எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 10 ஜனவரி, 2013

முகநூலில் கொஞ்சம் “ஙே..”

1.:-அவர் எதுக்கு திடீர்னு அர்ஜண்டா சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் கேக்குறாரு.

 2.:-அவர் ஒய்ஃப் சென்னைக்கு போகாட்டா விவாகரத்து பண்ணிடுவேன்னு சொல்லிடுச்சாம்.

1.:- அப்பிடி என்ன பிரச்சனை அவங்களுக்குள்ள..?

2.:- கெரகம் கரண்டுப் பிரச்சனைதான்..சென்னையில 22 மணி நேரம் கரண்ட் இருக்காம், மத்த ஊர்லஎல்லாம் 2 மணி நேரம்தான் கரண்ட் இருக்காம்.

1.;- “ஙே..!”

******************************************

50 வயதுக்குமேல் ஆண்கள் மனைவியை நேசிக்கிறாங்க -- ஒரு சர்வே.

டவுட்# அப்போ அது வரை வெறுக்குறாங்களா..:)

"ஙே..!”


**************************************************

போலீஸ்:- சார் சீக்கிரம் வாங்க. உங்க மனைவியைக் கடத்துனவங்க அவங்கள கட்டிப் போட்டு ஃபோட்டோ எடுத்து அனுப்பி இருக்காங்க.

கணவர்:- எனக்கு அதை ஃபேஸ்புக்குல டாக் பண்ணுங்க சார். பார்த்துக்குறேன்.

போலீஸ்:- .....

******************************

1:- ஈகோ ரொம்ப தலை விரிச்சு ஆடுது என்ன பண்ணலாம்.?

2:- ஜடை பின்னிப் போட்டுறலாம்..

1:- பாய் கட்டிங்கா இருந்தா..

2:- மொட்டை போட்டா முடிஞ்சுது வேலை..:)

1.:- ..

******************************************

1.:- அவர் ரொம்ப பணக்காரர்னு எப்பிடி சொல்றீங்க.

2.;- அவரோட மூத்த மாப்பிள்ளை பைப்புக் கடை வைச்சு சம்பாதிச்சவரு. ரெண்டாவது மாப்பிள்ளை யுபிஎஸ் பாட்டரி கடை வைச்சிருக்காரு.

1.:- .....

**********************************************

மளிகைக் கடைப்  பையன் ஃபோனில்..

“அக்கா லிஸ்ட்ல கடைசீல என்ன எழுதி இருக்கீங்க.. தண்ணி பட்டு அழிஞ்சிருக்கு.. சொட்டுப் பாசனமா, கெட்டுப் போனதா..”

“ டேய் தம்பி அது பொட்டுக் கடலைடா..”

மளிகைக் கடைப் பையன்..”ஙே..”

***************************************************

போலீஸ்:- ” ஏம்மா.. ஒரு லாப்டாப்பைத் தவிர மொத்த வீட்டையும் கொள்ளையடிச்சிட்டுப் போயிருக்காங்க. நீங்க என்னம்மா பண்ணிகிட்டு இருந்தீங்க அப்போ..”

பெண் :- ”சார் நான் ஃபேஸ்புக்ல இருந்தேன் சார்..”

போலீஸ்..:- ”அப்பிடின்னா..?”

பெண்:- ”இருங்க சார் .. நீங்க எங்க வீட்டுக்கு என்கொயரி பண்ண வந்திருக்கீங்கன்னு ஸ்டேடஸ் போட்டுட்டு வர்றேன் சார்.”

போலீஸ் :- “ .....”
*************************************************************
1:- எதைப் பார்த்தாலும் யார் பேசினாலும் அவர் ஏன் “லைக் .. லைக் “ ன்னுக்கிட்டு இருக்காரு..

2:- அவர் ஃபேஸ்புக்கில யார் எதைப் போட்டாலும் லைக் போடுவாராம். இப்ப கரண்ட் இல்லைல்ல.. அதனால வாயால சொல்றாரு..

1:- ஙே ..


************************************************************


7 கருத்துகள்:

 1. ஹா ஹா ஹா ஹா !!!செம சிரிப்பு, அருமையான தொகுப்புகள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. சூப்பர் தேன். ரொம்ப நல்லா இருந்தது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு சிரிக்க முடிஞ்சது:)

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஸ்டார்ஜன்

  நன்றி செம்மலை ஆகாஷ்

  நன்றி வல்லிசிம்ஹன்

  நன்றி சமீரா

  நன்றி அமுதா

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...