எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 17 செப்டம்பர், 2015

ஆவணியாய்.10.4.86.

12. ஆவணியாய் இருக்கிறது
மனது.

காய்த்தலும் கனித்தலும்
பூத்தலும் இல்லாமல்.


தூவானமும் இதவெய்யிலும்
ஒதுக்கி,

தவலை மூடியின்
சூரியத் தெறிப்பாய்
கொடுத்ததை
வெளிப்படுத்திக்கொண்டு

பாலைக் கொடுத்துவிட்டு
தண்ணீரைப் பருகும்
அன்னமாய்,

நிகழ்ச்சித் துளிகளை
விழுங்கும்
சாதகமாய்

விடிகாலை மரங்களைப் போலத்
தெளிவுடன் பசுமையுடன்
சுத்தமாய் இருக்கிறது மனது. 


5 கருத்துகள்:

 1. அருமையான பகிர்வு.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. ---விடிகாலை மரங்களைப் போலத்
  தெளிவுடன் பசுமையுடன்
  சுத்தமாய் இருக்கிறது மனது. ---
  கொடுத்து வைத்தவர் தாங்கள்

  பதிலளிநீக்கு
 3. நன்றி வெங்கட் சகோ

  நன்றி ஜெயக்குமார் சகோ :)

  நன்றி நவாஸ் சகோ :)

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...