168.
1896*இராமேஸ்வரம் சென்று வருபவர்கள் முன்னே இந்தச் சோகிகள், சங்குகளையும் வாங்கி வந்துள்ளார்கள். காரைக்குடிப் பக்கம் நல்லதுக்கு எல்லாம் சங்கு ஊதுவது வழக்கம். ( வேவு எடுத்தல், பொங்கல், பிள்ளையார் நோன்பு என்று ) அந்தச் சங்குகளை வெள்ளி பிடித்து வைத்திருப்பார்கள். வலம்புரிச் சங்கு என்றால் ரொம்பவே விசேஷமாக வெள்ளி பிடித்து வைத்து வணங்கி வருவார்கள்.
இந்தச் 1897*சோகிகள் எல்லாம் திருமணத்தில் வைத்தது. இராமேஸ்வரம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் எப்படித்தான் எழுதினார்களோ தெரியவில்லை. முழுதுமே ஓவியம் போல் இருக்கிறது. ராமர், லெக்ஷ்மணர், சீதை, அனுமன், வானரப் படைகள் என்று எனாமல் பெயிண்டிங் போல் வரையப்பட்டிருக்கு.

