ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7

153. வண்ண ஜன்னல் கதவுகள். ஜன்னலுக்கு மேல் உள்ள இடத்தில் ஒரு ஓவியம் இருந்திருக்கும். அதை புதுப்பிக்கும்போது பெயிண்ட் செய்ததால் மறைந்துவிட்டது. வளைவில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் காற்றோட்டம் வேண்டும் என்பதால் இப்படி அமைத்திருக்கிறார்கள் . தேக்கு மரத்தால் செய்யப்பட்டு இரும்புக் கம்பிகளுக்கு சில்வர் வார்னிஷ் அடித்து  வலையும் போட்டிருக்கிறது .


154. நிலையில் இருக்கும் மர வேலைப்பாடு . ஒரே மரத்துண்டில் படிப்படியாக செதுக்கப்பட்டு அதில் நாகம் தாமரை மடிப்புகள் போன்ற வேலைப்பாடு செய்யப்பட்டிருக்கும். 155. ( மணிமேகலையில் சாவக நாட்டில் உள்ள ) நாகபுரத்தில் இருந்து வந்ததால் நாகங்கள் செதுக்கப்பட்டிருக்கலாம். ( காரைக்குடியில் செஞ்சைக்கு அருகில் சிவன் & பெருமாள் கோயில் இருக்கும் இடத்திற்குப் பெயர் நாகநாதபுரம் . சிவன் பெயரும் அதுவே நாகநாத ஸ்வாமி )


வீட்டின் முகப்பு. பத்துப் படியாவது ஏறிப்போக வேண்டும். அதன் முன்புறம் விசாலமான கதவுகள். கோயில் கதவுகள் போல வரவேற்கும். உள்ளே நுழைந்து கொக்கி -- 156. கொண்டி  போட எம்ப வேண்டியிருக்கும். அவ்ளோ உயரம்.


157. முட்டை வெள்ளைக் கருவையும் ஓட்டையும் சுண்ணாம்புடன் குழைத்துப் பூசுவதால் ஒரு மாதிரி பளபளவென்ற வெண்மை நிறம் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இங்கே பிரம்மாண்டத் தூண்கள் முகப்பில் அணிவகுக்கின்றன.15-  20 அடி உயரம் இருக்கலாம்.இவை அவ்வாறே பூசப்பட்டவை.


அடுப்படியும் மாடியும். 158. மரப்படிகள் கொண்ட மாடி அமைப்பது உண்டு இங்கே காரைக்குடியில். முகப்பில் மேல் பத்தியும் கீழ் பத்தியும். ( பெரியம்மாவும் மாமா பெண்ணும் )


எனாமல் மயில் ( முன்பு கதவில் உள்ளதைப் படம்பிடித்துப் போட்டிருந்தேன். இது முகப்புச் சுவற்றில் பதித்தது. ) என்ன ஒரு கலை அழகு பாருங்கள். பத்து 159. டைல்ஸில் தோகையுடன் ஜோடி மயில் .


160.உள் மேங்கோப்பு. தேக்கு மரப்பலகைகளால் மூடப்பட்டு மரச்சட்டங்களாலும் நிலை நிறுத்தப்பட்டிருக்கு. அதில் வெள்ளை மற்றும் தங்கநிற பெயிண்டும் மர வார்னிஷும் அடித்திருக்கின்றார்கள். 


161. வீட்டுகளின் முகப்பில் ( காக்க ) பெண் உருவங்களை வைப்பது காரைக்குடி ஸ்டைல். பெண் தேவதை அல்லது தெய்வம் குடி கொண்ட கோயிலாகவே அனைத்து வீடும் இருக்கும்.காவல் தெய்வங்களின் சைடில் ஏவல் தெய்வங்கள் அல்லது பணிப்பெண்கள். அல்லது சிங்கம் யானை போன்றவை இருக்கும். இரு புறமும் 162. இடி தாக்கா கலசங்கள் ஒரு ஸ்பெஷாலிட்டி. இங்கே தாமரைப்பூ வைத்த பெண் சிலையும் அதன் கீழ் யானையும் வைக்கப்பட்டுள்ளது. சாமிக்கு வைப்பதுபோல் 163. திருவாச்சியும் கட்டப்பட்டுள்ளது.அநேகமாக இது ஏதும் சாமி வீட்டின் முகப்பாக இருக்கலாம். ( அக்கினியாத்தா போல் )


அதே போல் இந்த வீட்டின் முகப்பில் வடிக்கப்பட்டிருக்கும் சிலை விக்டோரியா மஹாராணி போல் தெரிகிறது. இரு புறமும் சிங்கங்கள் இருக்கின்றன. கீழே ஒரு குட்டிப் பெண்ணும் அவளுக்கு இருபுறமும் காவலாக இன்னும் இரு குட்டிப் பெண்களுமிருக்காங்க. கீழே இரு பணிப்பெண்கள் நிற்பதுபோல் வைக்கப்பட்டுள்ளது. மேலே மேங்கோப்பு ஓட்டிலிருந்து மழைத்தண்ணீர் வடிய ஓபன் வைக்கப்பட்டுள்ளது.


அதே கதவின் முழுப்புறத் தோற்றம். இரும்புக் கதவுகள் குறுக்குக் கிராதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கு. 1876 இல் கட்டப்பட்டிருக்கு. இப்போ இந்த வீட்டுக்கு வயசு 140. !!!


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5.

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அன்றைய மக்களின் மன உறுதி போல....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான படங்களும் தகவல்களும்......

தொடரட்டும் பகிர்வுகள்.

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

அருமை.. 140 ஆண்டுகள்? அம்மாடி..

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் டிடி சகோ

நன்றி வெங்கட் சகோ

ஆம் ஆரூர் பாஸ்கர் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Sumitha Ramesh சொன்னது…

சூப்பர், சூப்பர் ,வீட்டை ஒரு ரவுண்ட் வந்த பீல் ...(y)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...