எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 செப்டம்பர், 2013

டிப்ஸ் 25. (1).

1. கடைகளில் வாங்கி அருந்தும் குளிர்பானங்களை விட வீட்டிலேயே செய்து அருந்தும் பழச்சாறுகள் நல்லது. அரைப்பழமான எலுமிச்சையில் ஜூஸ் செய்து ஒரு சிட்டிகை உப்பு, 2 ஸ்பூன் சீனி சேர்த்து அருந்திப் பாருங்கள். சுவையாக இருக்கும்.

2. கீரைவகைகளை சமைக்கும் போது பச்சை மாறாமல் சமைத்தால் நல்ல சத்து. மூடி போட்டு சிம்மில் வேகவைத்தால் ஓரளவு பச்சையாக வேகும். அதிகம் வேகவிடாமல் முக்கால் வேக்காட்டில் இறக்கினால் சுவையாக இருக்கும்.

3. ஃப்ரிட்ஜை வாரம் ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறை அனைத்துப் பொருட்களையும் வெளியே எடுத்து சுத்தம் செய்ய வேண்டும். மாவு., தயிர் போன்றவற்றை அவ்வப்போது சிறிய பாத்திரங்களில் போட்டு டைட்டாக மூடினால் ஃப்ரிட்ஜில் புளித்த வாசம் வராது. ஒரு கப்பில் கடுகும் தண்ணீரும் போட்டு ப்ரிஜ்ஜில் வைத்தால் கெட்ட வாடை இருக்காது.


4. ஹெல்மேட் போடுபவர்களுக்கு வேர்க்காமலிருக்க சிறிய காட்டன் அல்லது பனியன் துணியிலான தொப்பிகளை உபயோகப்படுத்தலாம்.

5. தினமும் இரவிலாவது தலையில் சிறிது தேங்காய் எண்ணெய் வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் , சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும்.இது கண்களுக்கும் முடிக்கும் நல்லது.

6. மிச்சமான ஷாம்பூ பாட்டில்களில் நீர் ஊற்றி கழுவி வாஷிங் மெஷினில் துணி போடும்போது ஊற்றலாம். துணிகளும் மணமாய் இருக்கும்.

7. தீபாவளி சமயங்களில் வீட்டில் மிஞ்சும் பலகாரங்களை வேலை செய்பவருக்கோ, ஆனாதை ஆஸ்ரமங்களுக்கோ அன்றே கொடுத்து விட வேண்டும். மிச்சமாகி பல நாள் கழித்து கொடுத்தால் அவர்களுக்கும் உபாதைதான்.

8. ஜீன்ஸ் பாண்ட்களில் வரும் பில் அட்டைகளை புக் மார்க்காக உபயோகப்படுத்தலாம்.

9. டி,வி, கம்யூட்டர், கண்ணாடி , மூக்குக் கண்ணாடி போன்றவற்றை அவ்வப்போது நன்கு துடைத்து வைக்க வேண்டும், தூசியோடு பார்ப்பதால் பார்வை சிரமப்படும்.

10. கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினாவை வெங்காயத்தை வதக்கி உப்பு, புளி ,மிளகாயோடு அடிக்கடி துவையல் செய்து சாப்பிட்டால் இரும்புச் சத்து. முடியும் செழித்து வளரும்.

11. சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் பினாயில், ஆசிட், ப்ளீச்சிங் பவுடர் போன்றவற்றை தரையோரமாக வைக்காமல். குழந்தைக்கு எட்டாத இடங்களில் வைக்க வேண்டும்.

12. அலமாரியில் துணிகளுக்கிடையில் வசம்பு போட்டு வைக்கலாம். நாப்தலின் உருண்டைகள் வைத்தால் சின்ன துணியில் பொட்டலமாக கட்டி துணியில் படாமல் போட்டு வைக்கவும். சில சமயம் பட்டுப் புடவைகளில் இவை கறை ஏற்படுத்தும்.

13. ஷாப்பிங் மால்களுக்கு சென்று தேவையற்றவைகளை வாங்கி வீட்டில் உபயோகப்படுத்தாமல் போட்டு கெடுப்பதை விட தேவையானவைகளை ஒரு லிஸ்டில் எழுதி சென்று வாங்கினால் எல்லாப் பொருளும் உபயோகப்படும்.

14. ஏசி வாங்கும்போது உங்கள் வீட்டில் சிங்கிள் பேஸா அல்லது த்ரீ பேஸா என்பதைப் பொறுத்து ஸ்டெபிலைசர் வாங்குங்கள். இல்லாவிட்டால் அடிக்கடி ஏசி ரிப்பேராகி  நிறைய செலவு வைக்கும்.

15. பனைவெல்லம் போட்டு பால் காய்ச்சி அருந்தினால் தொண்டைக்கும்,  நல்லது. இருமலையும் சரியாக்கும்.

16. நீர்க்கடுப்பு வந்தால் இடது கால் கட்டை விரல் நகத்தில் மட்டும் சிறிது சுண்ணாம்பு வைத்துவிட்டு நிறைய தண்ணீரும் அருந்தினால் குணம் பிறக்கும்.

17. ஜீனி போடுவதற்கு பதிலாக வெல்லம் போட்டு பாயாசம் அல்லது இனிப்புகள் செய்யலாம். இரத்த விருத்தி கொடுக்கும்.

18. சிறுமலைப்பழம், காரட், பீட்ரூட், ஆரஞ்ச், கீரை வகைகள் ரத்த விருத்தி கொடுக்கும்.

19. பாடி ஸ்ப்ரே, செண்ட்கள் கடைசியில் மிச்சமாகும் போது  அதை துணி அலமாரியில் ஸ்ப்ரே செய்தால் மணமாக இருக்கும்.

20. தலையணை மெத்தைகளை மாதம் ஒருமுறையாவது வெய்யிலில் போட்டு எடுக்கவேண்டும்.

21. சுண்டை வத்தல், மணத்தக்காளி வத்தல் குழம்புகள் உடலுக்கு நல்லது.

22. ஆறு மாதத்துக்குமேல் உபயோகப்படுத்தாமல் ஒரு பொருள் வீட்டில் இருந்தால் அதை உபயோகப்படுத்தும் யாருக்காவது கொடுத்து விடலாம். அவ்வப்போது வீட்டில் தண்ணீர் பாட்டில், பேப்பர், புத்தகம், போன்ற வேண்டாத குப்பை சேர்க்காமல் விலைக்குப் போட்டுவிடுவது கரப்பு பூச்சிகள் அடையாமல் தடுக்கும்.

23. செல்லப் பிராணிகள்வளர்ப்பவர்களுக்கு ஆஸ்த்துமா தொந்தரவு அதிகம் வரலாம். எல்லா இடத்திலும் அவற்றின் முடி உதிர்வதால் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இருக்கப் பழக்கலாம்.

24. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் தினமும் வீட்டில் செய்த ஸ்னாக்ஸ் சிறிது கொடுத்தனுப்பலாம். இதற்கு உருளை,  சேனை, வாழைக்காய் போன்ற சிப்ஸ்கள் செய்து வைக்கலாம்.

25, உருளைகளை  தோலுரித்து  வெந்நீரில் 3 நிமிடம் போட்டு எடுத்து சிப்ஸ் செய்தால் வெண்மையாக இருக்கும்.

டிஸ்கி:- இவள் புதியவளுக்காக எழுதியது. இதில் சில வெளியாகி உள்ளன. 


3 கருத்துகள்:

 1. அடேங்கப்பா... அனைத்தும் பயனுள்ளவை...

  நன்றி சகோதரி...

  பதிலளிநீக்கு
 2. டிப்ஸ் அனைத்தும் பயனுள்ளவை. ஏழாவது டிப்ஸ் மிகவும் கவர்ந்தது. பகிர்வுக்கு நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 3. நன்றி தனபாலன்

  நன்றி கீதமஞ்சரி

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...