எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 27 ஏப்ரல், 2013

கடிதப் போட்டியும் பரிசும்.

முகநூல் நண்பர் தாய் சுரேஷின் நிலைத்தகவலைப் பகிர்ந்துள்ளேன். 

///கடிதப்போட்டி
அன்பு முக நூல் நட்புக்களே,
எத்தனையோ சொல்ல முடியாத
ஏக்கம்,அழுகை,ஆதங்கம்,
பிரிவு,நட்பு,வன்மம்,அன்பு,காதல்,இப்படி எல்லாவற்றையும்
நாம் என்னதான் நம் நட்புக்களிடம்
பகிர்ந்தாலும் ஒரு கடிதமாய்
எழுதி அதை காற்றிலோ,அல்லது முகவரி இல்லா கடிதமாகவோ வைத்துக்கொள்வோம்..அப்படி வைக்கப்பட்ட
கடிதம் நிச்சயம் நம்
நினைவுகளை என்றோ ஒரு தினம் மீள்
வாசிப்பு செய்யத்தூண்டும்..


இப்படி கடிதத்தால் நாம் பெற்ற
உணர்வுகள் அழிந்து,இன்று முகநூல்
இணையம்,டிவிட்டர் என தட்டச்சில்
எழுதி எழுதி நம் " கையெழுத்தை"
மறந்துவிட்டோம்.இதை மீண்டும் நினைவூட்ட
தான் இந்த கடிதப்போட்டி.


நிபந்தனைகள்:
1.தங்கள் சொந்த கையெழுத்தில் தான்
இருக்க வேண்டும்.


2.தமிழில் வரும் கடிதம் மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படும்.


3.சிறந்த கடிதம்,சிறந்த
கையெழுத்து,சிறந்த கடித நடை என
முதல் மூன்று பரிசும் சான்றிதழும்
வழங்கப்படும்.


4.இது மட்டுமின்றி ஆறுதல் பரிசு 25
கடிதங்களுக்கு உண்டு.


5.கடிதங்கள் தங்களின்
நட்பு,வாழ்க்கை,பால்ய நினைவு என
உங்கள் விருப்பப்படி எழுதலாம்.


6.இந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள்
தங்கள் பெயரை கீழே குறிப்பிடவும்.


7.முகவரியும்,தொடர்பு எண்ணும்
தெளிவாய் இருக்க வேண்டும்.


8.அஞ்சல் எண் தவறாமல் குறிப்பிட
வேண்டும்.


9.அஞ்சல் வழி வரும் கடிதம்
மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


10.கடிதம் அனுப்பவேண்டிய
முகவரி கலந்து கொள்பவர்களின்
இன்பாக்ஸ்ல் வந்து சேரும்.


நிச்சயம் இந்த கடிதப்போட்டி அனைவரின்
நினைவுகளை மீண்டும் கண் முன்
கொண்டு வருமென நம்புகிறோம்.


கடிதங்கள் வந்து சேர வேண்டிய
கடைசி தேதி:30/04/2013


நன்றி: "கடிதங்களோடு பேசுவோம்"
நண்பர்கள் வட்டம்.
(இயன்ற நண்பர்கள் இதை பகிரலாம்)

நண்பர்களே உங்கள்
கடிதங்களை அனுப்பவேண்டிய
முகவரி இதோ,


தாய்சுரேஷ்,
கடத்தூர்(அஞ்சல்).
பாப்பிரெட்டிப்பட்டி(வட்டம்),
தருமபுரி(மாவட்டம்)-635303
மறவாமல் அனுப்புங்கள் கடைசி நாள்
30/04/2013



7 கருத்துகள்:

  1. என்றோ எழுதிய என் தலை எழுத்தை
    பிரும்மனும் மறந்து போனான்.
    ஏனோ என் கையெழுத்தை
    நானுமே மறந்து விட்டேன்.
    எழுது எழுது எனத் துடித்தாலும்
    என் விரல்கள் மறுக்கிறதே.
    மறந்துவிட்டதோ தமிழ் எழுத்தை.



    அஞ்சேல் எனத்துணிவுடன்
    அன்பான ஒரு கடிதம்
    அஞ்சலில் அனுப்பி வைப்பேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    www.vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. நான் எழுதத் தயார். கையெழுத்து நேர இல்லையே.
    பேனாவை லாண்ட்ரிக் கணக்கும் மளிகைக் கணக்கும் எழுத மட்டும் பிரயோசனப் படுத்துகிறேன்:(

    பதிலளிநீக்கு
  3. அடடா, ரொம்ப லேட்டாகப் பார்க்கிறேனே!! இன்னும் இரண்டு நாட்கள்தானே இருக்கிறது? :-(

    பதிலளிநீக்கு
  4. நன்றி சுப்பு சார்

    நன்றி வல்லிசிம்ஹன். உண்மைதான். என் கையெழுத்தும் அப்படித்தான்.

    நன்றி ஹுசைனம்மா.. அனுப்பிட்டீங்களா எல்லாரும்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. நன்றி தாய் சுரேஷ். :)


    ////"அத்தனை நன்றிகளும் உங்களுக்கே"
    ----------------------------------------------------------------------

    ஏப்ரல்-1 (ஏப்ரல்-1 முதல் மே-15 வரை 45 நாட்கள் )
    கடிதப்போட்டியை பற்றி அறிவிப்பு போட்டதும் ஒரு பக்கம் நிம்மதி இருந்தாலும்மறுப்பக்கம் ஏதோ முட்டாள் தனமான வேலையை செய்துவிட்டோமா எனும் சிந்தனைஓடிக்கொண்டே இருந்தது.
    அதை சுக்கு நூறாய் உடைத்து எறிந்தவர் ஆலம்பொழில் கடித இலக்கிய
    இதழின் ஆசிரியார் திரு.வலம்புரிலேனா அவர்கள் தான்.
    அறிவிப்பை பார்த்துவிட்டு "என்னய்யா இது
    எப்படி உனக்கு இப்படி ஒரு யோசனை "ரொம்ப சந்தோசமா இருக்குயா நல்லா பண்ணு எந்த உதவி வேண்டுமானாலும் நான் பண்ணுறன்.
    அது மட்டுமில்ல ரொம்ப சிறப்பா தேர்வாகும் கடிதங்களை
    "ஆலம் பொழில்" இதழில் போடுவதாகவும் உறுதி அளித்தார்.

    அதன் பிறகு தான் முழு நம்பிக்கையுடன் இதற்கான வேலைகளை ஒரு நண்பன் உடன் சேர்ந்து செய்யத்தொடங்கினேன்.வேலை அதிகமாகும் கட்டத்தில் அவனும் விலகிக்கொண்டான்.

    இதனால் என்ன ஆகிவிடப்போகிறது என்று தனி ஒருவனாக செய்யத்தொடங்கினேன் முதல் கட்டமாய்
    6 சிற்றிதழ் ஆசிரியர்களை தொடர்புகொண்டு பேசினேன் இந்த தகவலை சொன்னதும் யாருமே மறுக்காமல்
    இலவசமாய் அறிவிப்பு தருவதாய் ஒப்புக்கொண்டு அறிவிப்பும் தந்தனர்.

    அந்த இதழ்கள்,

    1.பயணம்,விருதுநகர்

    2.சுகன்,தஞ்சை.

    3.கருந்துளை,பொள்ளாச்சி

    4.கல்வெட்டு பேசுகிறது,சென்னை

    5.வளரி, மானா மதுரை

    6.ஏழைதாசன்,சென்னை.

    அனைத்து இதழ் ஆசிரியர்களுக்கும் நன்றி ..

    இது மட்டுமின்றி குறுஞ்செய்தியிலும் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பினேன்.

    இந்த கடிதப்போட்டி பற்றி அறிந்து தான் கடிதம் எழுதி பல நாட்கள் ஆயிற்று மீண்டும் எழுதத் துவங்கிவிட்டேன் என எங்களது ஊக்கத்தை மேலும் அதிகப்படுத்தி தன் நண்பர்கள்அனைவருக்கும் நானனுப்பிய குறுஞ்செய்தியை அனுப்பி பெரிதும் உதவிய
    திரு.கணேஷ குமாரன் அவர்களுக்கு நிறைய நன்றிகள் சொல்லி கொள்கிறேன் .....
    அவர் மூலம் இரண்டு அருமையான மனிதர்களை அண்ணன்களாக
    கிடைக்கப்பெற்றேன்

    அவர்கள்,

    1.திரு.ராஜன்,தென்காசி.

    2.திரு.பிரபாகரன் சிவசுப்ரமணியன்,உடுமலைபேட்டை

    இன்று வரை இவர்கள் மூவரும் கடித்தப்போட்டி குறித்து அவ்வப்போது கேட்டு ஊக்கப்படுத்திக்கொண்டு
    இருக்கிறார்கள்...இன்னும்நிறைய நன்றிகள் மூவருக்கும்..

    இவர்களோடு,

    திருமதி.தனலட்சுமி பாஸ்கரன்,

    திரு.ஸ்ரீதர் பாரதி,

    திரு.வலம்புரி லேனா

    திரு.பெரியசாமி,

    திருமதி.கல்பனா ஸ்ரீ,

    திருமதி.விஜி,

    திரு.ஆனந்தன்,

    திரு.கணஷ் சிவா,

    திரு.பூபாலன்,

    திரு.வ கீரா ,

    திருமதி.எழில் அருள் ,

    திரு.ஆனந் குமார்,

    திரு. நந்தன் ஸ்ரீதரன்

    இன்னும் நினைவில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் அவ்வப்போது கடிதப்போட்டி பற்றி பகிர்ந்தும்,புதிப்பித்தும் மிகப்பெரிய உதவிகளை செய்து உள்ளனர்.
    உங்கள் அனைவருக்கும் மலை அளவு நன்றிகள்....

    கடிதப்போட்டி பற்றி அறிந்ததும் தான் தொகுத்த கடித்தொகுப்பு நூலை வாழ்த்தோடு அனுப்பிய

    திரு.முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன் அவர்களுக்கும்,

    தனது கவிதைகளோடு வாழ்த்து மடல் அனுப்பிய

    திரு.பேனா மனோகரன் அவர்களுக்கும்

    மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு


  7. இந்த போட்டி பற்றி தனது இணையத்தில் எழுதி பலருக்கு அரியச்செய்த

    திருமதி.தேனம்மை லக்ஷ்மணன்,

    திருமதி.தனலக்ஷ்மி பாஸ்கரன்,

    இருவருக்கும் எனது நன்றிகளை சொல்லிக்கொண்டே இருக்கிறேன் இன்று வரை.

    முக நூல் பிரபலங்கள் இருவருக்கு நான் நன்றி சொல்லி ஆக வேண்டும் அவர்கள் சிறிதாய் செய்தாலும்
    அவை பெரிதாய் பேசப்படும்
    அவர்கள்,

    1.திரு.மழைக்காதலன்

    2.திரு.பரிமேழகன் பரி

    மிக்க நன்றி சார் இருவருக்கும் ......

    இதில் நான் மறந்து நன்றி சொல்லாமல் விடுபட்ட நண்பர்கள் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள்
    உங்களுக்கும் சேர்த்து பல நன்றிகள் சொல்லி உள்ளேன்....

    தனி ஒருவானாய் முடிந்த அளவு முக நூல்,குறுஞ்செய்தி,உள்நாட்டு அஞ்சல்(இன்லேன்ட் லெட்டர் ),
    தபால் தலை ஒட்டிய அஞ்சல் என தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் ஓரளவு இந்த போட்டி பற்றி
    அறியச்செய்து விட்டேன்...

    இதில்,

    150 பேருக்கு உள் நாட்டு(இன்லேன்ட் லெட்டர் ) அஞ்சலில் இந்த செய்தியை அச்சிட்டு அனுப்பி உள்ளேன்.
    இத்துடன்,
    75 இதழ்களுக்கும் நகல் எடுத்து தபால் தலை ஒட்டி அனுப்பி உள்ளேன்...

    என்னால் முடிந்த அளவு செய்துஉள்ளேன் நண்பர்களே...ஏதேனும் குறைகள் இருப்பின் மன்னியுங்கள்
    இதற்கு ஊக்கமாய் இன்று வரை 65 கடிதங்கள் வந்து மகிழ்ச்சியை தந்துள்ளது...போட்டி என்று பார்க்காமல் இத்தனை பேரை எழுத வைத்து விட்டேன் என்ற மகிழ்ச்சியே அதிகமாய் உள்ளது....இந்த போட்டிக்கு கிடைத்த நல்ல வரவேற்பினால் இனி இப்போட்டி
    வருடம் தோறும் ஏப்ரல்-மே இல் நடக்கும்.
    பங்குப்பெற்ற அனைவருக்கும்,இப்போட்டிப்பற்றி பகிர்ந்து கொண்ட
    அனைத்து உள்ளங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...

    (இப்போட்டி தொடங்கிய நாள் முதல் நிறைய நண்பர்களின் செய்திப்பெட்டியில் இந்த தகவலை
    பகிர்ந்தேன்,அப்படி செய்ததில் நிறைய பேருக்கு மன வருத்தம் உள்ளதாய் நண்பர்கள் மூலம்
    அறிந்தேன்.என்னால் ,இந்தப்போட்டியால் ,நான் தங்கள் செய்திப்பெட்டியில் பகிர்ந்த தகவலால்
    மனவருத்தம் அடைந்த அனைவரிடமும் மன்னிப்புகேட்டுக்கொள்கிறேன் )

    இனி இப்போட்டியின் முடிவு அன்று வெற்றிப்பெற்ற நண்பர்களின் பெயர்களோடு உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே ...........

    ***************அத்தனை நன்றிகளும் உங்களுக்கே *******************

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...