எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 மார்ச், 2017

ஆறு வித்யாசம்.

இந்த ஆறு வித்யாசம் , எட்டு வித்யாசம் எல்லாம் குமுதம், தினமலர் பார்த்து வந்ததுதான்னு ஒப்புக்குறேன். அத கண்டுபிடிக்கிறதுல ஒரு குறுக்கெழுத்துப் புதிரையோ, சுடோகுவையோ போட்ட திருப்தி கிடைக்குது. :)

பொதுவா பயணப் பொழுதுகள் சுகமா இருக்கணும்னு நினைப்போம். அதுவும் இரவுப் பயணத்தில் ஏசி ட்ரெயின் என்றால் ரொம்பவே கன்வீனியண்ட். ஏசி பஸ்ஸும் கன்வீனியண்ட்தான். ஆனால் கொஞ்சம் குடலைப் புரட்டும் குலுக்கல் இருக்கும். ட்ரயின் எப்பவுமே தாலாட்டும். :) ரெண்டுலயும் போர்வை, தலையணை எடுத்துப் போக வேண்டாம்.

சாப்பிடக் கொள்ள, புக் படிக்க, பாத்ரூம் இன்னபிற வசதிகள் ட்ரெயினில் ( ஏசி ) ஆஹா ஓஹோதான். ப்ரைவசியும் கூட . சைட் லோயர் பர்த் கிடைத்தால் கொண்டாட்டம்தான். நம்ம ராஜாங்கம். திரையை மூடிக் கனவில் ஆழலாம். திரையை விலக்கி உலகைக் கண்டும் களிக்கலாம். 

ஏசி பஸ்ஸுக்கும் ஏசி ட்ரெயினுக்கும் ( செகண்ட் ஏசி, தேர்ட் ஏசி ) எடுத்த புகைப்படத்தில் உள்ள வித்யாசத்தைப் பார்த்தேன். ஹிஹி ஒரு இடுகை தேறிடுச்சு. :)

அப்புறம் ரெட் பஸ்ஸுல புக் பண்ணேன்பாங்க. ஆனா பஸ் ப்ளூ கலர்ல இருக்கும். ப்ளூ மவுண்டன்ல புக் பண்ணேன்பாங்க. உள்ள பூரா டிசைன் ரெட்டா இருக்கும் :)

பஸ்ஸுலயும் ட்ரெயின்லயும் உள்ள ஒரு ஒத்துமை அப்பர் பர்த் &  லோயர் பர்த். அதுக்கு ஏறப் படி இருக்கு ! . ஆனா பஸ்ஸுல ஏறி இறங்கினா கொஞ்சம் குடிகாரன் மாதிரி தடுமாற வேண்டி இருக்கும். ஏன்னா திடீர்னு ஒரு வளைவுல வளைப்பாங்க. கம்பியைப் பிடிச்சிட்டே போகணும் வரணும்.

ட்ரெயின் எல்லாம் சிங்கிள் பர்த் & பெட்தான். பஸ்ஸில் ஒரு சைட் சிங்கிள், இன்னொரு சைட் டபுள். இதுல வேறு வேறு ஆளுங்களுக்கு அலாட் ஆனா கஷ்டம். ஒரே ஃபேமிலின்னானும் வேறு வேறு ஆட்களுக்குக் கிடைச்சா கஷ்டம்தான். ஹஸ்பெண்ட் வைஃப்னா பரவாயில்லை. 


பஸ்ஸுலயும் கண்ணாடி, பேப்பர் வைக்க தனி இடம். மேலே ரீடிங் லைட்ஸ்.
ஏசி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். இல்லாட்டிஅடைக்கலாம். மூடாட்டி ந்யூஸ் பேப்பரை செருகி அடைக்கலாம். !
ட்ரெயினில் அப்பர் பர்த்தில் விண்டோ வழியா ஊரை தரிசிக்க முடியாது. பட் பஸ்ஸுல அப்பர் பர்த்தான் ஐடியல் பர்த். இது ட்ரெயினின் சைட் லோயர் பர்த் மாதிரி. மேலேயே செப்பல், லக்கேஜ், லாப்டாப் இன்னபிற வஸ்துக்களோட குடித்தனம் செய்யலாம்.
ட்ரெயினின் சைட் லோயர் பர்த். நம்ம இடம் தனித் திரை, தனி ஜன்னல். தனி லைட்டு. இருங்க செட்டில் ஆயிட்டு விலாவாரியா விவரிக்கிறேன் :) லக்கேஜைபூரா கீழே அடைச்சிடலாம். லாப்டாப், தண்ணீர், ஹேண்ட்பேக் , செல்ஃபோனை நம்மோட வைச்சிக்கலாம். இதிலும் தனியா ரீடிங் லாம்ப் உண்டு. ஏசி அட்ஜெஸ்ட் பண்ண முடியாது. கம்பிளி விரிச்சு, பெட் ஸ்ப்ரெட் போட்டு அதும்மேலே ப்ளாங்கெட்டைப் போர்த்திக்கிட்டுத் தூங்கலாம். தூங்கிட்டும் போர்த்திக்கலாம். ஹிஹி அடிக்க வராதீங்க. நான் ட்ரெயின் காதலி. இதுல அடிஷனலா டர்க்கி டவலும் கொடுப்பாங்க. மறுநாள் காலைல எழுந்து பல் தேய்ச்சு மூஞ்சி கழுவித் துடைச்சுக்க.
ட்ரெயின்ல எமர்ஜென்ஸி எக்ஸிட் இருக்கும். கொஞ்சம் பேராவது தப்பலாம்.பஸ்ஸுல அது கிடையாது. கூண்டோட கோவிந்தாதான்.
சீக்ரெட் புக் கொண்டு வந்திருக்கேன். வாங்க படிக்கலாம். அட “இரகசியம் “அப்பிடீங்கிற புக்க சொன்னேன். இது செண்ட்ரல் ரயில்வே செகண்ட் ஏசி.
பர்ஃபெக்ட் . ஹோட்டல் ரூம் மாதிரி.

நடந்துபோறவங்க திரைகளைக் கலைக்காதவரை தனி ரூம்தான்  :)
பஸ்ஸுல பாத்ரூமே கிடையாது. ட்ரெயினில் பாத்ரூம் உண்டு. ஏன் ஃபேனும் உண்டு.

{[பஸ்ஸுல உச்சா வந்தா ஊருக்குப் போய் வீட்டுக்குப் போயித்தான் போகணும். இல்லாங்காட்டி நட்ட நடுக்காட்டுல குத்துப் புதருக்கு நடுவுல ஓடிப் போயிட்டு ஓடியாரணும். எங்கினாச்சும் பாம்பு  புடுங்கிருமோன்னு. அப்புறம் ஏதோ மோட்டல் , பெட்ரோல் பங்க் கிடைச்சா நிப்பாட்டுவாங்க. அவங்க பெட்ரோல் போடுறதுக்குள்ள ஓடிப்போயிட்டு ஓடியாந்துறணும். இல்லாங்காட்டி பஸ் கிளம்பி டெப்போவுக்கு வெளில நிக்கும். போம்போதே பஸ் நம்பரை நோட் பண்ணிட்டுப் போணும். இல்லாட்டி காரைக்குடி போறேன்னு  காரைக்கால் போயிடுவோம் :)]}
 ட்ரெயினில் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸும் உண்டு. :)ரெண்டுலயும் கண்டிப்பா மண்ணெண்ணெய் அடுப்பு கொண்டு போக்கூடாது. பெட்ரோல் கேனும். அப்புறம் சமைக்கக்கூடாது. புகைக்கக் கூடாது.

திருடங்க பயம்னா, ஏதோ அவசரம் சமயம்னா ட்ரெயின நிறுத்த செயினைப் பிடிச்சி இழுக்கலாம். ஆனா ரங்க்ஸ் சொன்னார் அதப் பிடிச்சுத் தொங்கினாத்தான் நிக்கும்னு. ஹிஹி வெட்டியாப் பிடிச்சி இழுத்தா  அபராதம் போடுவாங்க்ன்னு சொன்னதால இழுத்துப் பார்த்ததில்லை இதுவரை.
வாஷ்பேசினும் உண்டு. வாஷ் பண்ண சில்வர் கப் ஏசில மட்டும் செயின் கோர்க்காம  இருக்கும்.
ஆந்திராலேருந்து தொலை தூரத்துக்குப் போறதால குளிக்கக் கொள்ள சோப், டவல், ட்ரெஸ் போட்டு வைச்சுக்க பாத்ரூமில் தனி ஷெல்ஃப் உண்டு.
அட ஹேண்ட்வாஷ்தான் அதுக்கு ஒரு மாஸ்க். இல்லாட்டி நம்ம பொதுஜனம் ஏசில வந்தாலும் சுட்டுடமாட்டாங்களா.! என்ன ஒரு பக்கா. இன்னும் டபுள் கொக்கி உள்ள பாத்ரூம். விதம் விதமான வசதிகளையும் படம் பிடிச்சிருந்தேன். அது எல்லாம் இன்னொரு லாப்டாப்பில் ஜாமாகிக் கிடக்கு. அத எல்லாம் எடுக்கணும்னா ஹார்ட்வேரை எடுத்து எடுக்கணுமாம். 12, 500 ரூபாய் ஆவுமாம். பெங்களூர்க்கு அனுப்பனுமாம். தப்பித்தவறி பார்மேட் பண்ணிட்டா அம்புட்டும் காலி. வரட்டும். அது மட்டும் கைல கிட்டிச்சி ப்லாக் போஸ்டா போட்டுத் தள்ளிற மாட்டேன். கிட்டத்தட்ட நூறு ஜிபிக்கு மேல படம் இருக்காம். ஹாஹா. ஓடாதீங்க நில்லுங்க. நல்லதா எடுத்தத மட்டும் போடுறேன்.

 இப்ப போட்டதே பத்தாதா. விட்டுடுடிங்கிறா ஃப்ரெண்டு :) ஹிஹி. ஆமா ஆறு வித்யாசம் பத்தி சொன்னேன்ல.. நம்பர் போட மறந்துட்டேன். எட்டுக்கு மேல சொல்லிருப்பேனே. போய் மேல படிச்சு எண்ணிப் பாருங்க . சொல்லிட்டேன் ஆமாம். :)

6 கருத்துகள்:

 1. ஏசி பஸ், டிரைன் ஒப்பீடும் அதற்கான கருத்துக்களும் சூப்பர் அக்கா...

  பதிலளிநீக்கு
 2. //காரைக்குடி போறேன்னு காரைக்கால் போயிடுவோம் //
  நீங்க சொல்றதைப் பார்த்தா காரைக்குடியும் காரைக்காலும் வேற வேற போலிருக்கே.

  பதிலளிநீக்கு
 3. நன்றி நாகேந்திர பாரதி சகோ

  நன்றி குமார் சகோ

  நன்றி டிடி சகோ

  நன்றி விஸ்வநாத் சார்

  நன்றி வெங்கட் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...