எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நகரத்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகரத்தார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஜூன், 2017

மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.


716*மொய்ப்பண ஏடு திருமணம் முடிந்ததும் உபயோகப்படுத்துவது. 717* இசை குடிமானம் என்பது திருமணப் பதிவு. இன்றைக்கு ரெஜிஸ்டர் செய்துகொள்வது போன்றது.

இது இரண்டும் கட்டாயம் திருமணக் கணக்கு வழக்குகள் நிர்வகிக்கப்படும் கைப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். திருமணத்தின் போது பயன்படும்.

இக் 718* கைப்பெட்டியில் மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, விபூதிப் பிரசாதம், 719* மாமப் பட்டு, 720* பட்டில் முடியும் வெள்ளிக் காசு, 40 பக்க நோட்டு, பேனாக்கள், பென்சில், ஸ்டாப்ளர், பின்கள், பணம் வைக்கும் கவர், மொய்ப்பண ஏடு, இசை குடிமானம், திருமணச் செலவுக்கான பணம் வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருக்கும். !

இவை இரண்டையும் வலையப்பட்டியைச் சேர்ந்த பழ ஜெயங்கொண்டான் செட்டியார் என்பவர் தம் இல்லத் திருமணத்தின் போது அன்பளிப்பாக அளித்திருக்கிறார்.

சனி, 13 ஆகஸ்ட், 2016

காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)


386. ஏழு வாயிற்கதவுகள் கொண்டவை காரைக்குடி வீடுகள். 387.முகப்புக் கதவு, 388.பட்டாலைக் கதவு, 389.வளவுக் கதவு, 390.ஆல்வீட்டுக் கதவு, 391.இரண்டாங்கட்டுக் கதவு, 392.மூன்றாங்கட்டுக் கதவு, 393.பின் வாசற்கதவு என ஏழு இரட்டைக் கதவுகள் உண்டு.
394. இது மணிப்பூட்டு. பூட்டு ஒரு சுற்றுச் சுற்றி லாக் ஆனவுடன் ட்டிடிங் என்று சத்தம் கேட்கும். இது போல் மூன்று முறை சுற்றிப் பூட்டணும்.
சாவிகளும் கோயில் சாவிகள் மாதிரிப் பெரிதானவைதான். அந்த ஸ்விட்ச் போர்டைப் பாருங்க இப்பல்லாம் தட்ட எளிதான வெள்ளை பட்டன்கள். இந்த 395.கறுப்பு சுவிட்சைத் தட்டினால் டிக் என்று சத்தம் கேட்கும்.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.

361. வர்ணக்கோமாளி - அதி கோமாளித்தனமாகக் காரியம் செய்பவர்களைக் குறிப்பிடும் வார்த்தை. இருக்கும் வர்ணத்தை எல்லாம் கோமாளி முகத்தில் அடித்துக் கொள்வதைப் போலக் கிறுக்குத்தனமாக எல்லாப் பக்கமும் பேசித் திட்டு வாங்குபவர் இவர். சமய சந்தர்ப்பம் தெரியாமல் காமெடி செய்பவரையும் குறிக்கும்.

362. பாடாவதி. - பயனற்றவர்., சுமார். உருப்படாதவரைக் குறிப்பது.

363. சர்வ பாடாவதி - எக்ஸ்ட்ரீம் பாடாவதி. சுத்த வேஸ்ட் என்பதைப் போல. எதுக்கும் லாயக்கில்லாதவர் எனச் சொல்வது.

364. திருகுதாளம் பிடிச்சது - எந்த விஷயத்தையும் ட்விஸ்ட் செய்து விடுபவரைக் குறிப்பது

365. தீசப் பிடிச்சது. - நல்லெண்ணம் அற்றவரைக் குறிப்பது. தீசல் என்றால் தீய்ந்து போதல் ஒரு பொருள் அதி உஷ்ணத்தால் தீய்வது போல அடுத்தவரைப் பார்த்து அதீதமாகப் பொறாமைப்படுபவரைக் குறிப்பது.

366. பூதிப்படையில. - ஒரு விஷயத்தைப் பற்றிய சரியான தெளிவில்லாமல் அடித்து விடுவது. குத்து மதிப்பாகச் சொல்வது.

367. வெகண்டை - தேவையில்லாமல் கிண்டல்/நக்கல் செய்பவரைக் குறிப்பது.

செவ்வாய், 24 மே, 2016

காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும்.



 321. ஆடிச்சீர் - திருமணம் முடிந்த முதல் மூன்று வருடங்களுக்கு ஆடி மாதத்தில் வழங்கப்படும் சீர். ஆனால் இப்போதெல்லாம் முன்பே ஏதோ பணமாகக் கொடுத்து விடுகிறார்கள் . அல்லது இது இப்போது நடைமுறையில் இல்லை எனலாம். 

322. விளையாட்டுப் பொட்டி வேவு - பிள்ளை பிறந்ததும் எடுக்கப்படும் வேவு. விளையாட்டுச் சாமான்களைப் பரப்புவார்கள். வெள்ளி வேவுக் கடகாத்தில் பச்சரிசி தேங்காய் வைத்து ஆயா வீட்டில் இருந்து வேவு இறக்குவார்கள். இதற்கு அப்பத்தா வீட்டில் பலகாரம் செய்வார்கள். 

323. பொங்கல் சீர் :- சிலர் பொங்கல் சீரை வேவாகவும் எடுப்பதுண்டு. 

324. வேவு :- வீட்டு நிலை வாசலில் நடுவீட்டுக் கோலம் போடப்பட்டிருக்கும், அதன் முன் ஸ்லேட்டு விளக்கு ஏற்றப்பட்டிருக்கும். இந்த ஸ்லேட்டு விளக்கை அந்த வீட்டில் உள்ள திருமணமாகப்போகும் பையன்/பெண்ணின் அப்பத்தாவோ அத்தை முறை உள்ளவர்களோ ஏற்றிக் கொண்டு வந்து வைப்பார்கள். அதன் முன் வேவு இறக்கும் பங்காளிகள் தலையில் தலைப்பா கட்டி வேவு இறக்குவார்கள். 

325. மாமவேவு :- இது திருமணத்தன்று ஆயா வீட்டில் இருந்து முதல் பையன் அல்லது பெண் திருமணத்தன்று திருமணத்துக்கு முன் வேவு எடுப்பார்கள். இதில் பரங்கிக்காய் , இலைக்கட்டு, பச்சரிசி, தேங்காய், வெல்லம் போன்றவையும் சீராக எடுத்து வரப்படும். 

புதன், 27 ஏப்ரல், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.


காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.

301. பெண் பார்த்தல் :- இது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. முக்கால் வாசி இது கோயில், வயது, படிப்பு, தகுதி எல்லாம் முன்பே பார்த்து முடிவு செய்யப்பட்டு மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்படுவது. இது சில சமயம் கோயில்களிலும் சில சமயம் உறவினர் வீடுகளிலும் ராசியான இல்லங்களிலும் நிகழ்வதுண்டு.

302. திருவிளக்கு ஏற்றுவது. :- இது பெரும்பாலும் அப்பத்தா அல்லது அய்த்தைகள் ஏற்றுவார்கள். மாப்பிள்ளை & பெண் இருவர் வீடுகளிலும். விசேஷத்தின் ஆரம்பத்தைக் குறிப்பது. 

303. கூடி ஆக்கி உண்ணுதல்: -  304. தாய பிள்ளைகள், பங்காளிகள்  அனைவரும் திருமணத்தன்று முதல் நாள் காலையிலேயே வந்திருந்து கலந்து கொள்வதைக் கூடி ஆக்கி உண்பது என்பார்கள்.



ஞாயிறு, 27 மார்ச், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

281. கல்யாணம் எழுதிக் கொள்ளுதல். - இன்னாரின் மகனை/பேரனை  இன்னாரின் மகளுக்கு/பேத்திக்குத் திருமணம் செய்ய நாள் குறித்து நோட்டில் எழுதிக் கொள்ளுதல்.பெரும்பாலும் பெண் மற்றும் மாப்பிள்ளையின் வீட்டார் கூடி இருக்க, இருவரின் அப்பத்தா வீட்டு ஐயாக்கள் எழுதிக் கொள்வார்கள்.

 282. பேசி முடித்துக் கொள்ளுதல் - பெண் பார்த்தபின் இரு வீட்டாரும் கூடிப் பேசி நிச்சயம் செய்து கொள்வது.

283.  முறைச்சிட்டை எழுதுதல் - திருமண  முறைகளை நோட்டுகளில் எழுதிக் கொள்ளுதல்.

 284 . கல்யாணம் சொல்லுதல் - திருமணத்துக்கு  முதலில் அப்பா அம்மா சகோதர சகோதரி எல்லாரையும் வேவுக்கடகத்தில் தேங்காய் பழம் வைத்து அழைத்து பின் அனைவரையும் அழைத்தல் .இதற்கு அவரவர் பெரிய வீட்டில் சாமி அறையில் நடுவீட்டுக் கோலம் போட்டு வைத்திருப்பார்கள். வருபவர்கள் தடுக்கில் அமர்ந்து தலைப்பா கட்டி திருமணத்துக்கு வரச் சொல்லி அழைப்பார்கள். 


285. முகூர்த்தக் கால் ஊன்றுதல் - திருமணத்துக்கு  ஒரு வாரம் அல்லது 4 நாள்/ 3 நாள் முன்பு முகூர்த்தக் கால் ஊன்றுவார்கள். அதன்பின் திருமணம் முடியும்வரை நல்லது கெட்டதுக்கு விசாரிக்கப் போகமாட்டார்கள்.

286. நடுவீட்டுக் கோலமிடுதல்  - நடுவீட்டிலும் நடையிலும் நடுவீட்டுக் கோலம் இடுவார்கள். பெரும்பாலும் பங்காளி வீட்டுப் பெண்கள் வந்து சட்டம் வைத்துக் கட்டம் போட்டு கோலக்கூட்டைக் கரைத்துத் துணி கொண்டு  கோலமிடுவார்கள்.

புதன், 9 மார்ச், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

நிறைய சொல் வழக்குகள் வழக்கொழிந்து போய் விட்டன.. மிச்சமிருக்கும் இவற்றை பதிவு செய்யவே இது..

261. மக்களுக்கு அப்பச்சி - கணவரைக் குறிப்பிடுவது. என் மக்களுக்கு ( பிள்ளைகளுக்கு அப்பா ) அப்பச்சி என்று அடுத்தவரிடம் சொல்லும்போது குறிப்பிடுவது. கணவர் வெளியில் சென்றிருக்கும்போது ஏதும் தாக்கல் சொல்லவேண்டி  யாரும் வீட்டுக்கு வந்திருந்தால் அவர்களிடம் ”எம் மக்களுக்கு அப்பச்சி வந்ததும் சொல்றேன் ”என்பார்கள் இல்லத்தரசிகள். ( மனைவி )

262. நாச்சியா மகன் - இதுவும் கணவரைக் குறிப்பிடுவது. நாச்சியா என்று மாமியாரைக் குறிப்பிடுவது. பிள்ளைகள் சேட்டை செய்தால் ”சேட்டை கொறையலையே. வரட்டும் நாச்சியா மகன் “ என்று பிள்ளைகளை அன்பாக மிரட்டுவார்கள். வெளியே சென்றிருக்கும் கணவர் வந்ததும் சொல்லி மாட்டிக் கொடுப்பதாக அர்த்தம். :)

263. சோறு உண்ணு/சோத்தை உண்ணுட்டுப் போ   -  சோற்றை உண்பது. உண்ணுதல் என சாப்பிடுவதைக் குறிக்கிறது. மென்று சாப்பிடுதல் எனவும் சொல்லலாம்.

264. வெஞ்சனம் - காய்கறி. குழம்பில் இருக்கும் காய், பொரியல் , கூட்டு, பிரட்டல், மசாலை மண்டி வறுவல் , துவட்டல் போன்ற சமைத்த காய்கறிகள். இன்னைக்கு என்ன வெஞ்சனம் சமைச்சே என்று விசாரிப்பதுண்டு. இன்னிக்கு என்ன வெஞ்சனம் வைக்க என்று கணவரிடம் கேட்டுக் கேட்டு மனைவியர் சமைப்பதுண்டு. :)

265. லோட்டா - டம்ளர், தண்ணீர் அருந்தும் குவளை.

வியாழன், 3 மார்ச், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!


241. அடம் - அடம் செய்யும் குழந்தைகளைக் குறிப்பது.

242. சீண்ட்ரம் - எது கேட்டாலும் கோபத்தோடு கத்தும் குழந்தைகளைக் குறிப்பது.

243. பொல்லாப் பூடம்.. -  சேட்டை செய்யும் குழந்தைகளை குறிப்பது.

244. அட்டணக்கால் - கால் மேல் கால் போட்டு அமர்தல்.

245. அலக்கழிக்கிது - கேலி செய்யுது

246.ஒறண்டை - வம்புக்கு இழுப்பது

வியாழன், 6 நவம்பர், 2014

ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

நகரத்தார் சொல் வழக்கு:- 1.
****************************
45. உறவு முறைச் சொற்கள்.

நிறைய வழக்குச் சொற்கள் வழக்கொழிந்து போய் விட்டன.. மிச்சமிருக்கும் இவற்றை பதிவு செய்யவே இது..

உறவுமுறைச் சொற்கள் முதலில்  கொடுத்துள்ளேன்.


1. அப்பச்சி - தந்தையை அழைக்கும் சொல்

2. ஆத்தா -  தாயை அழைக்கும் சொல்.

3, ஐயா  - அப்பாவை பெற்ற தாத்தா அல்லது அம்மாவைப் பெற்ற தாத்தா.

4. அப்பத்தா - அப்பாவை பெற்ற அம்மா..(பாட்டி)

5. ஆயா-   அம்மாவைப் பெற்ற அம்மா..( பாட்டி)

வெள்ளி, 24 அக்டோபர், 2014

பேரன்பின் அருணாசல ஐயாவுக்கு நூற்றாண்டு விழா.

எங்கள் அன்பு ஐயா.
அம்மா என்றால் அன்பு என்றோரு பாடல் உண்டு ஆனால் எங்களுக்கோ எங்கள் அப்பத்தாவீட்டு  (அருணாசல) ஐயா என்றால் அன்பு.  பொங்கும் கருணையும் அன்பையும் எங்கள் ஐயாவின் கண்வழியேதான் பார்க்கவேண்டும்.

செவ்வாய், 20 மே, 2014

குறள் சூடி உமையாள்..!!!



குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல்  கேளாதவர்.

இங்கே குறள் இனிது எனலாம். 3 வயதுப் பெண் குழந்தை ஒரு உபன்யாசகராக, சொற்பொழிவாளராக இருக்க முடியுமா.. அந்த அதிசயத்தைக் காண நேர்ந்தது துபாய்க்கு  ஒரு குடும்ப விழாவுக்காகச் சென்றிருந்தபோது.

ஒரு 3 வயதுக் குழந்தை குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தது. அவளை அறிமுகப்படுத்தி மேடையேற்றியபோது மிக அழகாக மேடைக்கூச்சமில்லாமல் மேடையேறி மைக்கைப் பிடித்துப் பேசினாள்.

திங்கள், 3 மார்ச், 2014

பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.

பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-

திருமணமான பெண்ணுக்குத் தாய் வீட்டில் இருந்து வரும் சீரில் முக்கியமானது பொங்கல் சீர். காரைக்குடியில் எங்கள் ஆயா வீட்டில் இருந்து வருடா வருடம் பொங்கல் சீர் எடுத்து வருவார்கள். அதைப் பொங்கப் பானை கொடுப்பது என்பார்கள். பெண் இருக்கும் வரை பொங்கல் பானை கொடுப்பார்கள்.

புதன், 25 செப்டம்பர், 2013

கருமுத்துக் கண்ணன்..

கருமுத்து வழிவந்த
திரு முத்து கண்ணன்..
பெருமுத்தாய் விளைந்திருக்கும்
அரு முத்து மன்னன்.

தக்காரைத் தக்காராய்க்
கொண்டாள் மீனாக்ஷி.
தக்கபடி பணிபுரிவார்
கரு முத்து மாட்சி..

புதன், 21 ஆகஸ்ட், 2013

கலைச்செல்வி மெய்யம்மை ஆச்சி.

கலைச்செல்வி மெய்யம்மை ஆச்சி..

கொப்பனாபட்டியில் அ. மெய்யப்பச் செட்டியார் , நாச்சம்மை ஆச்சி அவர்களால் ஆரம்பித்து நடத்தபட்டது கொப்பனாபட்டி கலைமகள் தமிழ்ப் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட வருஷம் 5040.  அதாவது 1937 இல்  கட்டப்பட்டது.

திருமதி மெய்யம்மை ஆச்சி காரைக்குடியைச் சேர்ந்தவர். திரு. வள்ளியப்ப செட்டியார் அவர்களின் புதல்வி. திரு மாணிக்கம் செட்டியாரின் மனைவி. அவர் அந்தக் காலத்திலேயே அங்கே படித்துக் கலைச் செல்வி பட்டம் பெற்றவர். எனவே அவரிடம் அது பற்றி விசாரித்தேன்.

வியாழன், 24 மே, 2012

நாக. மெ. சுப. வள்ளியப்ப செட்டியார். நூற்றாண்டு விழா

இன்றோடு 100 ஆண்டுகள் !

 ”உழைப்பே உயர்வு தரும்!” என எங்களுக்கு சொல்லித் தந்த தந்தையே . . .

 6 புத்தகங்கள் எழுதிவிட்டேன் !  50,000 பிரதிகள் விற்றுவிட்டன. 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள்;

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

நகரத்தார் திருமணங்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன.. முன்பெல்லாம் 7 நாள் நடந்த திருமணங்கள் 5 நாட்களாகி பின் 3 நாட்களாகி தற்போது இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன. அலமூஸ் குரூப்ஸ் என்று சின்னத்திரை நிகழ்சிகளுக்கு வீடியோ எக்விப்மெண்ட்ஸ் சப்ளை செய்யும் திரு வெங்கடாசலம் செட்டியாரின் இரண்டாவது மகனின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
Related Posts Plugin for WordPress, Blogger...