எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இசைகுடிமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசைகுடிமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஜூன், 2017

மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.


716*மொய்ப்பண ஏடு திருமணம் முடிந்ததும் உபயோகப்படுத்துவது. 717* இசை குடிமானம் என்பது திருமணப் பதிவு. இன்றைக்கு ரெஜிஸ்டர் செய்துகொள்வது போன்றது.

இது இரண்டும் கட்டாயம் திருமணக் கணக்கு வழக்குகள் நிர்வகிக்கப்படும் கைப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். திருமணத்தின் போது பயன்படும்.

இக் 718* கைப்பெட்டியில் மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, விபூதிப் பிரசாதம், 719* மாமப் பட்டு, 720* பட்டில் முடியும் வெள்ளிக் காசு, 40 பக்க நோட்டு, பேனாக்கள், பென்சில், ஸ்டாப்ளர், பின்கள், பணம் வைக்கும் கவர், மொய்ப்பண ஏடு, இசை குடிமானம், திருமணச் செலவுக்கான பணம் வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருக்கும். !

இவை இரண்டையும் வலையப்பட்டியைச் சேர்ந்த பழ ஜெயங்கொண்டான் செட்டியார் என்பவர் தம் இல்லத் திருமணத்தின் போது அன்பளிப்பாக அளித்திருக்கிறார்.

வெள்ளி, 25 நவம்பர், 2016

ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

546.ஏட்டுப் பள்ளிக்கூடம் , திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுலம்  என்ற சொற்களைக் கேட்டிருப்பீர்கள். அமராவதி புதூர் என்ற ஊரிலும் திருப்பளாய்த்துறை என்ற ஊரிலும் குருகுலக் கல்வி முறை இருந்தது பற்றி என் பள்ளிப் பருவத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதென்ன ஏட்டுப் பள்ளிக்கூடம். அந்தக் காலத்தில் குழந்தைகளை முதன் முதலில் விஜயதசமி அன்றுதான் பள்ளியில் சேர்ப்பார்கள். இதற்கு சூள்பிடி என்றும் பெயருண்டு. 


///குழந்தைகளுக்கு வரும் முதல் பிறந்தநாளை புதுமை எனக் கொண்டாடுகிறார்கள். முதன் முதல் பள்ளி செல்லும் போது பிள்ளைகளை கார்த்திகைத் திருநாளில் வீடுகளில் வாழை நட்டு  விளக்கேற்றி விநாயகர் கோயிலுக்கோ, சிவாலயத்துக்கோ குதிரை ஏற்றிச் சென்று சோதி தரிசனம் செய்து வரச் செய்கிறார்கள். இதை சூள்பிடி ( சூப்பிடி என்று இப்போது பேச்சு வழக்கு மருவி விட்டது ) என்ற அணையாத லாந்தர் விளக்குகள், மெழுகுதிரி விளக்குகளைக் குதிரை முன் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவார்கள்.////

மாணவர்கள் ஆசிரியருக்குக் குருதட்சணை ( தேங்காய் , பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தட்சணை ) சமர்ப்பித்துக்  கல்வி கற்பிக்க வேண்டி வணங்கி நிற்பார்கள். அப்போது பரப்பிய மஞ்சள் அரிசியில் அல்லது மணலில் கூட  ஆசிரியர் மாணவர்களின் கையைப் பிடித்து ஆட்காட்டிவிரலால்“அரி ஓம்” என எழுத வைப்பாராம். அதன் பின் 547.* ஏட்டில் எழுத்தாணி வைத்து எழுதக் கற்பிப்பார்களாம்.


Related Posts Plugin for WordPress, Blogger...