எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காரைக்குடி புத்தகத்திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காரைக்குடி புத்தகத்திருவிழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 பிப்ரவரி, 2018

காரைக்குடி மரப்பாச்சியில் எனது நூல்கள்.

காரைக்குடி புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பேராசிரியர் அய்க்கண், லயன் வெங்கடாசலம் ஆகியோரின் முன்னெடுப்பில் வருடாவருடம் இத்திருவிழா களைகட்டிவிடுகிறது. இன்னும் சில இலக்கிய ஆர்வலர்களின் பங்களிப்பும் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதோடு புத்தகம் வெளியிட கிரியா ஊக்கியாகவும் அமைகிறது.

அரிமழம் வைத்திய சாலையின் ஆயுர்வேத டாக்டர் சுனில் கிருஷ்ணன் காந்திய காலத்துக்கொரு பாலம் என்ற நூலில் ஆசிரியர். அவர் காரைக்குடி புத்தகத் திருவிழாக்களின் போது தன்னார்வலராக புத்தக ஸ்டால்களை நிறுவி இலக்கிய புத்தகங்களை வெகுஜன வாசிப்புக்குக் கொண்டு செல்வது வருடா வருடம் காணும் காட்சி. இந்த வருடம் மரப்பாச்சி என்ற அவருடைய ஸ்டாலுக்குச் சென்றிருந்தேன்.

காந்திய நூல்கள் அதிகம்,நவீன இலக்கிய நூல்களின் புது வெளியீடுகளும் அதிகம் உள்ளன. இன்பாவின் வையாசி படித்தீர்களா எனக் கேட்டார். ( பாதி படித்திருக்கிறேன். மீதி படிக்கவேண்டும் என்றேன் . :)

பல்லாண்டுகளுக்கு முன்பே வலைப்பதிவு மூலம் அவர் அறிமுகமாகி இருந்தாலும் ( 2009 ) இன்றுதான் நேரில் சந்தித்தேன். அவரது ஸ்டாலில் எனது புத்தகங்களைக் கொடுத்து விட்டு எனது வாசிப்புக்காக ஹாருகி முரகாமியின் கினோ, மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாள், மிரோஸ்லாவ் ஹோலுபின் கவிதைகள், காஃப்காவின் உருமாற்றம், தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் ஆகியன வாங்கி வந்தேன். 
எனது அன்னபட்சியை அங்கே வந்தவுடன் எடுத்து உடனே வாசிக்கத் தொடங்கிய ஒரு புத்தகப் பிரியையை அவர் அனுமதியோடு படம் எடுத்தேன் :)

வியாழன், 25 பிப்ரவரி, 2016

காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் பெண் பூக்கள்.

காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் மதுரை மீனாட்சி புக் ஷாப்பில் எனது நூல்கள் கிடைக்கின்றன.

கடந்த 19 ஆம் தேதியிலிருந்து  புத்தகத் திருவிழா நடந்துகொண்டிருக்கின்றது.

வியாழன், 18 பிப்ரவரி, 2016

புத்தகத் திருவிழா - 2016. காரைக்குடி.

புத்தகத் திருவிழா - 2016. காரைக்குடி.

காரைக்குடியில் வரும் வெள்ளியிலிருந்து பத்து நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.பள்ளிச் சிறார்கள் பங்குபெறும் கலை கலாச்சார நிகழ்வுகளும் பரிசளிப்புகளும் உண்டு.

அனுமதி இலவசம். 10 % தள்ளுபடி :)  கம்பன் (கற்பகம் ) மணி மண்டபத்தில் வழக்கம் போல நிகழ்கின்றது.

14 ஆம் ஆண்டில் பீடு நடை போடுவதற்கு காரைக்குடி 


கண்டு களித்துப் புத்தகங்கள் வாங்கிப் பயன்பெற வாருங்கள்.

வியாழன், 16 ஜூலை, 2015

காரைக்குடி புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

காரைக்குடியில் சென்ற ஒரு மாதமாக சேத்தியா தோப்பு  அபிநயா புத்தக நிலையத்தார் ஆரியபவன் அருகில் உள்ள ராமநவமி திருமண மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். அங்கே எனது நூல்களும் இடம் பெற்றுள்ளன.ஓரளவு விற்பனையும் ஆகி உள்ளன.

திங்கள், 20 மே, 2013

தினமணியின் ஊக்கப்பரிசும், காரைக்குடியில் ”ங்கா”வும்.

இவள் புதியவள் சூரியக்கதிர் இவற்றின் எடிட்டர் சகோ பாரதிராஜாவின் திருமண ரிஷப்ஷனில் பரிசளிக்க ஒடிசியில் பரிசுப்பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது (இனிமே யாராவது ஃபோட்டோ ஃப்ரேம் வாங்கிக் கொடுத்தீங்க.. கொன்னுபோடுவேன் என்று அவர் கோபமாக இருப்பதாகக் கேள்வி..:) ( பின்னே கல்யாணத்துக்கு கிஃப்டா  7 , 8  ஃபோட்டோ ஃப்ரேம் வந்தா.. :)   ஒரு ஃபோன் கால் .

வியாழன், 5 ஏப்ரல், 2012

சிவப்புப் பட்டுக் கயிறு. ( தினமணி-காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)

சிவப்புப் பட்டுக் கயிறு:-
*************************

 பட்டியக்கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான் இன்னும் சிலநாட்களுக்குக் குடிக்கவும் சமைக்கவும். நல்லவேளை தண்ணீர் தூக்க குடி தண்ணி ஊரணிக்கு பித்தளைக்குடமும் புளியுமாகப் போகவேண்டாம்.அங்கே செம்மண்ணில் தேய்த்து அதிலேயே கழுவி அப்புறம் கொஞ்சம் ஊரணிக்கு உள்ளே போய் தெளிந்த தண்ணீர் மோந்துகிட்டு வரணும். இப்ப கொஞ்ச நாளைக்கு அந்த அவஸ்தையில்லை என்ற நினைப்பே அவளுக்கு போதுமானதாய் இருந்தது.

 வெய்யில் நாளில் வரும் மழை குளுமையை மட்டுமல்ல., கொஞ்சம் வெக்கையையும்தான் கிளப்பிக் கொண்டு வருகிறது. ஐயா பட்டாலையில் குறிச்சியில் உக்கார்ந்து சுருட்டைப் புகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். யார் யாரோ பீடி ., சிகரெட் குடிக்கும் போதெல்லாம் வரும் கோபம் ஐயாவின் சுருட்டைப் பார்த்தால் வருவதில்லை. பிறந்ததில் இருந்து அவர்களை சுருட்டும் கையுமாகப் பார்த்துவிட்டதாலோ என்னவோ. அல்லது சிறுபிள்ளையில் படித்த வெளிநாட்டுக் காமிக்ஸ் கதைகளில் வரும் பணக்கார ஹீரோக்கள் -- ரிப்கெர்பி-- ஸ்டைலாக சுருட்டு பிடிப்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.