எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 செப்டம்பர், 2013

சாட்டர்டே ஜாலி கார்னர் . லலிதா முரளியின் ஊட்டி வரை உறவு.

லலிதா முரளியைத் தெரியாதவங்க ஃபேஸ்புக்கில இருக்க முடியாது.

தெரியாதவங்களுக்கு.. சூரியக் கதிர், இவள் புதியவள், புதிய தலைமுறை ஆகியவற்றில் இவங்களோட கட்டுரைகளும், குங்குமம் தோழியில் முக நூல் ஸ்டேடஸ்களும் வெளியாகி இருக்கின்றன. என்னோட செல்லத் தங்கையில் இவரும் ஒருவர்.

அவங்ககிட்ட ஒரு கேள்வி.

உங்களுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது யார். எப்போ?


இதுக்கு அவங்களோட பதில் :- 

சாப்பாடு ஊட்டினது நினைவு தெரிஞ்சப்போ முரளி..கல்யாணத்துல..

தெரியாதப்போன்ன்னா அப்பா ஊட்டினாரு..

கல்யாணத்துல சாப்பிடும் போது மனைவிக்கு கணவனும் கணவனுக்கு மனைவியும் ஊட்டணும்..அதுல நா முரளிக்கு ஜிலேபி ஊட்டினேன்...பாதி சாப்பிட்டு தர சொன்னாங்க...ஆனா அந்த மனுசன் ஜிலேபிய நா வாயில வெக்கிறதுக்குள்ள லபக்குனு பிடுங்கி கையோட கடிச்சுட்டார்..:௦)

அவர் எனக்கு லட்டு குடுத்தார்..பிச்சு குடுத்தார் கையில..எனக்கு ஒரே வெக்கமா இருந்துச்சு..ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ஊட்டி விடணும் சொன்னவுடனே அழகா என் மூஞ்சிய திருப்பி தாவாக்கட்டய பிடிச்சு கொஞ்ச கொஞ்சமா ஊட்டினார் நான் சாப்பிடும் வரை டைம் கொடுத்து...எனக்கு ரொம்ப பிடிச்ச நிகழ்ச்சி இது.
 
--- ஹாஹாஹா  . உங்க ”ஊட்டி(விட்ட) வரை உறவை” ப்  பகிர்ந்து எங்க சாட்டர்டேயை ஜாலிடே ஆக்கினதுக்கு நன்றி  லலிதா முரளி.

10 கருத்துகள்:

 1. ஊட்டி வரை உறவு .ஒரு சின்ன செய்தியை இதைவிட கவித்துவமாக வேறு யாராலும் தலைப்பிட்டு வழங்கியிருக்க முடியாது தேனம்மை வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. அழகா சொல்லியிருக்காங்க... அவங்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நன்றி பாலா

  நன்றி லல்லி

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 5. அக்கா .. ரொம்ப அழகா அவங்க பாணியிலே சொல்லிருக்காங்க ..சூப்பர்..!

  பதிலளிநீக்கு
 6. அழகான அன்பின் பயணம் ..சூப்பர்

  பதிலளிநீக்கு
 7. லலிதா , முரளி ஊட்டி விட்டதை இவ்வளவு ரசிச்சு ஞாபகமாய் சொல்லியிருக்கீங்க... எனக்கெல்லாம் பதட்டத்தில என்ன சாப்பிட்டோம்னு ஞாபகம் இல்லை.. ஆனா ஒரே கூல்டிரிங்ஸ்ஸை ரெண்டு பேரும் குடித்தோம்....

  பதிலளிநீக்கு
 8. லலிதா முரளி??? ம்ஹூம், எனக்குத் தெரியாதவங்க இவங்க. :) ஆனாலும் ஊட்டி வரை உறவு நல்லாவே இருக்கு. :)

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...