எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தென்னக ரயில்வே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தென்னக ரயில்வே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 ஜூன், 2013

ரயில் நிலைய அவதிகள்:-

ரயில் நிலைய அவதிகள்:-

கடல், மயில், யானை, குழந்தை, வானவில் இந்த வரிசையில் பெரும்பாலோருக்குப் பிடித்த ஒன்று ரயில்.  ரயில் ஓடிவரும்போது பார்த்து ரசிக்காம இருக்க முடியாது. அழகான ராட்சசன் வர்றது போல இருக்கும். அவ்வளவு காதல் எனக்கு ரயில் மீது. 

அதே அளவு காதல் ரயில்வே ஸ்டேஷன்கள் மீதும். காரைக்குடியிலும் கும்பகோணத்திலும் மிக நீண்ட ரயில்வே ப்ளாட்பாரங்கள் உண்டு. இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும்  ஏதோ பைபாஸ் ரோட்டை கண் கொள்ளும் அளவு பார்க்குற மாதிரிப் பார்க்கலாம். வாகிங் போறவுங்க, ஜாகிங்க் போறவுங்கள எல்லாம் கூட இப்போ ரயில்வே ஸ்டேஷன்ல பார்க்க முடியுது.

திங்கள், 17 டிசம்பர், 2012

அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்

நல்லா குண்டாயிட்டே நீ என தோழிகள் கலாய்க்கிறாங்களா.. எந்தக் கடையில அரிசி வாங்குறேன்னு யாரோ ரெண்டு பேர் எதுத்தாப்புல பேசிக்கிட்டே போறாங்களா.. விளம்பரத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் சிக் சிக்னு சிக்கன் மாதிரி சுத்துறாங்களா... சே இந்த ஹிந்தி ஹீரோயின் எல்லாம் எப்பிடி இப்படி ஸ்லிம்மா இருக்காங்கன்னு வயித்தெரிச்சலா இருக்கா.. கொஞ்சம் தண்ணீரை குடிச்சு வயித்தெரிச்சலை அணைச்சிட்டு நம்ம தென்னக ரயில்வேயில ஒரு டிக்கெட் ரெண்டு ராத்திரிக்கு புக் பண்ணுங்க போதும்.. என்ன விஷேஷம்னு கேக்குறீங்களா .. அட நீங்க ஸ்லிம் ஆகத்தான். எதுக்கு ரெண்டு..? வீட்டுக்காரர் கூட போகவான்னு கேக்குறீங்க. அட அது ரெண்டுமே உங்களுக்குத்தாங்க.. ஏன்னா ஒரு ஊருக்குப் போயிட்டு திரும்ப வீட்டுக்கு வரணும்ல.. அதான்.

முக்கியமா அது ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ் அல்லது சேரன் அல்லது ப்ளூ மவுண்டனா கூட இருக்கலாம். கொஞ்சம் இருங்க வெயிட் லாசுக்காக உங்களை மலை எல்லாம் ஏற சொல்லலை. நீலகிரி எக்ஸ்ப்ரஸைத்தான் அப்பிடிச் சொன்னேன். அப்புறம் முக்கியமா. ராத்திரி ட்ரெயினுக்கு புக் பண்ணுங்க.அதுவும் கடைசி சமயத்துலதான் தட்கால்ல புக் பண்ணனும் . அப்பத்தான் நம்ம கோச்சே இருக்கோ இல்லையோன்னு தேடிக்கிட்டே போனாம்னா ஏ1., ஏ2.,ஏ3., ஏ4 இது போல பி1 லேருந்து பி 4 வரை அப்புறம் ஏசி கோச். அப்புறம் எஸ் 1 எஸ் 2 லேருந்து எஸ் 11 வரைக்கும் இருக்கும். ஆனா எஸ் 12 இருக்காது. அதுக்குத்தான் நீங்க டிக்கட் புக் பண்ணி இருப்பீங்க. நீங்க நடந்து நடந்து கடைசியா எஞ்சினே வரபோகுது. ஒரு வேளை பாத யாத்திரையாவே போகப்போறமோன்னு நினைக்கும்போது ஜெனரல் கம்பார்ட்மெண்ட் அப்புறம் கொஞ்சம் லக்கேஜ் கம்பார்ட்மெண்ட் அதுக்கும் அப்புறம் எஞ்சின் பக்கத்துல அப்பாடா உங்க எஸ் 12 வந்திருச்சு. சரி விருவிருன்னு ஏறி உக்காருங்க..அடுத்த ஊருக்க்கே வந்துட்டமோன்னு களைப்பா நடந்து வந்த நேரத்துல ட்ரெயின் கிளம்பிறப்போகுது.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

என்னது..ட்ரெயின்ல மட்டும் மனுஷங்க வளர்றாங்களா

ட்ரெயின்ல மட்டும் மனுஷங்க வளர்றாங்களா..

ஆமாங்க ஆமாம். இந்த அதிசயத்தை நான் பல ட்ரெயின் பிரயாணங்கள்ல பார்த்து இருக்கேன். வரும்போது நம்ம மாதிரிதான் இருப்பாங்க. ஆனால் தூங்கும்போது ட்ரெயின் நிர்ணயிச்ச சீட் அளவை விட அதிகமா அவங்க கால்கள் நீட்டிக்கிட்டு இருக்கும்.

பொதுவா நடுவில் வர பர்த்துங்கள்லதான் அதிகமா இப்பிடி இருக்கும். சைட் அப்பர்ல சில சமயம் இப்படி இருக்கும். எதுக்கும் எந்திரிக்கும்போது நாம பாத தரிசன க்யூவில நிக்கிறமோன்னு நினைக்கிற அளவுக்கு சில சமயம் இருக்கும்.

திங்கள், 3 அக்டோபர், 2011

தென்னக ரயில்வேயில் ( ஒரு நாற்றம் பிடித்த) பயணம்.

இந்தத்தலைப்பைப் பார்த்ததும் தென்னக ரயிலில் பாத்ரூமுக்குப் பக்கத்தில் 72 ஆம் நம்பர் சீட்டில் அமர்ந்து பயணித்தது என எண்ணி இருப்பீர்கள். இல்லை இல்லை இது தட்காலில் ஏசி கோச்சில் புக் செய்து ( டிக்கட் விலை 705 ரூபாய்) அனுபவித்த கொடுமை இது.

நார்மல் டிக்கெட் செகண்ட் க்ளாஸில் புக் செய்தால் வீட்டில் இருந்து ஏர் பில்லோ., ப்ளாங்கெட் எல்லாம் தூக்கி வருவோம். இது ஏசி என்பதால் இதை எல்லாம் எடுக்காமல் வந்தேன். ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸில் த்ரீடயர் ஏசியில் பதினொன்னரை மணி வண்டிக்கு இடம் கிடைத்தது. தட்காலில் புக் செய்பவர்களுக்கென்றே அப்பர் பர்த் வைத்திருக்கிறார்கள். மிகுந்த கஷ்டப்பட்டு ஏறினால் ஒரு தலையணை ஒரு போர்வை ஒரு பெட் ஸ்ப்ரெட் இருந்தது. கம்பளி இல்லை.கம்பளி இல்லாமல் எப்படி ஏசியில் இருப்பது. அப்போது கீழே இரு குழந்தைகள் கம்பளி போட்டு போர்வை போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளின் அம்மா எதிர் சைட் பர்த்தில் அமர்ந்து என் சீட்டைக் கைகாட்டி அது என்னுடையது என வாதிட்டார்கள். இல்லையம்மா இது என்னுடையது உங்களுடையது 38 அடுத்தது என சொல்லி விளங்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.