எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 பிப்ரவரி, 2021

”விழுதல் என்பது எழுகையே” நூலாக்கம்.

 நாங்கள் 26 பேர் எழுதிய ( சர்வதேச எழுத்தாளர்கள் - பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர்கள் பங்களிப்புச் செய்தது.  ) “விழுதல் என்பது எழுகையே “ என்ற புதினம் நூலாக்கம் பெற்றுள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தியா, இலங்கை, ஐரோப்பா ( ஜெர்மனி, சுவிட்ஜர்லாந்து, ஃப்ரான்ஸ், இத்தாலி ) கனடா, அமெரிக்கா, லண்டன் ஆகிய ஊர்களில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்துத் ”தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின்” திரு கந்தையா முருகதாசன் அவர்களும், ஊடக வித்தகர் திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் - ஒரு வருடக் கடின உழைப்பின் மூலம் உருவாக்கிய கதைக்கருவைக் கொண்டு  - ஜெர்மனியிலிருந்து இந்நூலைக் கொண்டு வந்துள்ளார்கள். 

புதன், 17 ஆகஸ்ட், 2016

சூலம் - திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு.

எனது ”சூலம்” சிறுகதைக்கு 2016 திருக்குறள் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு வழங்கிய பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்துக்கு நன்றிகள். இது தற்போது வெளியான எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் இடம்பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி !

செவ்வாய், 21 ஜூன், 2016

பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் - திருக்குறள் சிறுகதைப் போட்டியில் சூலத்துக்கு ஆறுதல் பரிசு.

பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் நடத்திய சிறுகதைப் போட்டியில் சூலத்திற்கு ஆறுதல் பரிசு கிடைத்துள்ளது .

இதை முகநூலில் எழுத்தாளர் திரு. கந்தையா முருகதாசன் அவர்கள் பகிர்ந்திருந்தார்கள். எனது அன்புத் தோழி நிம்மி சிவா அவர்கள் ஜெர்மனியில் நிகழ்வு நடைபெற்ற போது எனக்காக அதை இன்பாக்ஸில் தெரிவித்துப் பாராட்டியிருந்தார்கள். நிகழ்வில் உடனுக்குடன் அவர் அனுப்பிய புகைப்படம். எனக்காக துறுதுறுப்போது காத்திருந்து பகிர்ந்த அந்த அன்பு உள்ளத்துக்கு நன்றியும் அன்பும் முத்தங்களும்.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

திருக்குறள் சிறுகதைப் போட்டி. ( பன்னாட்டு புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் )

மதிப்பிற்குரிய முகநூல் சகோதரர் திரு. கந்தையா முருகதாசன் அவர்கள் பக்கத்தில் பகிர்ந்திருந்த இந்தப் போட்டியை என் வலைத்தளத்தில் பகிர்வதில் பெருமையுறுகிறேன். பங்கு பெறுங்க. பாங்கா எழுதுங்க. பரிசை வெல்லுங்க. வாழ்த்துகள் மக்காஸ் :)


////அன்புடன் படைப்பாளிகளே முகநூல் நண்பர்களே
அனைவருக்கும் பணிவன்பான வணக்கம்.
நேற்றைய தினம் பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் வெகுவிரைவைில் திருவள்ளுவர் விழாவினையும் அதனையொட்டி இடம்பெறவிருக்கின்ற திருக்குறளை முன்னிறுத்தி நடத்தவிருக்கும் சிறுகதைப் போட்டி பற்றிய விபரத்தையும் புகைப்படப் பிரதியாக கீழே பதிவு செய்திருந்தோம். அந்த விபரம் சிறு எழுத்திலிருப்பதால் அவற்றை வாசித்து அறிந்து கொள்வதில் உள்ள சிரமத்தை உணர்ந்து பெரிய எழுத்திலும் ஒரே முறையில் வாசித்தறிவதற்காகவும் மீண்டும; பதிவு செய்து உள்ளோம்.

திருக்குறள் சிறுகதைப் போட்டி
இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நாம் ஒழுங்கு செய்துள்ள திருவள்ளுவர் விழாவினை முன்னிட்டு சிறுகதைப் போட்டி ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...