பதிமூன்றாம் அத்யாயம் எட்டாவது ஸ்லோகம்
ராஞி தர்மிணி தர்மிஷ்டா:
பாபே
பாபா: ஸமே ஸமா: l
ராஜானம் அனுவர்(த்)தன்தே
யதா ராஜா ததா ப்ரஜா: ll
பொருள்:-
ராஞி தர்மிணி = ராஜன் தர்மவானாக இருக்கவேண்டும்
தர்மிஷ்டா: = அவனைப் போலவே அவன் மக்களும் தர்மவானாக இருப்பார்கள்.
பாபே பாபா: = மன்னன் பாபம் செய்தால் மக்களும் செய்வார்கள்
ஸமே ஸமா: = இறைபக்தியுடன் இருந்தால்
ராஜானம் = ராஜாவானவனின்
அனுவர்(த்)தன்தே = நடவடிக்கையை அனுசரித்தே நடப்பார்கள்
யதா ராஜா = ராஜா எப்படியோ/ ராஜா எவ்வழியோ
ததா ப்ரஜா: = மக்களும் அப்படியே./மக்களும் அவ்வழியே.
விளக்கம்:- ஒரு நாட்டை ஆளும் ராஜா தர்மவானாக இருந்தால் அவனது
ப்ரஜைகளும் தர்மவான்களாக இருப்பார்கள். மன்னன் பாவம் செய்தால் மக்களும் பாவம் செய்வார்கள்.
மன்னன் இறைபக்தியுடன் இருந்தால் மக்களும் அவனை அனுசரித்தே இறைபக்தியுடன் இருப்பார்கள்.
ராஜா எவ்வழியோ மக்களும் அவ்வழியே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)