எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 செப்டம்பர், 2013

விருப்பமின்மை..

விருப்பமின்மை.:-
***************************
கப்பல் செய்து
தருகிறீர்கள்
கத்திக் கப்பலென.
நெருப்பு வளையத்தில் குதிக்கும்
சித்திரக்காரப் பையனை
குழந்தைகளோடு அமர்ந்து
பார்க்கிறீர்கள்.
சமர்த்தாய் இருந்தால்
அதுவும் இதுவும் தருவதாக
பேரம் பேசுகிறீர்கள்.
பின்னாளில் வன்முறையாளன்.,
மனித வெடிகுண்டு.,
கையூட்டு வாங்கினான் என
கம்பி் வண்டிகளில்
முகம் மூடிச் செல்லும்போது
கண்ணீர் வடிக்கிறீர்கள்.
வெட்ட முடியாத அளவு
வளர்த்தது நீங்கள்தானென
ஒருபோதும் உணரவிரும்பாமல்.

4 கருத்துகள்:

 1. அன்பின் தேனம்மை - கவிதை அருமை - வெட்ட முடியாத அளவு வளர்த்தது நாமல்ல - வளர்ந்ததை வெட்டாதது வேண்டுமானால் நாமாக இருக்கலாம் - என்ன செய்வது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 2. நன்றி தனபாலன் சகோ

  நன்றி சீனா சார்.ஆம் உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...