எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 பிப்ரவரி, 2016

நம்பிக் கெட்டோம்.

அறையப்பட்டது நாங்களல்ல.
எங்கள் நம்பிக்கைகள்.

உண்ணும் உணவைப் புறக்கணிக்க வைத்தார்கள்
உச்சரித்த மொழியைப் புறந்தள்ள வைத்தார்கள்.
உடுப்பதையும் நடிப்பதையும் கற்றுக் கொண்டோம்
உறவுகளை ஒதுக்குவதில் பெருமை கொண்டோம்.


விதைகளைக் கொடுத்தார்கள்
உரங்களைக் கொடுத்தார்கள்
விஷங்களையும் வினைகளையும்
விலை கொடுத்து வாங்கிகொண்டோம்

கத்திரிக்காய் விவசாயக் கொல்லியாகவும்
பருத்தி தூக்குக் கயிறாகவும் விளைந்தது.
எங்கள் மாடுகளை வெட்டித் தின்றோம்
பற்றாக்குறையாய் எலிகளைப் பிடித்தும்.

இருட்டில் வேலை எங்கள் பிள்ளைகளுக்கு
கண்களை விற்றுக் காசை எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
மனித வளத்தைச் சொற்பக்காசில் சுரண்டிவிட்டு
மனிதநேயம் பற்றி நன்னெறி வகுப்பெடுக்கிறார்கள்.

சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொண்டு
சத்து மாத்திரையும்,சத்தற்ற பொருளையும் விற்றார்கள்.
மருந்துகளைப் பரிசோதிக்கும் மனிதப் பிராணிகளாய்
ஆயுதங்களை உருவாக்கும் அணுஉலைகளாய் ஆனோம்.

அவர்கள் உடைகளை சாயம் தோய்த்து
எங்கள் நதிக்கரை நாகரீகமே நுரைநோய் பீடித்தது.
எங்கள் வண்ணங்களை எடுத்துக் கொண்டு
வர்ணங்களைச் சுமத்திப் பிரித்தாண்டு சென்றார்கள்.

மொத்தத்தில் எங்களை நம்பாமல்
அவர்களை நம்பிக் கெட்டோம்.
அறையப்பட்டது நாங்களல்ல
எங்கள் நம்பிக்கைகள்.


7 கருத்துகள்:

 1. அற்புதம்
  முகத்தில் அறைந்தாற்போல
  உறைக்கும் கவிதை...

  பதிலளிநீக்கு
 2. நம்மை நம்பாமல்
  அயலகத்தை நம்பியது நமது குற்றம்தான்
  அருமை
  உண்மை

  பதிலளிநீக்கு
 3. மனதை நெகிழ்த்தும் கவிதை ..அருமை..

  பதிலளிநீக்கு
 4. நல்ல கருத்துக் கவிதை சகோ அருமை...

  பதிலளிநீக்கு
 5. நன்றி ரமணி சார்

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி அனுராதா ப்ரேம்

  நன்றி ஆரூர் பாஸ்கர் சகோ

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...