எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 ஜனவரி, 2013

ரோஜா ரூஃபினாவின் மொழிபெயர்ப்பில் A ROSE IS A ROSE IS A ROSE.!!

ரோஜா:-

நேற்றுப் பெய்த மழையில்
மாடியின் தளத்திலும்
கைப்பிடிசுவற்றிலும்
ஈரப்பூக்கள் பூத்துக்
கொண்டேயிருந்தன...

துணி எடுக்கச் சென்ற நான்
தன்னையுமறியாமல்
கன்னங்களை அழுந்தத்
துடைத்துக் கொண்டேன்...

நேற்று நீ இட்ட முத்தம்
ரோஜாவும் முட்களுமாய்
கன்னம் வழி கசிந்து
பூத்துக்கொண்டிருக்கிறதோவென்று..

இது என்னுடைய பூ கவிதை. 2009 செப்டம்பரில் என் ப்லாகில் வெளிவந்தது

இதை என் அன்புத் தோழி ரூஃபினா ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்திருக்கிறார், மிக அருமையாக.. நன்றி ரூஃபினா. :) இது அவருடைய வலைத்தளமான ப்லாசமில்  2011 நவம்பரில் வெளியாகி உள்ளது.

A ROSE IS A ROSE IS A ROSE.!!



WATER FLOWERS BLOSSOM
IN YESTER RAINS

OPEN THEIR PETALS
ON THE FLOOR OF TERRACE
AND ALSO ON THE SLANTING WALLS.

I
WENT TO THE UPSTAIRS
JUST TO TAKE
THE DRIED CLOTHES.
BUT
RUBBED MY CHEEKS,
DOUBTING WHETHER
YOUR WET KISS
I RECEIVED YESTERDAY
WITH ROSE AND THORNS
IS STILL THERE
IN MY ROSY CHEEKS.

http://blossom111111.blogspot.in/2011/11/rose-is-rose-is-rose.html


4 கருத்துகள்:

  1. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. //இது என்னுடைய பூ கவிதை. 2009 செப்டம்பரில் என் ப்லாகில் வெளிவந்தது. //

    இதுவரை, இந்தக் கவிதை இன்னப் பத்திரிகையில் வெளிவந்தது என்றூதான் குறிப்பு எழுதுவீங்க. இது என்ன, உங்க பதிவில் வந்ததையே சொல்றீங்களேன்னு யோசிச்சே.. ஓ, ஆங்கில மொழிபெயர்ப்பு பின்னாடி வருதா!! :-)))

    பதிலளிநீக்கு
  3. நன்றி ராஜி

    நன்றி ஹுசைனம்மா.. ஹாஹா செம.. :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...