அன்பின் ஸ்ரீராம்,
தேனம்மை எழுதிக் கொண்டது.
இத்துடன் நீங்க கேட்ட கதையை அனுப்பி இருக்கேன்.
இது குழந்தைத் தொழிலாளி பத்தின கதை என்பதால் கல்லூரிக் கட்டத்தில் எழுதினாலும் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். ஒரு காலகட்டத்தில் அதாவது நாங்க எல்லாம் சின்னக் குழந்தைகளாக இருந்தபோது வீடுகளில் குழந்தைகளை வைத்துக் கொள்ள என்று குட்டிகள் எனப்படும் வேலைக்காரச் சிறுமிகளை வைத்திருப்பார்கள். அந்தக் குழந்தைகள் பெரும்பாலும் கிராமத்திலிருந்து உணவுக்காகவும் உறையுளுக்காகவும் மேலும் தாய் தந்தையருக்கு பணம் ஈட்டும் கருவியாகவும் இம்மாதிரி இருக்கவைக்கப்பட்டிருக்கின்றார் கள்.
எல்லாரும் அப்படி அல்ல என்றாலும் ஓரிரு இடங்களில் அப்படித்தான். அவர்கள் வீடுகளில் குழந்தைகளுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இந்த மாதிரி சொன்ன வேலைகளைச் செய்யும் ( பாப்பாவைப் பாத்துக் கொள்வது, பாத்திரம் தேய்ப்பது, துணி மடிப்பது, அரைத்துக் கொடுப்பது, கடை கண்ணிக்குப் போய் வருவது,காய் நறுக்குவது வெங்காயம் உறிப்பது, மாவாட்டுவது - பெரும்பகுதி பாப்பாவைப் பார்த்துக் கொண்டு அதன் துணிமணிகளைத் துவைப்பது ) போன்ற ஏவல் வேலைகளுக்கு வைக்கப்பட்டிருந்திருக்கின்றார் கள்.
சிலர் இல்லங்களில் பெற்றோருக்கு மாதாமாதம் சம்பளமாக ஒரு தொகை கொடுத்தபின்னும் இம்மாதிரிக் குழந்தைகளை தன் குழந்தைகள் போலவீட்டாரே படிக்க வைத்து வேலைக்குச் சேர்த்துத் திருமணமும் செய்துவைப்பதுண்டு.
ஒரிரு வீடுகளில் அவர்கள் நவீன அடிமைகள் போல நடத்தப்பட்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன். அதிக வேலை இல்லாவிட்டாலும் எழுவதிலிருந்து துயில்வது வரை சிறு சிறு வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவது, பூப்பறித்துத் தொடுப்பது, விருந்தினர்களுக்கு காஃபி ஜூஸ் கொடுப்பது, இன்னபிறவென்று.
எனவே எனது கல்லூரிக் காலச் சிறுகதையை குழந்தைத் தொழிலாளிகளான சிறுமிகளின் ஆசையை ( இதில் கல்வி கற்க ஆசைப்பட்ட சிறுமிகள் சிலரே ) இதில் பதிவு செய்துள்ளேன். சிறுவயதுச் சம்பவங்கள், மனித மன விநோதங்கள், கல்லூரிக் காலப் பதிவுகள், வாழ்வியல் பதிவுகள், நவீன த்ரோகங்கள், குழந்தை மேலான பாலியல் வன்முறை, குடும்பக் கட்டமைப்புக்கான விவாகம் என்னும் விஷயத்தில் எழும் ப்ரதி பேதம் எல்லாம் என் கதைகளில் இருந்தாலும் எனக்கு இது முக்கியமான கதை எனத் தோன்றியதால் அனுப்பி இருக்கிறேன்.
எங்கள் ப்லாகில் வெளியிடுவது குறித்து மகிழ்வும் அன்பும் நன்றியும்
தேனம்மைலெக்ஷ்மணன்.
தேனம்மை எழுதிக் கொண்டது.
இத்துடன் நீங்க கேட்ட கதையை அனுப்பி இருக்கேன்.
இது குழந்தைத் தொழிலாளி பத்தின கதை என்பதால் கல்லூரிக் கட்டத்தில் எழுதினாலும் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். ஒரு காலகட்டத்தில் அதாவது நாங்க எல்லாம் சின்னக் குழந்தைகளாக இருந்தபோது வீடுகளில் குழந்தைகளை வைத்துக் கொள்ள என்று குட்டிகள் எனப்படும் வேலைக்காரச் சிறுமிகளை வைத்திருப்பார்கள். அந்தக் குழந்தைகள் பெரும்பாலும் கிராமத்திலிருந்து உணவுக்காகவும் உறையுளுக்காகவும் மேலும் தாய் தந்தையருக்கு பணம் ஈட்டும் கருவியாகவும் இம்மாதிரி இருக்கவைக்கப்பட்டிருக்கின்றார்
எல்லாரும் அப்படி அல்ல என்றாலும் ஓரிரு இடங்களில் அப்படித்தான். அவர்கள் வீடுகளில் குழந்தைகளுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இந்த மாதிரி சொன்ன வேலைகளைச் செய்யும் ( பாப்பாவைப் பாத்துக் கொள்வது, பாத்திரம் தேய்ப்பது, துணி மடிப்பது, அரைத்துக் கொடுப்பது, கடை கண்ணிக்குப் போய் வருவது,காய் நறுக்குவது வெங்காயம் உறிப்பது, மாவாட்டுவது - பெரும்பகுதி பாப்பாவைப் பார்த்துக் கொண்டு அதன் துணிமணிகளைத் துவைப்பது ) போன்ற ஏவல் வேலைகளுக்கு வைக்கப்பட்டிருந்திருக்கின்றார்