, மூட்டைப் பூச்சி ட்ரெஸ்ஸில் ஏறி இருக்குமோ என்ற பயத்தோடு எந்த வெல்வெட் சேரிலும்  நிம்மதியாக உட்காரவோ பார்க்கவோ முடிவதில்லை ஒவ்வொரு தரமும்.

தியேட்டருக்கு எல்லாம் மக்கள் ஏன் போக விரும்புவதில்லை என்பதற்கு டிக்கெட் விலையும் சுகாதாரமின்மையுமே காரணம்.

போனமா பார்த்தமா சிரிச்சமா ஏதோ பொழுது போச்சா அப்பிடிங்கிற மனநிலையில் இருந்தா இந்த சேட்டையைக் கட்டாயம் ரசிக்கலாம்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 


1 கருத்து:

  1. சென்னையில் சினிமா வேணா மா அப்ப. இந்த ஐநாக்ஸ் இதெல்லாம் எப்படி இருக்கு தேனம்மா. இந்தப் படம் பார்க்கலாம் போல இருக்கே

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...