எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 29 ஜனவரி, 2013

மதுரைச் சிறப்பிதழ் சிப்பி அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.

மதுரைச் சிறப்பிதழ் சிப்பி
அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.
****************************************

ரோட்டோரம் ,
வீட்டோரம்
கையைப் பிடித்துக்
காலைத் தடவி
யாசிக்கும் கரங்கள்.

சாலையோரம்
பாலுக்கு அழும் குழவியாட்டம்
காய்ந்து கிடக்கும்
தரிசு நிலங்கள்.


சிகரெட் விளம்பரத்திற்கு
பெண்களை
போகப் பொருளாக்கியிருக்கும்
அற்புதக் காட்சிகள்.

பொதுவுடமை பொதுவுடமையென்று
கத்திவிட்டுக் காரில் ஏறி
பங்களாவுக்குப் போகும்
பொதுநலவாதிகள்.

ஐயாயிரத்துக்கும்
பத்தாயிரத்துக்கும்
தங்களை ஏலமிட்டுக் கொள்ளும்
ஆண் வர்க்கங்கள்.
நமக்கென்ன..?

நாம்
பிளாக்கில் டிக்கெட் எடுத்து
சினிமா பார்ப்போம்,
மதுவிலக்கை ரத்து செய்வோம்.

ஆடுவோமே - கள்ளு
குடிப்போமே..
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...