11.பார்தோலின் (BAHR-toe-linz) சுரப்பி சீழ்க்கட்டிகளும் சிகிச்சையும்
பெண் பிறப்புறுப்புப் பிரச்சனைகளில் முக்கியமானதில் ஒன்று பார்த்தோலின் சுரப்பி சீழ்க்கட்டி. யோனித் திறப்பின் இருபுறத்திலும் இந்த பர்த்தோலின் சுரப்பி உள்ளது. யோனியின் உதடுகளில் இவை கண்ணுக்குத் தெரியாத அளவில் அமைந்திருக்கும். இவை யோனியின் உதடுகள் ஈரப்பதமாய் இருக்கும் வண்ணம் ஒரு சிறிய திரவத்தை உருவாக்குகின்றன. இச்சுரப்பிகளில் ஒன்றின் திறப்புக்கு மேல் தோலில் மடிப்பு வளரும்போது இதில் சுரக்கும் திரவம் பின் வாங்கித் தடுக்கப்படுகிறது.
பர்தோலின் நீர்க்கட்டி அல்லது சீழ் என்பது பர்தோலின் சுரப்பியிலிருந்து ஒரு சிறிய திறப்பு தடுக்கப்படும்போது அழற்சித் திசுக்களால் உருவாகும் வீக்கம் அல்லது சீழ்க்கட்டி ஆகும். இது நீர்க்கட்டி போன்றதொரு வீக்கத்தை உருவாக்குகிறது. இந்த நீர்க்கட்டி ஒரு பைசா அளவிலிருந்து சிறிய ஆரஞ்சு அளவு பெரிதாக வளரும். இவ்வாறான கட்டிக்குள் தடுக்கப்படும் குழாயிலேயே திரவம் உருவாகிச் சேரும்போது தொற்று ஏற்படலாம். இது புண்ணாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இத்திரவம் உருவாகிறது.

