எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 10 மார்ச், 2017

சாஸ்த்ரி பவனில் மகளிர்தினக் கொண்டாட்டம்.சாஸ்த்ரி பவனில் இந்த வருடமும் மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது செண்டரல் கவர்ன்மெண்ட் விமன் எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் அசோஷியேஷன் & சாஸ்த்ரி பவன் எஸ் சி/எஸ் டி விமன் எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் அசோஷியேஷன் சார்பில் கலந்து கொள்ளும்படி அழைப்புவிடுத்திருந்தார்கள். 

ஒரு சிறு உரையாற்றவும் வாய்ப்புக் கிடைத்தது. என்னுடைய தோழியும் நலம் விரும்பியுமான சாஸ்த்ரி பவன் யூனியன் லீடர் மணி மேகலை அவர்களுக்கு நன்றி. 


ஹெல்த் டு ஆல் என்ற தலைப்பில் டாக்டர் லீனா உதுப் ( சிஎமோ சி ஜி ஹெச் எஸ் ) அவர்கள் சிறப்பு உரையாற்றினார். நெஸ்லே எல் எம் டி யின் கௌசல்யா அவர்கள் ஹெல்த் டிப்ஸ் கொடுத்தார்.சாஸ்த்ரி பவன் யூனியன் லீடர் மணிமேகலை அவர்கள் ரொம்பவே எனர்ஜிடிக் & எந்தூஸியாஸ்டிக். வைஸ்பிரசிடெண்ட் பிரபாவதி அவர்கள் மகளிர் சேவையில் மணிமேகலை அவர்களுக்குப் பக்கபலமாகச் செயலாற்றுகிறார். 


லீனா உதுப் அவர்கள் ப்ரேக்ஃபாஸ்டை ப்ரேக் செய்யக்கூடாது என்றும் இன்னுமுள்ள பாரம்பரிய உணவு வகைகள் பற்றியும் பேசினார். மேலும் வெயிட்டை சமச்சீராகப் பராமரிக்க ஒரு ஸ்பூன் சர்க்கரை காஃபியில் சேர்த்தால் ஒரு கைப்பிடி சாதம் தவிர்க்க வேண்டும் என்றார்.  


பாரம்பரிய உணவுகளின் பெருமை பற்றி கௌசல்யா டிப்ஸ் கொடுத்தார். ஆவியில் வேகவைக்கப்பட்ட இட்லி மிகச் சிறந்த உணவு என்றும், முதல்நாள் வடித்த சோற்றின் கஞ்சியிலும் நீராகாரத்திலும் இருக்கும் சத்துகள் பற்றிப் பட்டியலிட்டார். பழைய கஞ்சி சாப்பிட்டால் வெயிட் போடாது என்பது அவர் கூறிய புதுத்தகவல். மேலும் ஏற்கனவே பாரம்பரியப்படி இருக்கும் எடையை அதிகம் குறைக்க முடியாது என்றாலும் உணவுப்பழக்கத்திலும் யோகா போன்றவற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்றார். ஜிம்மில் ஹார்ட் பீட் அதிகமாகும் அளவு எக்சர்ஸைஸ் இருக்கிறதே தவிர அது எடையை அதிகம் குறைப்பதில்லை என்றார். சமச்சீரான உணவும் பசிக்கும்போது மட்டுமே உண்ணுதலும் எடையைக் கட்டுக்குள் வைக்கும் என்றார். என்னுரையில் தற்காலத் திருமணங்கள் அதிகம் விவாகரத்தைச் சந்திப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டேன். பெற்றோர் இரு பாலாருக்கும் திருமணத்தின் மகத்துவத்தைப் புரிய வைக்கும்படியும் இருவருக்கும் பிடித்திருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கும்படியும் கூறினேன். அனைவரும் ஆமோதித்தார்கள். இந்த மாத புதிய தரிசனம் பத்ரிக்கையாளர் திரு ஜெபகுமார் மகளிர் தரிசனம் என்றொரு சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறார். அதில் அரசியலில் தலித் பெண்கள் பற்றியும் தலித் பெண்களைச் சுற்றி நிகழும் அரசியல்கள் பற்றியும் யூனியன் லீடர் மணிமேகலை எழுதிய ஒரு கட்டுரை வெளியாகி இருப்பதால் அவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து அனைவரையும் வாங்கி வாசிக்கும்படிக் கூறினேன்.

மொத்தத்தில் மிகச் சிறப்பாகவும் சுருக்கமாகவும் ( லஞ்ச் டைம் ஒன் ஹவரில் ) கூட்டம் நடந்து முடிந்தது. மகளிர் தினப்பரிசுகளோடு இனிப்பான பாயாசமும் கிடைத்தது. பொன்னாடையும் கிடைத்தது. அன்பும் நன்றியும் என் தோழி மணிமேகலைக்கு. வாழ்க வளமுடன். J

5 கருத்துகள்:

 1. பேலியோ டயட் பற்றி உங்களின் கருத்து என்ன சகோதரி...?

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு மகிழ்வான விழாவை படங்கள் மூலம் அறிய முடிந்தது அக்கா.

  பதிலளிநீக்கு
 3. கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. ஆரோக்யம் நல்வாழ்வு க்ரூப்பில்தான் கேக்கணும் டிடி சகோ

  நன்றி குமார் சகோ

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி பாலா சார்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...