ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

KALARASA. கலாரசா..கர்நாடகக் கலைஞர்களின் ஓவியங்கள். சிற்பங்கள்.

”கலாரசா.”  நிஜமாவே நல்ல எக்ஸ்பீரியன்ஸ். “ கலாரசா “. பெயிண்டிங்ஸ், சிற்பங்கள். அசத்தல்.

கர்நாடகக் கலைஞர்கள் 71 பேரின் படைப்புக்கள். தொலைந்து போய் விடுவோம்போல்.


சைக்கிள் செயினைக்கூட சிற்பமாக மாற்றி இருக்கிறார் ஒரு கலைஞர். காமதேனு 1. 2, 3, HOLY COW பிடித்திருந்தது. நரசிம்மா, மெடிடேஷன் ஓவியங்களும், புத்தா சிலையும் அழகு.

3 டி எஃபெக்ட் ஓவியங்களும், பின்புலத்தில் வெளிச்சத்தோடு மின்னும் கண்ணாடி ஓவியங்களும் அழகு. அக்ரிலிக், ஆயில் என பல்வேறு வகையில் ஓவியங்கள்.

ரகு, சங்கர், மஞ்சு ஹாசன், மஞ்சுநாத் , ஹரி, மாவிலங்கார் , ரூபேஷ் ஓவியங்கள் சிறப்பு. ஸ்ரீனியின் மெட்டல் சிலைகளும் அழகு.

யதார்த்தவாழ்க்கையை டே ட்ரீமிங் என்ற வகையில் ஓவியமாக மிடில் க்ளாஸ் குடும்பத்தையும் வெளிப்புறத்தில் பட்டங்கள் பறக்க மாடமாளிகைகளைக் கனவு காண்பதுமான ஓவியம் அட்டகாசம். பெருவிரல் ரேகையை மட்டும் கொண்டு வரையப்பட்டதான ஓவியம், இயற்கையை நாம் எவ்வளவு சீரழிக்கிறோம் என்பதான ஓவியம் எல்லாம் நச்சென்று இருந்தது.


ஸ்கை ஸ்க்ராப்பர்ஸ் என்ற தலைப்பில் கட்டிடங்கள் நம்மை ஆக்கிரமிப்பத்தான ஓவியமே ஒருவரின் தீமாக இருந்தது. பென்சில் ஸ்ட்ரோக்ஸில் ஒரே கட்டிடங்கள் மட்டுமே ஓவியம் முழுமைக்கும். பெத்தனஹல்லியைக் கடந்தாற்போல் இருந்தது.


இரண்டு சிவப்பு இதழ்கள் மட்டுமே கொண்ட ஓவியத்தை ஒருவர் வரைந்திருந்தார். அதன் மையக் கரு இரண்டு இதழ் மலர். அது காம்போடு சேர்ந்து கிளியாகவும் உருப்பெற்றிருந்தது இன்னொரு ஓவியத்தில் மையத்தில் நீலம் காமத்தை உருவகிப்பதாக இருந்தது. 


ஒரு பாலீதீன் பைக்குள்  மனிதனும் அவனுள் கட்டிடங்களும் வரையப்பட்டதான ஓவியமும் , ஒரு பூட்டினுள்ளே கடல் அலை மோதுவதும் 3 டி எஃபெக்டில் இருந்தது. இயற்கையை நாம் எவ்வளவு மாசுபடுத்துகிறோம். பாழாக்குகிறோம் என்பதை நச்சென்று அறைவதைப் போலப் பல ஓவியங்கள் இருந்தன.


மெட்டல்களில் ஒரு நாயின் மேல் மொத்தக் குடும்பமும் பயணிப்பது, ஆட்டோ ரிக்‌ஷா, சைக்கிள் போன்ற சிற்பங்களும் இருந்தன.


செதில்களும் இறகுகளுமே ஒரு ஓவியத்தின் மையப் பொருளாக இருந்தது. ஓவியர்கள் மனிதர்களின் மல்டிபிள் பர்சனாலிட்டியை விளக்குவது போல் இருந்தது. ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியின் பிம்பத்தைச் சுட்டுவதாகவும் சில ஓவியங்கள்.


மிகப்பெரும் அலுவலகங்களில் வைக்கப்படவேண்டிய ஓவியங்கள் அவை. நீண்ட தூரத்திலிருந்து பார்க்கும்போதுதான் அதன் அழகு இன்னும் பிரமாதமாக வெளிப்படும்.


சித்திரபுத்திரன், அனு டெபி ஆகியோரின் லஸ்ட் ஓவியங்களும் இருந்தன. டெத் பெட் அண்ட் க்ளோசட் போன்ற சிற்பம்/ கைவினை பொருட்களும் இருந்தன. ( ஒருவேளை நமக்கு ரசனைக்குறைவோ என்னவோ ).

விலை சுமார் 5000 லேருந்து 2, 50, 000 வரை. நாம பார்க்கத்தானே போனோம். கலா ரசனைங்க..

ஃபோட்டோ எடுக்கக்கூட விடவில்லை. எனவே எண்ட்ரன்ஸை எடுத்தேன். டைம் கிடைச்சா போய்ப் பாருங்க.. 100 புத்தகங்களை திடீர்னு புரட்டிய அனுபவம் கிடைக்கும்.

ஆங். இடத்தைச் சொல்ல விட்டுட்டேனே. 6TH FLOOR, HIGH STREET BUILDING, 11 TH MAIN, JAYANAGAR, 4 TH BLOCK, BANGALURU.1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...