எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 11 ஏப்ரல், 2013

திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஹலோ எஃப் எம்மில் எனது பேட்டி.

முகநூலில் தோழர் தோழிகளாக இருப்பவர்கள் மூலமே நான் பல்வேறு வகைகளில் இனம் காணப்பட்டேன். அதில் வானொலி தொடர்பாக என்னை அணுகியவர்கள் கவிதா சொர்ணவல்லியும், ஜெயகல்யாணியும்.

பொதிகைக்காக திரு ப்ரேம் சாகர் அணுகியிருந்தார். மிக நல்ல தொடக்கங்கள் எல்லாம் எனக்கு முகநூல் மூலம் கிட்டின. அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் கிடைத்தது நான் செய்த தவம்தான்.


செப்டம்பர் 17 அன்று முகநூல் உள்டப்பியில் தொடர்பு கொண்ட ஜெயகல்யாணி என்னுடைய பேட்டி மறுநாள் அஞ்சரைப் பெட்டிக்காகத் தர முடியுமா எனக் கேட்டு தொலைபேசி எண்ணைக் கேட்டிருந்தார். நானும் ஒப்புக் கொண்டேன். மிக அருமையான குரலில் அவர் என்னை வினவ நானும் மிக இயல்பாகப் பதில் ( தொலைபேசியில் ) அளித்திருக்கிறேன் . கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்.


http://soundcloud.com/sabalaksh/hellofm-18-september-2012-13-1

இந்த இணைப்புக்களை ஜெயகல்யாணி எனக்கு அனுப்பி இருந்தார். அதை என் சிறிய மகன் ஆடியோ ஃபைலாக இருந்ததை இதில் போட்டுக் கொடுத்திருக்கிறான். நன்றி பிள்ளைகளுக்கும் நண்பர்களுக்கும். 

நன்றி மக்காஸ். 


10 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள்

  ஆனால் நீங்க தந்த 2 லிங்க் ஓபன் ஆகுது சத்தம் வரவில்லை ஒண்ணுமே கேட்க்குதில்லை ...

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் ஆசைப்பட்டபடி பலவிருதுகள் வாங்க வேண்டும் இலக்கியதுறையில்.
  இரண்டு லிங்கிலும் கேட்டேன்.
  குடும்பம் அனுசரணையாக இருப்பது தான் உங்கள் பலம் தேனம்மை. மேலும், மேலும் புகழ் வந்து சேரட்டும்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. முகநூல் உறுப்பினராக இருந்தால் மட்டும்தான் கேட்க முடியுமோ?

  என்னால் கேட்க முடியவில்லையே...

  எனினும் வாழ்த்துக்கள் தோழி, உங்கள் குரல் வானொலியில் ஒலிபரப்பானமைக்கு.

  பதிலளிநீக்கு
 5. நன்றி ஸாதிகா

  நன்றி சீராளன்.. அடோப் ஃப்ளாஷ் ப்ளேயரை ஆக்டிவேட் செய்து பாருங்கள்.

  நன்றி கோமதி

  நன்றி தியா

  நன்றி மாதேவி

  நன்றி கீதமஞ்சரி.அடோப் ஃப்ளாஷ் ப்ளேயரை ஆக்டிவேட் செய்து கேட்டுப் பாருங்கள் தோழி.

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...