சனி, 20 பிப்ரவரி, 2016

பிலாடெலி - PHILATELY - ALBUM -2,3. முக்கோணத் தபால் தலையும் தேசியத் தலைவர்களும்.

ஸ்டாம்பு கலெக்‌ஷனைத் துவங்க உந்துசக்தியாக இருந்தது எனது அம்மாவும் நாகு மாமாவும்தான். அவர்கள்தான் என் சின்ன மகனுக்கும் இதை அறிமுகப்படுத்தியது. :)

நாடுகள் வாரியாகத்தான் நாங்கள் அடுக்கி இருக்கின்றோம். ஆனால் பறவைகள், பூக்கள், ரயில், பழங்கள், நிகழ்வுகள், தேசியத் தலைவர்கள்  என ஒரு தீம் வைத்து ஸ்டாம்புகளைச் சேகரிப்பவர்களும் உண்டு. 

இனி ஆல்பம் 2, 3 இன் படங்கள். :) 
பங்ளாதேஷ் ,ஹங்கேரி நாட்டுத் தபால் தலைகள். சில சதுரத்திலும் இரு முனையிலும் செங்குத்தாய்ப் படங்கள். முக்கோணத் தபால் தலையும் கூட.

நியூசிலாந்து, அமெரிக்க ஸ்டாம்புகள்,
அமெரிக்கக் கொடி அதிக அளவில் இடம் பெற்றிருக்கும்.
க்யூபா, தான்சானியா, ஹாங்காங்,

மேட் இன் இந்தியா இலங்கை, நேபாள், மொரீஷியஸ். !!! :)

தேசியத் தலைவர்கள் ஸ்பெஷலாக இடம் பெறுவார்கள். அதிக அளவில் இடம் பெற்றவர் மகாத்மாவாகத்தான் இருப்பார். ராணுவத்தில் பணி புரிந்து நாட்டுக்காகச் சேவை செய்த மாவீரர்களின் மற்றும் சுதந்திரப்போராட்ட வீரர்களின் , தபால் தலை வெளியிட்டுச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசியநினைவுச் சின்னங்கள், மலர், விலங்கு, பறவை ஆகியவற்றுக்கும் தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. தபால் தலையின் சரித்திரம் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுக் காலங்களுக்கானது. அதைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனாலும் பெண்களைச் சிறப்பித்து வெளியிடப்பட்ட தபால்தலைகள் சொற்பமே. :)

இனி காயின்ஸ் கலெக்ஷனைப் பகிர்வேன். :)


4 கருத்துகள் :

priyasaki சொன்னது…

stamps collection,picture post card கலெக்‌ஷன் என என்னோட பொழுதுபோக்கும் இருந்தது தேனக்கா. எல்லாமே போய்விட்டது பிரச்சனையால். நல்ல கலெக்‌ஷன்.பத்திரமா வைத்திருங்க.

மு.கோபி சரபோஜி சொன்னது…

ஆச்சி....நாணய சேகரிப்பு கூட வைத்திருக்கிறீர்களா? தபால் தலைகளில் இவ்வளவு பரவலான கலெக்‌ஷன் எனக்கிட்ட இல்லை. இருந்தாலும் நீங்க சொன்ன மாதிரி அதிகம் இருப்பதை பரிமாறிக் கொள்ளலாம். மகனிடமோ, மகளிடமோ கொஞ்சம் ஆர்வத்தை உருவாக்கி விட்டு ஆல்பத்தை பரிசாக கொடுத்து விடலாம் என நினைக்கிறேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

அடடா இப்போது தொடரலாமே பிரியசகி அம்முப் பொண்ணே

ஆம் கோபி . உங்களை நேரில் சந்திக்கும்போது அதிகப்படியாக இருப்பதை மாற்றிக் கொள்வோம். மகன் & மகளை ஈடுபடுத்துங்கள் . ஆரோக்கியமான பொழுதுபோக்காக அமையும்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...