திங்கள், 21 ஜனவரி, 2013

மகளிர் தினத்தில் முத்துச்சரம் சமுதாய வானொலியில் எங்கள் கலந்துரையாடல்.

முத்துச்சரம் சமுதாய வானொலியில் சர்வதேச மகளிர் தினத்திற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குக் கொண்டு தங்களின் கருத்தினை பகிர்ந்துக் கொள்ள திரு ராமன் நாகப்பன்  ( எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் வானொலிப் பண்பலை ) அழைத்திருந்தார்.  அதற்கு நான்  முகநூலில் அழைப்பு விடுத்திருந்தேன்.


அந்த அழைப்பை ஏற்று ஜெயந்தி ரமணி ( பிஎஸ் என் எல்) , ஆர்த்தி மங்களா சுப்பிரமணியன் ( இளம் மாஜிஷியன்) , பத்மாவதி வே ( இளம் பாடலாசிரியர் & சாதனை அரசி ) , ரம்யா தேவி ( ப்லாகர் & போராடி ஜெயித்த சாதனை அரசி, அவரது அக்கா காயத்ரி, அர்ச்சனா அச்சுதன் ( போராடி ஜெயித்த பெண் ) மற்றும் அவரது தாயார் அர்ச்சனா அச்சுதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

பங்கேற்று மிகச் சிறப்பாகக் கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.   பத்மாவதி வே மிக அருமையாகப் பேசியும் கருத்துக்களை முன்வைத்தும் அனைவரது கவனத்தையும் கவர்ந்து விட்டார்.

அன்று அந்த நிகழ்வைத் தங்களுடைய புத்தக நிலையத்தில் நடத்த ஒப்புக்கொண்ட  சகோ வேடியப்பனுக்கும் நன்றி.

அந்த நிகழ்வின் புகைப்படங்களை இந்த முகநூல் இணைப்பில் காணலாம்.


அதன் பின் சகோ நாகப்பன் அவர்கள் அந்த நிகழ்விற்கான இணைப்பை அனுப்பி இருந்தார்கள் . அவர்களுக்கும் நன்றி./////அன்பு தோழிகளுக்கு,
எனது மகளிர் தின நல் வாழ்த்துகள்.
எங்கள் "முத்துச்சரம்" வானொலியில் இன்று முதல் நிகழ்ச்சியாக   "வாகை சூடுவோம் வா பூவையே" என்ற உங்களின் கலந்துரையாடல் ஒலிப்பரப்பானது....
மேலும் எங்களின் சமுதாய வானொலி குழும இணையத்திலும் இதை இணைத்துள்ளோம் அதன் இணைப்பு முகவரியினை யும் இணைத்துள்ளேன்....


தொடந்து உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

நன்றி,

ஈரமண்ணின் நேசத்துடன்,
ரா.நாகப்பன்.//////

நன்றி நாகப்பன் எங்களை அழைத்தமைக்கு. எங்கள் கருத்துக்களைப் பலர் அறியும் வண்ணம் பகிர முடிந்தது. நிகழ்வைத் தொகுத்து வழங்கவும் என்னை அழைத்தமைக்கு நன்றி.

டிஸ்கி:- இந்த நிகழ்ச்சி 2012 பிஃப்ரவரி 29 அன்று டிஸ்கவரி புக் பேலசில் பதிவு செய்யப்பட்டது.


3 கருத்துகள் :

மாதேவி சொன்னது…

கலந்துரையாடல் நிகழ்ச்சியின் படங்கள் காணக்கிடைத்தது.

நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்களுக்கு வாழ்த்துகள்.

பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மாதேவி.:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...