எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 செப்டம்பர், 2015

அகலிகா

புத்தம்புது அறை வாசனைக்குளிர்காற்று
கண்ணெட்டும்தூரம் கடல்.
கதகதப்போடு முடங்க
வெள்ளைஉறை மெத்தை.
மனிதர்களின் மக்கல் வாசனைமட்டுப்படுத்தப்பட்ட
ஒரு அறைக்குள்ளில் அயர்ந்திருந்தேன்.


சாளரக் கொக்கிகள் உடைபட்ட ஒரு இடம்
துண்டாய்ப் பெயர்ந்திருக்க
ஒற்றை ஆணி கொத்தி நின்றது இரும்புக்கிளியாய்.
மாலைக் காற்றுக்கூதலடிக்கத்தொடங்க
யன்னல்களில் ஒரு படபடப்பு
கொழுமிய கன்னங்களும்
விரிந்த விழிகளும்கொண்ட
ஒரு பஞ்சுச்சிலைமேல்
மோதி நின்றது கண்ணாடி
ஒரு புறம் பிரிக்க மறுபுறம் மூடி
என் மேல் விழுந்தாளா
அவள் மேல் விழுந்தேனா
கைகோர்த்து உள் நுழைந்திருந்தாள் அவள்.
அகல்யாவா அகலிகாவாஎனக் குளறினேன்.
அன்பான அக்காநீ என எல்லாரும்
சொல்வதுபோல சொல்லி
ஊடுருவிக்கொண்டிருந்தாள்
கனவின் விழிகளுக்குள்.
உண்மையாவெனப் பிரிக்கப் பிரிக்க
அலை நுரையாய் அலைந்து கொண்டிருந்தாளவள்.
விரல்கோர்த்துத் தலைமேல்நீட்டி
துவாதச ஈசனைக் கூப்பிடத்தொடங்கியிருந்தேன்.
அதிர்ந்து விலகி விரல்களில் விடுபட்டு அலைகளில்
நனைந்து மிதந்து மேலெழும்பிக் கொண்டிருந்தாளவள்.
கேசங்கள் பிடித்துத் தூக்க எண்ணிவிழித்தெழ
இரவொளியில் சலங்கையொலிக்க
எப்போதோ விழுங்கியவளை உயிர்ப்பித்துச்
சுழன்றுகொண்டிருந்தது அலை.
ஒவ்வொரு அலையையும் பிரித்துப்
பார்த்துகொண்டிருந்தேன் அகலிகா பிடிபடுவாளென.

3 கருத்துகள்:

 1. தேன், அருமையான வார்த்தைப் பிரயோகங்கள்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி துளசி சகோ

  நன்றி செல்வம் !!!!!!!!

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...