சென்றவாரம் மகளிர் தினத்தன்று ஒரு சிறப்புப் பரிசு கிடைத்தது எனக்கு. அதை வழங்கியவர்கள் முனைவர் திரு வி டி மாணிக்கம் அவர்கள் குடும்பத்தார்.
திரு வெ தெ மாணிக்கம் அவர்களின் நூலான மருதத்திணையையும் ( ஆங்கிலம் ) அவரது மற்றைய படைப்புகளையும் கொண்டு சென்றவருடம் நடைபெற்ற நான்காம் உலகத்தமிழ்க் கருத்தரங்கில் திருமதி சத்யா அசோகன் தலைமையில் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் அவரது ஆக்கங்களைத் தொகுத்துப் பேசினேன்.
அது அன்றே புத்தகமாகவும் வெளிவந்தது. அதில் அவர் பற்றிய அரிய தகவல்கள் நிரம்பி இருந்தன. அவற்றைக் கொடுத்து உதவியர்கள் அவரது திருமதியார் திருமதி மீனாக்ஷி ஆச்சி அவர்கள்.
கணவரின் தமிழ்ப் பணிக்கு இதயமாக விளங்கியவர்கள். அவருடன் இருக்கும்போது தான் பெற்ற தமிழின்பத்தைச் சேமித்து அதை அமுதம் போல் தற்போது வழங்கி வருகிறார்கள்.
வெவ்வேறு ஊர்களில் நாடுகளில் இருக்கும் தங்கள் குடும்ப அங்கத்தினர்களை ஒன்று சேர்த்து ( தந்தையின் புகழையும் பெருமையையும் பற்றி எழுதிய ) என்னை கௌரவிக்க அவர்கள் இல்லத்துக்கு அழைத்திருந்தார்கள். அவர்களின் மகன்கள் மருமக்கள் முன்னிலையில் ஒரு பாராட்டுரை வாசித்துப் பட்டுப் புடவையோடு வழங்கினார்கள். இரண்டுமே மகாகனம் பொருந்தியவை. !
அன்று என்னை மட்டுமல்ல என் பெற்றோருக்கும் என் சின்ன மருமகளுக்கும் கூட பரிசளித்துக் கௌரவித்தார்கள்.
இவர்கள் எங்கள் அம்மா வீட்டுப் பங்காளிகள். எங்கள் உறவினர்கள். திரு வி டி மாணிக்கம் அவர்கள் எனக்குப் பெரியப்பா, அவர்கள் மனைவி திருமதி மீனாக்ஷி ஆச்சி பெரியம்மா ஆவார்கள்.