எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

சனி, 13 பிப்ரவரி, 2016

கோகுலத்தில் குழந்தைப் பாடல்கள். - 1. மிக நன்று :-

1. மிக நன்று :-


முள்ளில் ரோஜா மலருண்டு
சேற்றில் செந்தாமரையுண்டு
இருக்கும் இடத்தை வெறுக்காமல்
சிறப்பாய்ச் செய்தல் மிக நன்று.

குயிலின் பாட்டில் அழகுண்டு
காக்கையின்  குரலில் பரிவுண்டு.
உருவைக் கண்டு எள்ளாமல்
உண்மை உணர்தல் மிக நன்று.

காடு இருந்தால் மழை உண்டு
கண்மாய் நிறைந்தால் நீர் உண்டு
காடு கண்மாய் அழிக்காமல்
கண்போல் காத்தல் மிக நன்று.

டிஸ்கி:- ஃபிப்ரவரி 2016 கோகுலத்தில் வெளியானது. தேனாஞ்சி என்ற புனைபெயரில். :) !!!

9 கருத்துகள்:

 1. ஒவ்வொரு வரிகளும் .... மிக நன்று. :)

  ’தேனாஞ்சி’ .... எழுத்தாளர் புனைப்பெயரும் மிக நன்று :))

  //ஃபிப்ரவரி 2016 கோகுலத்தில் வெளியானது. //

  மிக நன்று. மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.....

  பதிலளிநீக்கு
 3. மிக மிக எளிமையான
  மிக மிக அருமையான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. மிக மிக எளிமையான
  மிக மிக அருமையான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. நன்றி விஜிகே சார்

  நன்றி வெங்கட் சகோ

  நன்றி ரமணி சகோ

  நன்றி ராமலெக்ஷ்மி

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி செந்தில் சகோ

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...