எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
குறள் சூடி உமையாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறள் சூடி உமையாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 மே, 2014

குறள் சூடி உமையாள்..!!!



குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல்  கேளாதவர்.

இங்கே குறள் இனிது எனலாம். 3 வயதுப் பெண் குழந்தை ஒரு உபன்யாசகராக, சொற்பொழிவாளராக இருக்க முடியுமா.. அந்த அதிசயத்தைக் காண நேர்ந்தது துபாய்க்கு  ஒரு குடும்ப விழாவுக்காகச் சென்றிருந்தபோது.

ஒரு 3 வயதுக் குழந்தை குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தது. அவளை அறிமுகப்படுத்தி மேடையேற்றியபோது மிக அழகாக மேடைக்கூச்சமில்லாமல் மேடையேறி மைக்கைப் பிடித்துப் பேசினாள்.