எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 25 செப்டம்பர், 2013

கருமுத்துக் கண்ணன்..

கருமுத்து வழிவந்த
திரு முத்து கண்ணன்..
பெருமுத்தாய் விளைந்திருக்கும்
அரு முத்து மன்னன்.

தக்காரைத் தக்காராய்க்
கொண்டாள் மீனாக்ஷி.
தக்கபடி பணிபுரிவார்
கரு முத்து மாட்சி..


பொறியியலைப் பட்டறிவைப்
பொதுஜனத்துக்கூட்டி
பொதுச்சேவை புரிவது
பரம்பரையாய்க் காட்சி.

கல்வியும் தெய்வத் தொண்டும்
கருமுத்தின் கண்கள்..
களிப்போடு கண்காக்கும்
கண்ணனிவன் வாழ்க.

தியாகராஜர் பேர் சொன்னால்
தமிழ் மொழியும் அமிழ்தாம்.
தக்காரின் பேரனும்
தமிழமிழ்தாய் வாழ்க..


டிஸ்கி:- அமீரகத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை புரிந்திருந்த கருமுத்துக் கண்ணன் அவர்களை வரவேற்க என் சகோதரன் மெய்யப்பன் சபாரெத்தினம் கேட்டதற்காக எழுதியது.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...