எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

11.பார்தோலின் (BAHR-toe-linz) சுரப்பி சீழ்க்கட்டிகளும் சிகிச்சையும்

 11.பார்தோலின் (BAHR-toe-linz) சுரப்பி சீழ்க்கட்டிகளும் சிகிச்சையும்


 

பெண் பிறப்புறுப்புப் பிரச்சனைகளில் முக்கியமானதில் ஒன்று பார்த்தோலின் சுரப்பி சீழ்க்கட்டி. யோனித் திறப்பின் இருபுறத்திலும் இந்த பர்த்தோலின் சுரப்பி உள்ளது. யோனியின் உதடுகளில் இவை கண்ணுக்குத் தெரியாத அளவில் அமைந்திருக்கும். இவை யோனியின் உதடுகள் ஈரப்பதமாய் இருக்கும் வண்ணம் ஒரு சிறிய திரவத்தை உருவாக்குகின்றன. இச்சுரப்பிகளில் ஒன்றின் திறப்புக்கு மேல் தோலில் மடிப்பு வளரும்போது இதில் சுரக்கும் திரவம் பின் வாங்கித் தடுக்கப்படுகிறது.


பர்தோலின் நீர்க்கட்டி அல்லது சீழ் என்பது பர்தோலின் சுரப்பியிலிருந்து ஒரு சிறிய திறப்பு தடுக்கப்படும்போது அழற்சித் திசுக்களால் உருவாகும் வீக்கம் அல்லது சீழ்க்கட்டி ஆகும். இது நீர்க்கட்டி போன்றதொரு வீக்கத்தை உருவாக்குகிறது. இந்த நீர்க்கட்டி ஒரு பைசா அளவிலிருந்து சிறிய ஆரஞ்சு அளவு பெரிதாக வளரும். இவ்வாறான கட்டிக்குள் தடுக்கப்படும் குழாயிலேயே திரவம் உருவாகிச் சேரும்போது தொற்று ஏற்படலாம். இது புண்ணாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இத்திரவம் உருவாகிறது.

இது முதலில் யோனியின் இருபுறமும் வட்டமானதாக, வலியற்றதாக மேலும் மென்மையான வீக்கமாக உருவாகி இருக்கலாம். பெரிதாக வளர்ந்தபின் அதிகப்படியான நடைப்பயிற்சி அல்லது உடலுறவுக்குப் பின் இவற்றில் தொற்று ஏற்பட்டுக் கடுமையான வலியை ஏற்படுத்தும். பெரும்பாலும் சீழ்ப் பிடித்துவிட்டால் அப்பகுதி சூடாகவும் வீக்கமாகவும் மாறும். கருப்பையில் அழுத்தம் கொடுக்கும் செயல்பாடு மற்றும் நடைப்பயிற்சி, இறுக்கமான உள்ளாடை அணிதல், தொடைகளை இறுக்கும் உடைகளையணிதல் ஆகியன கடுமையான வலியை ஏற்படுத்தும்.

பொதுவாக நீர்கட்டிகள் அமினோரியா ( மாதவிடாய் ஏற்படாமை), ஹிர்சுட்டிசம் ( ஆண்ட்ரோஜென் என்னும் ஆண் ஹார்மோன் அதிகரிப்பால் மோவாய்,தாவாங்கட்டை, வாயைச் சுற்றிலும் மேலும் மூக்கின் கீழும் மீசை தாடி போல் முடி வளர்வது) மற்றும் உடல் பருமனால் குறிக்கப்படும் ஒரு நோய்க்குறி ஆகும். பல நீர்க்கட்டிகளைக் கொண்ட விரிவாக்கப்பட்ட கருப்பையுடன் தொடர்பு உடையது ஆகும்.

பர்த்தோலின் சீழ்க்கட்டியானது கருப்பைகள் மூலம் அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியால் உருவாகிறது. இதனால் கருப்பைகள் பெரிதாகி பல ஃபோலிக்குலர் நீர்க்கட்டிகள் உண்டாவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. வயிறு பருமனாதல், அசாதாரண மாதவிடாய், கருவுறாமை, முகத்தில் முடி வளர்ச்சி, அதிகப்படியான முகப்பரு, இன்சுலின் எதிர்ப்பு உண்டாகி நீரிழிவு நோயால் பாதிக்கப்படுதல் ஆகியன உண்டாகின்றன. நடக்கும்போது அல்லது உட்கார்ந்து இருக்கும்போது இது அசௌகரியத்தை ஏற்படுத்தும். உடலுறவின் போது வலி, காய்ச்சலை உண்டாக்கும்.


எண்டோமெட்ரியோசிஸ் எனப்படும் நீர்க்கட்டிகள் பிறப்புறுப்பில் தோன்றலாம். சிஸ்டோசெல்ஸ் ( மூத்திரப் பை திசுக்கள் மற்றும் கட்டிகள்) மற்றும் ரெக்டோசெல்ஸ் ( மலப்பை திசுக்கள் மற்றும் வீக்கம் ) என்பன யோனியின் சுவரில் உள்ள சிறுநீர்ப்பை அல்லது மலக்குடல் வீக்கமாகும். பிறப்புறுப்பைச் சுற்றி உள்ள தசைகள் இவற்றின் அழுத்தத்தால் பலவீனமடையும்போதும் இவ்வகை நீர்க்கட்டிகள் தோன்றுகின்றன. மலச்சிக்கல், நீர்க்கடுப்பு போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகப் பிரசவங்கள் காரணமாகவும் இந்நீர்க்கட்டிகள் தோன்றலாம். இவை நீர்க்கட்டிகள் போலத் தோற்றம் அளித்தாலும் உண்மையில் இவை சீழ்க்கட்டிகள்தாம்.


பார்தோலின் சுரப்பி நீர்க்கட்டி உருவாவதற்கு என்ன காரணம் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.  இது சிறியதாக இருக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தாது. பெரிதாக வளரும்போது அசாதாரணமாக வளர்ந்து நோய்த்தொற்று ஏற்பட்டுப் பாதிப்பை உண்டாக்குகிறது. பார்தோலின் நீர்க்கட்டியில் உள்ள திரவத்தை மருத்துவர் சரி பார்க்க விரும்பலாம். பெரும்பாலான நீர்க்கட்டிகள் அப்ஸஸ் எனப்படும் நம் தோலில் காணப்படும் சாதாரன பாக்டீரியாவைக் கொண்டிருக்கும். சிலவே பாலியல் ரீதியாகப் பரவும் பாக்டீரியாவால் ஏற்படுகின்றன.

பார்தோலின் சுரப்பி நீர்க்கட்டிகள் உருவாவதைத் தடுக்க உறுதியான வழிகள் ஏதுமே இல்லை. சுகாதாரம் பேணுதல் சிறப்பு. எவ்வளவுதான் தனிப்பட்ட சுகாதாரம் பேணியும் இவை தோன்றுவது உண்டு. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை எளிது. மேலும் வலி, வேதனை தோன்றாது. பொதுவாக ஒரு பார்தோலின் நீர்க்கட்டி யோனித் திறப்பின் ஒரு பக்கத்தில் மட்டுமே ஏற்படுகின்றது.

இந்த நீர்க்கட்டி/சீழ்க்கட்டி சிகிச்சையானது மிகவும் வேதனை தரக்கூடியது. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு நாளைக்குப் பலமுறை சிட்ஸ் குளியல் எனப்படும் ஒரு பேஸின் வெதுவெதுப்பான நீரில் பாதிக்கப்பட்ட பகுதியை ஊறவைப்பதன் மூலம் சிறிய நீர்க்கட்டிகளுக்குச் சிகிச்சை அளிக்கலாம். இந்த நீரில் எப்சம் உப்பு அல்லது சிட்ஸ் உப்பு சேர்ப்பது வலியைக் குறைக்க உதவும். இது சிறிய வலியுடன் நீர்க்கட்டி வெடித்து வெளியேற உதவுகிறது.

மிக அரிதான சந்தர்ப்பங்களில் மருத்துவர் இந்த நீர்க்கட்டியில் ( பெரிதாயிருக்கும் பட்சத்தில்) ஒரு கீறல் செய்து சிறிய வடிகுழாயை வைப்பார். அது நான்கு அல்லது ஆறு வாரங்கள் வரை இருக்கும். ஆனால் பாலியல் செயல்பாட்டை இச்சமயங்களில் தவிர்த்தல் நலம். சிகிச்சையின் முடிவில் மருத்துவர் இவ்வடிகுழாயை சிறிய அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவார். இன்னொரு முறை சிகிச்சையில் இத்திரவத்தை வெளியேற்ற நீர்க்கட்டியில் ஒரு சிறிய வெட்டு ஏற்படுத்தப்படுகிறது. இந்த முறை மார்சுபலைசேஷன் என்று அழைக்கப்படுகின்றது. சில வாரங்களை வரை இந்த நீர்க்கட்டியில் வெளியேற்றம் இருக்கும். இந்த வெளியேற்றத்தை அதிகமாக இருப்பதால் நாப்கின்கள் அணிந்து கொள்ள வேண்டும். 

சில சமயம் லேசர் சிகிச்சையைப் பயன்படுத்துகிறார்கள். முழு சுரப்பியையும் அகற்ற அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வளவு சிகிச்சைக்குப் பின்னும் பார்தோலின் நீர்க்கட்டி வர வாய்ப்பு உள்ளது. பலவருடங்கள் கழித்துக் கூட மீண்டும் ஏற்படலாம். இவ்வாறு அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவர் முழு சுரப்பியையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுவார்.

ஒரு பார்தோலின் கட்டி பாதிக்கப்பட்டு சீழ் உருவானால் கோனோரியா மற்றும் கிளமிடியா போன்ற பாலியல் ரீதியாகப் பரவும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். பாக்டீரியாக்கள் உட்பட பல பாக்டீரியாக்கள் தொற்று நோயை ஏற்படுத்தலாம். தொற்று ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நீர்க்கட்டிக்கு சிகிச்சை அளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (ஆண்டிபயாடிக்ஸ்) உதவியாக இருக்கும்.

நாற்பது வயதுக்கு மேல் இருந்து இச்சீழ்க்கட்டி ஏற்பட்டு வலி இருந்தால் மருத்துவரைப் பார்க்கவேண்டும். இது புற்றுநோய்க் கட்டியா அல்லது பார்தோலின் கட்டியா என்பதை உறுதிப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். யோகா, சமச்சீர் உணவு, ஓய்வு, உறக்கம் ஆகியன இதைக் குணப்படுத்தும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...